அண்மைய செய்திகள்

recent
-

சாதனைகளின் சிகரம் தொட்டு நாளை......தங்கச்சூரியனுக்கு வயது பதினெட்டு......


ஆண்டுகள்  17 அசைக்க முடியாத அலைவரிசையாக  வானொலி வரலாற்றில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி தனியார் வானொலிகளில் எவரும் பிடிக்க முடியாத   தனக்கென ஒரு இடத்தை பதித்த நமது  முதல்வன்  சூரியன்இ பண்பலை வழியே 18 ஆம் ஆண்டில்  காலடி எடுத்து வைக்கிறான்.

தரத்தில் முதல்வனாய் வானொலிகளில் வல்லரசனாய் தனித்துவமான நிகழ்ச்சிகளை படைத்தவனாக இன்றும் ஏனைய வானொலிகளின் நிகழ்ச்சிகளுக்கு வித்திட்டவனாகஇ பல அறிவிப்பாளர்களை உருவாக்கியவனாக தொடர்ந்தும் அசைக்க முடியாத அலைவரிசையாக தடைகள் தகர்த்து வெற்றிப் படிகள் பல கடந்து  17 வருட கரடுமுரடான வரலாற்றில் சோதனைகளை சாதனைகளாக  தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளான் சூரியன்.

அனாவசியம் தேடாமல் அத்தியாவசியம் தேடி  மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் சந்தோஷத்தில் மட்டுமல்லாமல்இ துக்கத்திலும் பங்கெடுத்து ஒரு தாயாக ஒரு குருவாக ஒரு நண்பனாக இருந்து தோளோடு தோள் கொடுத்து தான் வழியை முன்நகர்த்துகிறான் சூரியன். இதுவே சூரியனின் சாதனைகளின் இரகசியமாகும். வானலையில் நல்ல தரமான நிகழ்ச்சிகளைக் கொடுத்து எட்டுத்திக்கும் இசையால் தன்வசப்படுத்தி மக்கள் நெஞ்சங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளான். இதனாலேயே அவனைச் சுற்றி மிகப்பெரிய அன்பால் சேர்ந்த கூட்டம் என்றும்இ எங்கும்  எப்பொழுதும் உண்டு.

1998 ம் ஆண்டு சூரியன் வானலைகளில் உதயமாகும் நேரம் சூரியனின் ஆரம்ப பொழுதுகள் தலை நகரில் தமிழ் பேசுவோர் அனைவரும் பகிர்ந்து கொண்ட ஒரே செய்தி. புதுமை படைக்க தமிழ்வானொலி ஒன்று ஆரம்பித்துள்ளது என்ற செய்தியே.சில  வாரத்தின் பின்இ ஜூலை மாதம் 25 ஆம் திகதி தக தகவென மின்னும் வானத்து தங்கச்சூரியன் போல் தமிழ் வானொலியிலும் வானொலிச் சூரியன் உத்தியோகபூர்வமாக உதயமானது. அதுவும் 24 மணிநேர ஒலிபரப்பாக அஸ்தமனம் இல்லாத சூரியனாய் ஒலி தந்தது.

அன்று முதல் எங்கும் எல்லோர் மத்தியிலும் சூரியனின்  பேச்சு. சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் மகிழ்விக்கும் முகமாக நிகழ்ச்சிகளைப் படைத்தது சூரியன்..அத்தனை ஆரம்ப கால அறிவிப்பாளர்களும் அட்டகாசமாய் நிகழ்ச்சியை திறம்பட தொகுத்தனர். நேரடியாக தொலைபேசியில் நேயர்களை இணைத்துக்கொண்டும்இ சூரியன் சுற்றுலாக்களை நடாத்தியும் நேயர்களின் நெஞ்சங்களில் அசையா இடத்தைப் பிடித்துக் கொண்டான் இந்த சூரியன்.


வெகு விரைவிலே நாடு முழுவதும் பண்பலை ஒலிபரப்பு விஸ்தரிக்கப்பட்டது.  நாடு முழுவதும் மட்டுமன்றிஇ கடல் கடந்து தமிழ் நாட்டின் பெரும்பாலான கரையோரப்பிரதேசங்களையும் தன் பால் கவர்ந்து கொண்டது இந்த சூரியன். அன்றிலிருந்து இன்று வரை இலங்கையில் மட்டுமன்றி உலகில் எங்கெல்லாம் தமிழ் நெஞ்சங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் சூரியன் மயமானது. தரமான நிகழ்ச்சிகளைப் படைத்துஇ பெருமளவான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட வானொலி என்று சொன்னால் அது இந்த வானொலி முதல்வன் சூரியனையே சாரும். பல புதிய நிகழ்ச்சிகளை படைத்தது மட்டுமன்றிஇ இன்று பலரும் போற்றும் பல அறிவிப்பாளர்களையும் உருவாக்கிய பெருமை சூரியனையே சாரும். அந்த நிகழ்ச்சிகளும்இ அறிவிப்பாளர்கலுமே புதிய வானொலிகளும் உருவாகக் காரணகர்த்தாவாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.

