அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் மரணத்துக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் உயிருக்கு போராடும் இலங்கை மாணவி

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில் உள்ள பெண் ஒருவர் தனது உயிரை காப்பாற்ற (குருத்தணு) Stem தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியாவின் லண்டனில் உள்ள வோல்தம்ஸ்டோ (Walthamstow) பகுதியை சேர்ந்தவர் வித்யா அல்போன்ஸ்.
இலங்கையை சேர்ந்த இவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கண் தொடர்பாக படித்து வருகிறார்.

காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரது இரத்தத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர் லூக்கிமியா என்னும் இரத்த புற்றுநோயால் வித்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக உள்ளதால் ஏற்படும் இந்நோய் இரத்த அணுக்கள் உருவாகும் இடத்தில் ஏற்படுவதாகும்.

மேலும் சில மாதங்களில் அவர் இறந்துவிடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வித்யா அதிர்ச்சியடைந்துள்ளார்.

சில வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யா மேல் சிகிச்சைக்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உடனடியாக குருத்து அணு மாற்று சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது சகோதரரின் குருத்து அணுவை மருத்துவர்கள் சோதித்ததில் 50 சதவீதம் மட்டுமே ஒத்துப்போனது.

எனவே அவருக்கு குருத்து அணு தானம் பெறுவதற்காக குருத்தணு தானம் தொடர்பான விழிப்புணர்வை அவரது பெற்றோர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வித்யா கூறுகையில், ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் எனக்கு ஆதரவாக குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். எனக்கு நம்பிக்கையாக உள்ளது.

இந்த விழிப்புணர்வு மூலம் எனக்கு நன்மை ஏற்படவில்லை என்றாலும் கண்டிப்பாக யாருக்காவுது நன்மை ஏற்படும் என்று  தெரிவித்துள்ளார்.

To sign up to the donor list go to www.anthonynolan.org if you’re 16-30.

http://www.guardian-series.co.uk/author/profile/42421.Douglas_Patient/

WEB Student urgently looking for stem donor within two months to save her life


பிரித்தானியாவில் மரணத்துக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் உயிருக்கு போராடும் இலங்கை மாணவி Reviewed by NEWMANNAR on February 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.