அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் பாலியல் துஸ்பிரயோகம் அதிக அளவில் காணப்படுகின்றது-மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா - Photos

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் இங்குள்ள சிறுவர்கள் கடந்த 30 வருட கால யுத்தத்தினாலும்,அதன் பின்னர் ஏற்பட்ட வறுமையின் காராணத்தினாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா தெரிவித்தார்.

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துஸ்பிரையோகங்களை தடுக்கும் வகையில் சமூக மட்டத்தில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டின் இன்று (26) செவ்வாய்க்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற விழிர்ப்பணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் உரையாற்றுகையில்,,,

சிறுவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் ஆராய்ந்து ஒருவருக்கு தண்டனை வழங்குவதை விட அடிப்படையில் அவர்களை திருத்தம் செய்து எதிர் காலத்தில் அவர்களை நல்ல பிரஜைகளாக மாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இன்றைய கால கட்டத்தில் தமது சொந்த வீட்டிலும்,வெளியிலும் சிறுவர்கள் துஸ்பிரையோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இந்த துஸ்பிரையோகம் என்பது பல்வேறு மட்டங்களில் காணப்படுகின்றது.குறித்த துஸ்பிரையோகங்களை நாங்கள் ஒவ்வெரு மட்டமாக பிரித்து பார்க்க முடியாத நிலை காணப்படுகின்றது.

எனினும் இவ்வாறான விழிர்ப்புணர்வு செயலமர்வு மூலமாக சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற துஸ்பிரையோகங்களை நீக்கி சிறுவர்களின் எதிர்காலத்தை நல்ல ஒளிமயமான எதிர் காலமாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் எல்லோறுடைய நோக்கமாகும்.

இந்த நோக்கத்திற்காக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொலிஸ் அதிகாரிகள் மிகவும் சிறப்பாக செயற்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் சிறுவர் துஸ்பிரையோகம் என வழக்கு தாக்கல் செய்யப்படுகின்ற போது அந்த வழக்கினை நாங்கள் மிகவும் கன்னியமாக வேறு யாருக்கும் தெரியாத வகையில் பாதீக்கப்பட்ட சிறுவர்களுக்கான நிவாரணத்தை நாங்கள் பெற்றுக்கொடுக்கின்றோம்.

இதற்கு எங்களுடைய சட்ட வைத்திய அதிகாரிகள் பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

ஒரு சிறுவன் அல்லது சிறுமி பாதீக்கப்பட்டால் அவர்கள் தொடர்பான எந்த ஒரு விபரங்களையும் நாங்கள் வெளியிடாது இரகசியமான முறையில் உண்ணதமான நிலைக்கு நாங்கள் நகர்த்திச் செல்கின்றோம்.

-சிறுவர் துஸ்பிரையோகம் என்பது ஒரு சிறுவன் அல்லது சிறுமி உளவியல் ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் பாதீக்கப்படுகின்ற அனைத்து சம்பவங்களுமே சிறுவர் துஸ்பிரையோகம் என்ற கருத்துக்கள் கொண்டு வரப்படுகின்றது.

சிறுவர்கள் யார் என்று குறிப்பிடப்படுகின்ற போது இலங்கை நாடானது சிறுவர் சமவாயத்தின் அங்கத்துவ நாடாக காணப்படுகின்றது.

அங்கத்துவ நாட்டின் பட்டயத்தின் படி 18 வயதுக்கு குறைந்த அனைவருமே சிறுவர்களாக கருதப்படுகின்றனர்.

இவ்வாறு சிறுவர்களாக கருதப்படுகின்ற இந்த நபர்களுக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஏற்படுகின்ற அனைத்து தாக்கங்களும் துஸ்பிரையோகமாகாவே கருதப்படுகின்றது.

அதிலும் விசேடமாக பாலியல் துஸ்பிரையோகமானது வார்த்தைகளினாலும்,செயற்பாடுகளினாலும் ஏற்படுகின்றது.

சாதாரணமாக எங்களுக்கு அறிக்கையிடப்படுகின்ற வழங்குகளை பார்க்கின்ற போது பாலியல் துஸ்பிரையோகமானது மன்னார் மாவட்டத்தில் அதிக அளவில் காணப்படுகின்றது.

