அண்மைய செய்திகள்

recent
-

ஆனந்த கண்ணீரை மறைப்பதற்காக கூலிங் கிளாஸ் அணிந்த ஒபாமா


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது மூத்த மகளான மாலியாவின் பட்டமளிப்பு விழாவிற்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

வாஷிங்டனில் அமைந்துள்ள Sidwell Friends பள்ளியில் படிப்பினை முடித்துள்ள மாலியா தனது மேற்படிப்புக்காக ஹவார்ட் பல்கலைக்கழகத்தில்.

இந்நிலையில் இவரது பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது, அந்த விழாவுக்கு ஒபாமா தனது மனைவியுடன் கலந்துகொண்டார், ஒபாமா கலந்து கொள்ளவிருப்பதால் ஊடகத்தினர் எவரும் அனுமதிக்கப்படவில்லை,மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

ஒரு தந்தையாக தனது மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதில் மிகுந்த சந்தோஷமடைந்த ஒபாமா, தனது மகளிடம் எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது, அதனை மறைப்பதற்காக நான் இன்று கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்துகொள்வேன் என தெரிவித்துள்ளார்.

அதன்படியே, கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டஒபாமா, தனது மகள் பட்டத்தினை பெற்றுக்கொள்ளும்போது எழுந்து நின்று உற்சாகத்தில் கைதட்டியுள்ளார்.



ஒபாமாவுக்காக பள்ளி நிர்வாகம் எவ்வித சிறப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை, அனைத்து தந்தையர்களை போலவே அவரும், சாதாரணமாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்துள்ளார் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தனது தந்தையின் பணிக்காலம் நிறைவடைந்தபின்னர், தனது மேற்படிப்பினை தொடர்வதற்காக மாலியா திட்டமிட்டுள்ளார்.


ஆனந்த கண்ணீரை மறைப்பதற்காக கூலிங் கிளாஸ் அணிந்த ஒபாமா Reviewed by Author on June 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.