அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாவற்கட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக குளம்....மக்களை பாதிக்கும்...



தங்கள் குடியிருப்பு மக்களை பாதிக்கும் விதத்தில் அபிவிருத்தி திட்டத்ததை முன்னெடுக்க வேண்டாம் என சாவற்கட்டு கிராம அபிவிருத்தி சங்கம் வேண்டுகோள்.  மன்னார் சாவற்கட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக குளம் ஒன்றை புணரமைக்கும் பாணியில் ஒரு நிறுவனம் இறங்கியிருப்பதால் இது அவ் பகுதிவாழ் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கப்படும் எனவும் நீண்ட காலமாக குடியிருக்கும் இவ் மக்களின் காணிகள் கட்டிடங்களை இழக்க வேண்டிய நிலை உருவாகுமானால் இவ் அபிவிருத்தி வேளை திட்டத்தை கைவிடுமாறு இவ் பகுதியிலுள்ள அட்டாளைக்குளத்தை சுற்றி வாழும் மக்கள் மன்னார் பிரதேச செயலாளருக்கும் சாவற்கட்டு கிராம அபிவிருத்திச் சங்கமும் மன்னார் நகர சபை செயலாளர் ஆகியோருக்கு அவசரக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
மன்னார் சாவற்கட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக குளம் ஒன்றை புணரமைக்கும் பாணியில் ஒரு நிறுவனம் இறங்கியிருப்பதை முன்னிட்டே இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலாருக்கு இவ் வாழ் மக்கள் எழுதியிருக்கும் மடலில் மன்னார் சாவக்கட்டு கிராமத்திலுள்ள அட்டாளைக்குளத்தை அண்டி சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.
இங்கு வாழும் மக்கள் சுவர்ணபூமி திட்ட உறுதிகளைக் கொண்டவர்களும் சிலர் தனிப்பட்ட சொந்த காணி உறுதிகளை கொண்டவர்களும் வேறு சிலர் அரசின் வருடாந்த உறுதிப்பத்திரத்தையும் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
இக்காலக்கட்டதில் நாங்கள் யுத்தம் காரணமாக பல இழப்புக்களை சந்தித்தபோதும் பின் மீள் குடியேறியபோது வீடுகள் மலசலக்கூடங்கள் மதில்கள் போன்ற கட்டுமானங்களை மேற்கொண்டு அங்கு தொடர்ந்து வாழ்ந்து வருகின்றோம்.
இந்த நிலையில் கடந்த வருடத்தில் யுனெஸ்கோ செயற்திட்டத்தின் கீழ் குளங்களை புனரமைக்கப்போகின்றோம் என தெரிவித்து மன்னார் சாவக்கட்டு கிராமத்திலுள்ள அட்டாளைக்குளத்தை புனரமைப்பதற்காக எமது வீட்டின் மலசலக்கூடம்இ மதில்கள் ஆகியவற்றை உடைக்க வேண்டும் என்றும் தேவைப்படும் காணிகள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கை எங்களுக்கு விடுக்கப்பட்டபோது அப்பொழுது மன்னார் பிரதேச செயலாளர் இவ் மக்களின் சொத்துகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாதவகையில் இவ் திட்டத்தை முன்னெடுக்கும்படி தெரிவித்திருந்தார்.
ஆனால் இவ்வாறு இருக்க யுனெஸ்கோ செயற்திட்ட மற்றும் மன்னார் நகர சபை ஊழியர்கள் தற்பொழுது இவ்வேளை திட்டத்தை முன்னெடுக்கும் நோக்குடன் அடாத்தாக வந்து எமது உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்பாட்டில் இறங்கியிருப்பது எமக்கு அதிதிருப்தியை உண்டபண்ணியுள்ளன.
அத்துடன் இப்பகுதியில் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் குடியிருப்பிற்கு குந்தகமாகி தேவையற்ற கலாச்சார சீரழிவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும் எனவும் இவர்கள் தங்கள் மடலில் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் சாவற்கட்டு கிராம அபிவிருத்தி சங்க வேண்டுகோளுக்கினங்கவே இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்களின் குடியிருப்புக்களை பாதிக்கும் வகையில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துமாறு எந்த கோரிக்கைகளையும் முன்னிலைப்படுத்தவில்லையெனவும் ஆகவே இவ்வாழ் மக்களை பாதிக்கும் விதத்தில் இவ் அட்டாளைக்குள அபிவிருத்தி செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என சாவற்கட்டு கிராம அபிவிருத்தி சங்கம் மன்னார் நகர சபை செயலாளருக்கு அவசரக் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.





மன்னார் சாவற்கட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக குளம்....மக்களை பாதிக்கும்... Reviewed by Author on March 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.