அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அகதிகள் மறுவாழ்வு கருத்தரங்கில் பங்கேற்ற முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் மீது கடும் தாக்குதல்

சென்னை : முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை செருப்பால் அடித்த நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து ெகாண்டனர். இந்த கூட்டத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  எனினும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் விழாவை நடத்த முடிவு செய்தனர். எனவே, விழா நடந்த மியூசிக் அகாடமி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனைவரும் பலத்த சோதனைகளுக்கு பின்னரே விழா நடந்த அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

விழா நிறைவு பெற்றதும், முக்கிய பிரமுகர்கள் ஒவ்ெவாருவராக அரங்கில் இருந்து வெளியே வந்தனர். அப்போது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும் விழா அரங்கை விட்டு வெளியேறி தனது காரில் செல்வதற்கு வந்தார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த வாலிபர் ஒருவர், தனது செருப்பை கழற்றி முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத எம்.கே. நாராயணனின் நிலைத்தடுமாறி கீழே விழப்ேபானார். அதற்குள் அவர் சுதாரித்து கொண்டதால் கீழே விழவில்லை. பலமாக தாக்கப்பட்டதால் எம்.கே.நாராயணின் தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.

இதை கண்டு பாதுகாப்புகாக நின்றிருந்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தாக்குதல் நடத்திய வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு செருப்படி விழுந்த சம்பவம் சென்னையில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய கமிஷனருக்கு சிக்கல்

தமிழ் அமைப்பினர் நிகழ்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க கூடும்  என்று உளவு பிரிவினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால். பாதுகாப்பு பணியை முறையாக மேற்கொள்ளாமல் போலீசார் கோட்டை விட்டதால் வாலிபர் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளார். சென்னையின் முன்னாள் கமிஷனராக இருந்த திரிபாதி சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை தாக்குதல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மீதே தாக்குதல் நடத்திருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கை அகதிகள் மறுவாழ்வு கருத்தரங்கில் பங்கேற்ற முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் மீது கடும் தாக்குதல் Reviewed by NEWMANNAR on November 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.