இதற்கான காரணமாக இன்றைய தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் தென் இந்திய சினிமாக்களின் தாக்கமும் மிகவும் மோசமாக காணப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வரலாற்றை அவதானிக்கின்ற போது எங்களுடைய நீதிமன்றத்திற்கு வருகின்ற போது அவர்கள் பல தடவைகள் பாதீக்கப்பட்டுள்ளதை காண்கின்றோம்.

அவ்வாறு பாதீக்கப்பட்ட நிலையில் இருந்து வெளியேறாத சந்தர்ப்பத்தில் மட்டும் தான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இதனை நாங்கள் ஆராம்பத்திலேயே தடுப்போமாக இருந்தால் இந்த சிறுவர்களின் எதிர்காலம் நல்லதொரு எதிர்காலமாக அமையும்.இன்றைய சிறுவர்கள் நாளைய எதிர்காலம்.

இன்று நாங்கள் அதிகாரிகளாகவும்,சமூகத்தில் பொறுப்பு வாய்ந்தவர்களாகவும் இருக்கின்றோம்.அந்த அந்;தஸ்தினை எமது சிறுவர்களும் எதிர் காலத்தில் வகிக்கப்போகின்றார்கள்.

அவர்களை நாங்கள் நல் வழியில் பண்படுத்தி இந்த சமூகத்திற்கும் இலங்கை நாட்டிற்கும் ஏற்ற பிரஜைகளாக உறுவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது.

சமூக மட்டத்தில் கடமையாற்றுகின்ற கிராம சேவையாளர்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் என அனைவரும் கூடியிறுக்கும் நிலையில் உங்கள் ஒவ்வெருவரினாலும் ஆரோக்கியமான இந்த காரியத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

நாங்கள் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகள் சிறுவர்களுக்கு எதிர்காலத்தில் பாதீப்புக்களை ஏற்படுத்தாததாக அமைய வேண்டும்.

துஸ்பிரையோகத்திற்கு உள்ளான சிறுவர்களை பாதுகாப்பதற்கு பல சட்டங்கள் காணப்படுகின்றன.

பாலியல் துஸ்பிரையோகங்கள் சம்மந்தமாக பல இறுக்கமான சட்டங்களும் காணப்படுகின்றது.

ஆனால் இறுக்கமான சட்டங்கள் காணப்படுகின்ற போதும் துஸ்பிரையோகம் நடந்து விட்டது என்றால் அங்கே சமூக மட்டங்களினூடான விழிர்ப்புணர்வுகள் குறைவாக காணப்படுகின்றது.

எனவே சமூக மட்டத்திலான விழிர்ப்புணர்வை ஏற்படுத்தி எதிர்கால சிறுவர்களை இன,மத பேதமின்றி பாதுகாத்து இலங்கை நாட்டின் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உறுவாக்க வேண்டும்.

சிறுவர்கள் தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு வேளைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.குறிப்பாக நீதி மன்றத்தினூடாக சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் சமூதாய சீர்திருத்தினூடாகவும் மேற்கொண்டு வருகின்றோம்.

அனைத்து விடையங்களுக்கும் மன்னார் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்.

பல சிறுவர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தருகின்ற போது தமது விடையங்களை தனிமையில் கதைப்பதற்கும் விரும்புகின்றனர்.

அவர்களின் உள்ளத்தில் இருக்கின்ற வேதனைகளை வெளியில் கொண்டு வந்து உள வள துறையினை வழங்குகின்ற போது பல சந்தர்ப்பங்களில் தமது துஸ்பிரையோகங்கள் தொடர்பாக தமது பெற்றோரிடம் அல்லது உறவினர்களிடம் தெரியப்படுத்துவார்கள்.

ஆனால் அவை அலட்சியப்படுத்தப்படுவதாகவே காணப்படுகின்றது.நீதிமன்றத்தின் மீதுள்ள பயத்தின் காரணமாகாவே அலட்சியப் படுத்தப்படுகின்றது.

'நீதிமன்றத்திற்கு சென்று ஏன் பிரச்சினைகளை தேடுவான்' என்று நினைக்கின்றனர்.

