அண்மைய செய்திகள்

recent
-

தகவலறியும் சட்டமூலம் விரைவில் அமுல்படுத்தப்படும்...


தகவல் அறியும் சட்ட மூலம் தொடர் பான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதுடன் ஊடகவியலாளர்களது நலன்புரி நடவடிக்கைகளையும் அதி கரித்து துரித கெதியில் பெற்றுக் கொடுக்க உள்ளதாக ஊடக அமைச்சரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவரு மான கயந்த கருணாதிலக்க தெரி வித்தார்.

நேற்று (11) தனது அமைச்சில் பதவியேற்ற பின் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டார். மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கு விஜ யம் செய்து மகாநாயக்க தேரர்களி டம் நல்லாட்சி பெற்ற பின் அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

நான் ஊடக அமைச்சைப் பொறுப்பேற்ற காலத்தில் இலங்கையில் ஊடகத்துறை மிகவும் நகைப்புக்குரிய ஒன்றாக இருந்தது. ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளில் நாம் மிகவும் பின் தள்ளப்பட்ட ஒரு ஸ்தானத்தில் இருந்தோம். ஊடக சுதந்திரம் தொடர்பாக இலங்கையின் நிலை அன்று கவலையளிப்பதாக இருந்தது. என்னால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் காரணமாக நூறுநாள் வேலைத்திட்டம் உட்பட கடந்த சில மாதங்களில் ஊடகத்துறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் ஊடக சுதந்திரம் நாட்டில் இருக்கவில்லை.

பல ஊடகவியலாளர்கள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டனர். சில ஊடக நிறுவனங்கள் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. ஊடகவியலாளர்கள் பலரது கை, கால்கள் முறிக்கப்பட்டன. சில ஊடகவியலாளர்களது குடும்ப அங்கத் தவர்கள் அச்சுறுத்தப்பட்டனர். பல்வேறு தொல்லைகள் காரணமாக சில ஊடகவி யலாளர்கள் நாட்டை விட்டே வெளி யேறினர்.

முன்னர் அரச ஊடகங்கள் பொது மக்களிடமிருந்து தூரமாக்கப்பட்டி ருந்தது. அரசுக்குத் தேவையானவற்றை மட்டும் வெளியிடும் ஊதுகுழலாக இருந்தது. இன்று நிலைமையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரச ஊடகம் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக உள்ளது. புதிய கலாசாரம் ஒன்றுக்கு வித்திட்டுள்ளது. அது சுதந் திரமான காத்திரமான ஒரு கலாசார மாகும்.

ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம் ஒன்றை ஏற்படுத்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் 1500 வீடுகளுக்கான அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த வாரம் ஆரம்பமாகும் போது வரிச்சலுகையில் மோட்டார் சைக்கிள் வழங்கவும் உள் ளேன். இதற்கு 3000 விண்ணப்பங்கள் வரை கிடைக்கப்பெற்றுள்ளன.

எதிர்காலத்தில் பிரதேச ஊடகவியலாளர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன். மாவட்ட மட்டத்தில் பிரதேச ஊடகவியலாளர்களினதும் பிரச்சினைகளை செவிமடுத்து நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

அண்மையில் யானைத் தாக்குதல் காரணமாக மின்னேரிய பகுதியில் ஒரு ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி அறிவீர்கள். அவர் வாடகை வீட் டில் வசிக்கிறார். அவரின் மனைவிக்கு தொழில் கிடையாது. இந்நிலையில் அவருக்கு உதவிகளை செய்யும்படி சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு உத்தரவிட்டேன்.

தற்காலிக உதவிகளை வழங்குவதை விட நிரந்தர அல்லது நீண்டகாலம் பயனளிக்கக்கூடிய வகையில் உதவிகளைச் செய்வதே பொருத்தம். அந்த வகையில் அப்படியான ஒரு விடயம் பற்றியும் சிந்திக்கப்பட்டு வருகிறது.

பிரதேச ஊடகவியலாளர்களது பிரச்சி னைகளையும் பிரதேச ரீதியில் கேட்டு தீர்க்கவுள்ளோம்.

ஊடக அமைச்சர் என்ற வகையில் என்னை எப்பொழுதும் ஊடக வியலாளர் கள் தொடர்பு கொள்ள முடியும்.

போதிய பயிற்சி இன்மை காரணமாக சிலர் தமது செய்திகளை அனுப்பும் போது சில குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன. எனவே ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி அதனை சீராக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஊடகவியலாளர்களின் ஓய்வூதியம் ஒன்று பற்றி உரிய நிறுவனங்களுடன் பேச உள்ளேன். எதிர்காலத்தில் அது தீர்த்து வைக்கப்படும்.

பிரதேச மட்டத்தில் ஊடகவியலாளர் களுக்கு வீடுகளை வழங்குவது பற்றி கலந்துரையாடப்படவுள்ளது. எம்மால் தரக்கூடிய அனைத்தையும் ஊடகவிய லாளர்களுக்குப் பெற்றுத்தருவதே எனது இலக்காகும்.

தகவல் அறியும் சட்டமூலம் நூறு நாள் ஆட்சியில் அமுல்படுத்த முடியாமல் போனது. எமக்கு கிடைத்த கருத்துக்களை பகுப்பாய்வு செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு அமைச் சுகளுடன் இணைந்து கருத்துப் பரிமாற வேண்டியுள்ளது. எனவே கூடிய விரை வில் அதனை நிறைவேற்ற உள்ளோம்.

ஊடகவியலாளர்களுக்கான அரச ஆள டையாள அட்டை வழங்கும் முறையில் சில மாற்றங்களை எதிர்காலத்தில் ஏற் படுத்தவுள்ளோம் என்றார்.

தகவலறியும் சட்டமூலம் விரைவில் அமுல்படுத்தப்படும்... Reviewed by Author on September 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.