அண்மைய செய்திகள்

recent
-

இது­வரை கண்­ட­றி­யப்­பட்­ட­தி­லேயே மிகவும் பெரிய சூரிய மண்­டலம் கண்­டு­பி­டிப்பு...


இது­வரை கண்­ட­றி­யப்­பட்­ட­தி­லேயே மிகவும் பெரிய சூரிய மண்­ட­ல­மொன்றை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறி­வித்­துள்­ளனர்.

அந்த மண்­ட­லத்­தி­லுள்ள மிகவும் பெரிய கோள் தனது நட்­சத்­தி­ரத்தை வலம் வரு­வ­தற்கு சுமார் ஒரு மில்­லியன் வரு­டங்­களை எடுத்துக்கொள்­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வாயு வடி­வான இந்தக் கோள் எமது சூரிய மண்­ட­லத்­தி­லி­ருந்து ஒரு திறில்­லியன் கிலோ­மீற்­றர்­க­ளுக்கு அப்பால் உள்­ளது.

எமது சூரி­யனை புளூட்டோ கிரகம் வலம் வரும் தூரத்­துடன் ஒப்­பி­டு­கையில் 140 மடங்கு அதி­க­மான தூரத்தில் அந்தக் கோள் தனது தாய் நட்­சத்­தி­ரத்தை சுற்றி வலம் வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

2 மாஸ் ஜே 2126 – -8140 என பெயர் சூட்­டப்­பட்­டுள்ள இந்தக் கோள் வியாழக்கிர­கத்தை விடவும் 12 முதல் 15 மடங்கு திணிவுடைய­தாகும்.

தனது தாய் நட்­சத்­தி­ரத்­தி­லி­ருந்து இவ்­வ­ளவு தொலைவில் இவ்­வா­றான கோள் ஒன்று வலம் வரு­வதைக் கண்­ட­றிந்து ஆச்­ச­ரி­ய­ம­டை­வ­தாக இந்த ஆய்வில் பங்­கேற்ற அவுஸ்­தி­ரே­லிய தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த கலா­நிதி சிமொன் முர்பி தெரிவித்தார்.

அந்த சூரிய மண்டலமானது நமது சூரிய மண்டலம் உருவான முறையில் உருவாகியிருக்க வில்லை என அவர் கூறினார்.

இது­வரை கண்­ட­றி­யப்­பட்­ட­தி­லேயே மிகவும் பெரிய சூரிய மண்­டலம் கண்­டு­பி­டிப்பு... Reviewed by Author on January 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.