நாங்கள் நீதியினுடைய ஆலயமாகவே நாங்கள் நீதிமன்றத்தை கருதுகின்றோம்.ஆகவே நீதியினுடைய அலயத்திற்கு வருவதற்கு யாரும் பயப்பிட தேவையில்லை.

உங்களுடைய தகவல்களை பொலிஸாருக்கு வழங்குவதற்கோ அல்லது நீதிமன்றத்திற்கு வழங்குவதற்கோ அல்லது சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளுக்கு வழங்குவதற்கோ ஒரு போதும் அஞ்சக் கூடாது.

அவ்வாறு தகவல்களை வழங்க தயக்கம் காட்டும் சந்தர்ப்பத்தில் எழுத்து மூலமாக இரகசியமாக பொலிஸாரிடம் இல்லது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.

உங்களது தகவல்கள் அனைத்தும் இரகசியமாக பாதுகாக்கப்படும்.சிறுவர் துஸ்பிரையோகங்களை சில நேரங்களில் தவரான முறையில் பயண் படுத்துகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தவறான அழைப்புக்களை எடுத்து சிறுவர் துஸ்பிரையோகம் இடம் பெறுகின்றது என கூறிய அவர்களை சிக்கல்களில் மாட்டி விடுகின்ற சந்தர்ப்பங்களும் இருக்கின்றது.

சில நேரங்களில் சொத்து வழக்குகளுக்காக கூட சிறுவன் அல்லது சிறுமியை பயண்படுத்தி தங்களை துஸ்பிரையோகம் செய்து விட்டார்கள் என கூறும் படி பெற்றோர்களினாலும்,உறவினர்களினாலும் தெரிவிக்கக் கூடியமை காணக்கூடியாதாக உள்ளது.

அவற்றிற்கு மாற்று நடவடிக்கையினை பல சந்தர்ப்பங்களில் எடுத்துள்ளோம்.கடுமையான நடவடிக்கைகள் மூலம் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக கரையோரப்பிரதேசங்களில் மிக அதிகமான துஸ்பிரையோகங்கள் காணப்படுகின்றன.

ஆனால் குறித்த துஸ்பிரையோகங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு அல்லது நீதிமன்றத்திற்கோ அறிக்கையிடப்படவில்லை.

காரணம் அவர்களிடம் காணப்படுகின்ற அறியாமை மற்றும் சிறுவர்கள் மத்தியில் உள்ள பயம் ஆகியவையே காரணமாக இருக்கின்றது.

சிறுவன் அல்லது சிறுமி ஒருவர் தனது இளம் பராயத்தில் பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உள்ளாகி பாதீக்கப்படுவார்களாக இருந்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

அவர்கள் துஸ்பிரையோகத்தில் இருந்து வெளியில் வருவதற்கு நீண்ட காலங்கள் எடுக்கும்.

எனவே சிறுவர் துஸ்பிரையோகங்களை தடுப்பதற்கு உங்கள் அனைவரினாலும் முடியும் என நான் நம்புகின்றேன்.

நீங்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி பொலிஸாருக்கு தேவையான தகவல்களை வழங்குகின்ற சந்தர்ப்பத்தில் பாதீக்கப்படும் சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பான விடையங்களை தெரியப்படுத்தி ஆலோசனைகளையும் வழங்கி அவர்களை மீண்டும் சமூகத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இன்றைய நிலையில் மன்னாரில் பொலிஸார் செயற்படுகின்ற விதம் பாராட்டத்தக்கது.

இன,மத பேதமின்றி பொலிஸார் சகல விடையங்களையும் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

சகல விடையங்களும் 24 மணி நேரத்தினுள் மன்னார் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் காணப்படவில்லை.

கடமையாற்றுகின்ற ஒவ்வெரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் தூய இதயத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சேவை செய்கின்றனர்.

எனவே பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி சிறுவர் துஸ்பிரையோகங்களை தடுப்பதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.என மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் பாலியல் துஸ்பிரயோகம் அதிக அளவில் காணப்படுகின்றது-மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா - Photos Reviewed by NEWMANNAR on July 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.