இன்று தமிழ் பேசுவோரின் சூப்பர் ஸ்டார் ஆக  தரணியெங்கும் தமிழ் வானொலிகளின் வல்லரசனாய் இ நிமிர்ந்த நடையில் 18 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றான். எத்தனையோ தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துஇ வீறு நடை போட்டுக்கொண்டிருக்கின்றான். தான்மு ரசிகர்களின் முழு அன்போடுஇ எவருக்கும் சூரியனை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற உரிமையோடு தன் உயிர் வானொலியாய் நேசித்து வானொலி வரலாற்றில் முதன்   முதலில் வானொலிக்காய் ரசிகர் மன்றம் அமையப் பெற்றது என்றால் அது  சூரியனுக்கு மட்டுமே.

இன்றும் சூரிய சொந்தங்கள் பல இடங்களில் சூரியன் சார்பாக பல நல்ல செயற்பாடுகளை முன்னெடுத்து சமூகம் சார்ந்த நல்லெண்ண செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதும் சூரியன் வானலை மீது அவர்கள் கொண்ட அன்பை வெளிப்படுத்துகிறது.ஏதும் ஒரு திட்டத்தை சூரியன் ஆரம்பித்தால் அதை மிக பிரமாண்டமாக மாற்றிவிடுவதில் சூரியன் ரசிகர்களை தவிர வேறு எந்த ரசிகர்களில் முடியாது.

ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் திரு. ரெய்னோர் சில்வா அவர்களின் நேரடி வழி நடத்தலில்  சூரியன் உட்பட சகோதர வானொலிகள் 5 நாட்டின் முதற்தரமாக செயற்பட  ஹிரு தொலைக்காட்சியும் அண்மையில் ஆசிய ஊடக வலையமைப்பில் இணைந்துகொண்டமையும் இன்னும் பலம் கொண்டு செயற்பட வைக்கிறது. மக்களுக்கு என்ன தேவை என்பதை சரியாக இனம் கண்டுஇ தகுந்த நேரத்தில் சரியான முடிவெடுத்து இளமை துடிப்போடு நிறுவனத்தை வெற்றிகரமானதாக கொண்டு செல்வதில் நிறுவனத்தின் தலைவருக்கு அவரே தான் நிகர் என்று சொல்லலாம்.

சூரியன் நிகழ்ச்சிகளை பொறுத்த வரைக்கும் நாமெல்லாம் நன்கறிந்தவர். பல ஊடகவியலாளர்களுக்கு இத்துறை சார் ஊக்கத்தை அதிகரிக்க செய்த ஒருவர்இ காலை வேளையில் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலால் தன் காந்தக்குரலால் பலரை உற்சாகப்படுத்தி தன் திறமையால் பலரையும் கவர்ந்திழுத்திருக்கும்  திரு.ஏ.ஆர்.வீ. லோஷன் அவர்கள் பணிப்பாளராக செயற்படஇ இசைச் சமர் நிகழ்ச்சியூடாக பல ரசிகர்களை தன் கல கல பேச்சால் சுண்டி இழுத்திருக்கும் திரு சந்த்ரு அவர்கள் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளராகவும்இ மாலை நேரத்தில் மக்கள் மனங்களை கட்டி வைத்துஇ யார் பேசுறீங்க நிகழ்ச்சி மூலம் பலரை குழப்பி எடுக்கும் திரு டிலான் நிகழ்ச்சி முகாமையாளராகவும் சூரியன் வானொலி மூலம் சூரிய குடும்பத்தை  பிரகாசிக்கவைக்கின்றனர்.

தரமான நிகழ்ச்சிகளை தந்து தன் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஹீரோவாக வலம் வரும் சூரியன் நிகழ்ச்சிகள்இஅதன் முத்தான அறிவிப்பாளர்கள் பற்றி பார்த்தால் அதிகாலை வேளையை வாழ்த்துக்களால் முழுமைப்படுத்திஇ பக்திப்பாடல்களில் ஆன்மீகம் சிறக்க வைத்து நல்லதான நற்சிந்தனைகளையும் நாளும் தரும் அருணோதயம் ரிம்ஸாட் மற்றும் ப்ரஷாவுடன் அழகு பெறஇ காலையின் உற்சாகம்  மணி அடித்திட இசை ஒலித்திடும் இனித்திடும் இன்ப ராக்கங்களாய் சூரிய ராகங்கள் லோஷன் மற்றும் மனோச் உடன் புதுப் புது தகவல்களையும் நாட்டு நடப்புக்களை தெளிவாய் தரமானதாக  அள்ளி வருகிறது.

