அண்மைய செய்திகள்

recent
-

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: 1000 பள்ளிகளை மூடிய நிர்வாகம்...


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பள்ளிகள் அனைத்தும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை அடுத்து மூடப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் பகுதிகளில் உள்ள பல பள்ளிகளுக்கு தீவிரவாதிகள் மின்ன்ஞசல் வழியாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து அங்குள்ள ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அனைத்து பள்ளி பேருந்துகளும் பள்ளிகளுக்கு உடனே திரும்பி வரவேண்டும் என்றும், பெற்றோர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தகவலறிந்து விரைந்து வந்த விசாரணை அதிகாரிகள் பல மணி நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.

இருப்பினும் தீவிரவாதிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் நடைபெறும் சம்பவத்தினை உன்னிப்பாக கவனிக்க கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் சுமார் ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டதால் 640,000 பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் சான் பெர்னார்டினோவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தீவிரவாத அச்சுறுத்தல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: 1000 பள்ளிகளை மூடிய நிர்வாகம்... Reviewed by Author on December 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.