அண்மைய செய்திகள்

recent
-

சுற்றுப்புறச் சூழலை மாசடைவிலிருந்து காப்பாற்ற வேண்டியவர்கள் இளைஞர்கள் வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி

சுற்றுப்புறச் சூழலை மாசடையச் செய்வதில் அதிகம் இளைஞர்கள்தான் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். அந்த இளைஞர்களுக்கு உதாரணமாக ஊன்றுகோலாக செயற்பட்டுள்ளனர். எம்.இமயவன் மற்றும் த.பிரதாபனின் விழிப்புணர்வு சாதனை முயற்சி என்றார் வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி.
நேற்று முன்தினம் அதிகாலை யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் இருந்து இளைஞர்களான ம.இமயவன் மற்றும் த.பிரதாபன் ஆகிய இளைஞர்கள் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல் தொடர்பிலான விழிப்புணர்வு சாதனை முயற்சியினை ஆரம்பித்தனர். அவர்களது திட்டமிடலின் பிரகாரம் ஒரே நாளில் ஆயிரத்து 320கிலோ மீற்றர் தூரத்தில் முழு இலங்கையையும் மோட்டார் சைக்கிளில் சுற்றி வலம் வருதல் என்பதாகும்.இச் சாதனை முயற்சியினை வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ம.தியாராஜா, ஆர்.இந்திரராஜா ஆகியோர் கொடியசைத்து ஆசீர்வதித்து ஆரம்பித்து வைத்தனர். குறிப்பிட்ட முறையில் தமது பயணத்தைத் தொடர்ந்த இளைஞர்கள் 40 முக்கால் மணி நேரத்தில் மீண்டும் யாழ்.நல்லூரை நேற்று இரவு 9.15 மணியளவில் வந்தடைந்தனர்.


இவர்கள் இருவரையும் வரவேற்க நல்லூர் ஆலய முன்றலில் நண்பர்கள் பலரும் காத்திருந்ததுடன் அவர்களை வடமாகாண சபை உறுப்பினர் பரம்சோதியும் வாழ்த்தி வரவேற்றார். வாழ்த்தி வரவேற்பதையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே நம் நாட்டிலும் சரி உலகிலும் சரி சுற்றுச் சூழல் மாசடைவினால் இயற்கை அழிவுகளும் பிறழ்வுகளும் பாதுகாப்பு இன்மையும் ஏற்படுகின்றன. அந்த வகையில் த.பிரதாபன், ம.இமயவன் ஆகிய இரு இளைஞர்களும் தங்களுடைய பயணத்தின் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கிட்டத்தட்ட ஆயிரம் கி.மீ மேல் பயணம் செய்து வந்தடைந்துள்ளனர். இவர்கள் இளைஞர்களாக இருக்கின்றனர். கூடுதலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பாக இளைஞர்கள் தான் மாசடைவதில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். இந்த இளைஞர்கள் தம் பயணம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நல்ல உதாரணமாக அமைவர்.இப்பயணம் எதிர்காலத்தில் தூய்மையான இலங்கையை அமைக்க ஊன்றுகோலாக அமையும் என நினைக்கின்றேன் என்றார்.
இப் பயணம் குறித்து ம.இமயவன் குறிப்பிடுகையில்,
குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியவில்லை. வில்பத்து நல்ல றோட் என்று நினைத்தேன். ஆனால் போனபின்தான் தெரியும் மணல் பாதை என்று. பிறகு இடையில் பைக் பிரச்சினையாகிவிட்டது.திருத்துவிட்டு புத்தளம் ஊடாக போனோம். போன இடங்களில் வரவேற்று மகிழ்ந்தனர் என்றார்.
த. பிரதாபன் குறிப்பிடுகையில்,
இலங்கையைச் சுற்றி வந்தால் என்ன என்று திட்டம் போட்டோம். ஒரு நாளில் வருவது என்று மைப் எடுத்து மணி நேரம் குறித்து காலை 9 மணிக்குள் வருவதாக இருந்தது. இரவு 9 இக்கு தான் வந்தோம்.பயணம் சுவாரஷ்யமாக இருந்தது. மன்னாரில் நண்பர் டானியல் வரவேற்றார். தொடர்ந்து வில்பத்து மணல் பகுதி. யானை இலத்தி எல்லாம் கிடந்திச்சு. பயம் வந்திட்டு 35 மைல் காட்டுக்குள்ளே போனோம்.மோட்டார் சைக்கிள் கேபில் வேலை செய்யாமல் பிரச்சினை வந்திட்டு. பின்பு புத்தளம் இருந்து கொழும்புவரை 3 மணி நேரம் ஓட முடியாமல் ராபிக்கில் காத்திருந்தோம்.
நினைச்ச நேரம் பிந்திட்டு 4 மணிக்கு காலி முகத்திடலில் நண்பர்களைச் சந்திச்சு அங்க இருந்து தெகிவளை விட்டு போக 5 மணியாச்சு. அதுக்குப் பிறகு காலி போனோம். எல்லாத்தையும் இரசிச்சுப் பார்க்க முடியாமல் போயிட்டு. ஒரு நாளில் எல்லாத்தையும் முடிப்பமா எண்ட சந்தேகம் வந்திட்டு. ஒரு நாளில் பயணம் என்று குறிப்பிட்டோம். காலியில் நண்பர்கள் சந்தித்து வாழ்த்தி அனுப்பினார்கள்.பொத்துவில் வரும்வரை நண்பர்கள் தொலைபேசியூடாக வாழ்த்துக்கள் தெரிவித்து உற்சாகப்படுத்தியபடி இருந்தனர். இந்தப் பயணத்தை சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக் கருதி உலகின் அடுத்த சந்ததிக்கு சிறந்த முறையில் வழங்கவேண்டும் என்று அர்ப்பணிக்கின்றோம் என்றார்.


சுற்றுப்புறச் சூழலை மாசடைவிலிருந்து காப்பாற்ற வேண்டியவர்கள் இளைஞர்கள் வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி Reviewed by NEWMANNAR on June 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.