அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பை உடைக்கும் முயற்சி தமிழர் பலத்தைப் பாதிக்கும்

மே தினக் கொண்டாட்டங்கள் நாடு பூராகவும் நடந்துள்ளன. அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள் , தொழிலாளர் அமைப்புக்கள் தத்தம் சார்புடைய உழைப்பாளர்களுடன் மே தினத்தை அனுஷ்டித்தனர்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மே தினத்தை இணுவில்-மருதனார்மடம் உள்ளிட்ட பிரதேசத்தில் நடத்தி முடித்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் மே தின நிகழ்வைக் கொண்டாடியது. அப்போது ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருக்கவில்லை.

இன்று ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருக்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் மே தின நிகழ்வை கொண்டாடுகின்ற நோக்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்திருக்கவில்லை.

இது ஒருபுறம் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின கூட்டம் இணுவில்-மருதனார்மடத்தை உள்ளடக்கிய பிரதேசத்தில் நடத்தப்பட்டதற்கான காரணம் என்ன?
யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கக் கூடிய வன்னி நிலப்பரப்பில் கூட்டமைப்பின் மே தினக்கூட்டத்தை பேரெழுச்சியுடன் நடத்தாதது எதற்காக? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில்,

கடந்த பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது அவரின் தந்தையார் தர்மலிங்கத்தின் தேர்தல் தொகுதியான இணுவில், மருதனார்மடம் உடுவில், சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளாகும்.

எனவே சித்தார்த்தனின் வாக்கு வங்கியை எதிர்காலத்தில் உடைக்கும் நோக்குடனேயே கூட்டமைப்பின் தலைமை, இணுவில்-மருதனார்மடம் உள்ளிட்ட பிரதேசத்தில் தனது மே தினக் கொண்டாட்டத்தை நடத்தியது எனவும் இதனாலேயே இம் மே தினக் கூட்டத்தில் சித்தார்த்தன் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஆக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்காலப் போக்குகள் கூட்டமைப்பை உடைத்து தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகின்றதாக இருப்பதைக் காணமுடிகின்றது.

தமிழ் மக்களின் பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று நினைத்து தமிழ் மக்கள் வாக்களிக்க, அரசியல்வாதிகளோ தங்களின் எதிர்கால சுயநலத்தைக் கருத்தில் கொண்டு கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தமிழ் மக்களுக்கு பேராபத்தாக அமையும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்துகின்ற மே தினம் என்றால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நிச்சயம் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
இது தவிர வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மே தின நிகழ்வில் முன்னுரிமை வழ ங்கியிருக்க வேண்டும்.

ஆனால் இதைச் செய்யாமல் மே தின நிகழ்வை நடத்துவதென்பது பேரிழப்புகளைச் சந்தித்த தமிழி னத்துக்கு கூட்டமைப்புக்குள் இருக்கக் கூடிய ஒரு சிலர் செய்கின்ற மிகப்பெரும் துரோகத்தனம் என்றே கூற வேண்டும்.
கூட்டமைப்பை உடைக்கும் முயற்சி தமிழர் பலத்தைப் பாதிக்கும் Reviewed by NEWMANNAR on May 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.