சிரித்து வாழ்தல் சிறப்பைத்தரும் என்பதை போல் 3 மணித்தியாலங்கள் இவர்களின் கல கல பேச்சால் சிரித்து மகிழ ஏழு பாடல்களின் போட்டியுடன் இசைச் சமரில்  சந்த்ருவுடன் மேனகா களமாடஇ மதிய நேர செய்தியை தொடர்ந்து வாழ்த்துக்கள்இ மனது விரும்பும் உங்க விருப்ப பாடல்களுடன்இநகைச்சுவை துணுக்குகளை அள்ளி வருகிறது மதிய நேர இசை விருந்து நிஷாந்தன் மற்றும் வர்ஷி நிகழ்ச்சியை வழங்குகிறார்கள்இ புது புது தகவல்களை அதே சூடாக சுவாரஸ்யமாக தேடித்தருகிறார் தரணி கும்மாளத்தில்.
 மாலை நேரத்தின் மகிழ்ச்சியாய்இமாலை உற்ச்சாகத்துக்கு குறைவில்லாமல் வேலை முடிந்து வீடு திரும்புவோர் களைப்பகற்ற டிலான் மற்றும் கோபிகா தரும் என்றென்றும் புன்னகை பல்சுவை அம்சங்களுடன் அனைவரையும் மகிழ்விக்கிறது.இரவின் தாலாட்டை காதல் உள்ளங்களின் தீராத தாகமாய்இ கவி உற்றாரை இனிய பாடல்களை அள்ளி வரும் நேற்றைய காற்றுடன் பிரஷாந்த் கலக்க ஒவ்வொரு நாளும் ஓய்வின்றி எப்போவும் மறையாத சூரியனாய் விடிய விடிய இரவு சூரியன் துள்ளிசை பாடல்களை அள்ளி வருகிறது இரவு நேர பணியாளர்களையும் பயணிகளையும் வாகன சாரதிகளுக்கும் உற்ற தோழனாய் ஒலிக்கும் விடிய விடிய இரவு  சூரியனை கஸ்ட்ரோஇ மணிவண்ணன்  ஆகியோர் வழங்குகின்றனர்.
 வார இறுதி நாட்களிலும் வகை பிரிக்கப்பட்டு பாடல்கள் தரம் பிரிக்கப்பட்டு நேயர்களுக்காக வழங்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் துள்ளிசை பாடல்களுடன் சனிக்கிழமை உற்சாகம் மற்றும்  ஞாயிறு சந்தோசம் என ஒவ்வொரு நிகழ்ச்சியும் கேட்போர் மனதை சுண்டி இழுப்பவையாக இருக்குறது. நிகழ்ச்சிகளில் வார இறுதி நாட்களில் சூர்யாஇ மயூரன்இ ராகவன்இ வேணிஇ மனோப்பிரியா ஆகியோரும்  இணைந்துகொள்கிறார்கள்.
தங்கள் முழு நேர அர்ப்பணிப்புடன் ஆண்டுகள் முழுவதும் ஓய்வின்றி தங்கள் சேவையை சூரியனுக்கு வழங்கி சூரியனின் வெற்றிகளில் தோளோடு தோள் கொடுக்கும் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் செயற்பாடுகளை போற்றியே ஆக வேண்டும். வெளிக்கள செயற்பாடுகள் அனைத்தும் பிரமிப்பை கொடுப்பனவாக ஒவ்வொன்றும் அழகாக திட்டமிடப்படுகின்றன. இவற்றையெல்லாம் சிறப்பாக செயற்படுத்தி ஆளுமையான அணியை கட்டி ஆளும் கடமையை நிறுவனத்தில் பல ஆண்டு அனுபவம் கொண்டவருமான கள்ள மனதின்  கோடியில் புகழ்இஅஷ்ரப் சிரேஷ்ட முகாமையாளராக இருந்து செயற்படஇ உதவி முகாமையாளராக  அஜித் குமார்இ கார்த்திக்இ சுரேன்இ ரொஷான்இ ஸ்டீபன்இ ஆகியோருடன் திட்டமிடல் சிறக்குறது. தரமான செய்திகளைஇதெளிவாகவும்இ உண்மையாகவும் உடனுக்குடன் தர சூரியன் செய்திப்பிரிவும் நாடுமுழுவதுமிருந்து செயற்படுகிறது. பல இன்னல்கள் இடம்பெற்ற காலம் முதல் இன்று வரைக்கும் மக்கள் மனதில் அழிக்க முடியாத செய்தியாக சூரியன் செய்திகள் பேசப்படுகின்றன.

இப்படியான ஒவ்வொரு நகர்வுகளாலும் வானொலிகளிடையே சாதனை படைத்துஇ தனி இசை தந்து தரணி ஆளும் வானொலி சூரியனின் படைப்புக்களில் நிலையக் குறியிசைகளை யாராலும் மறக்க முடியாது. தென்னிந்திய தயாரிப்புக்களுக்கு நிகராக மக்களால் அதிகம் விரும்பி ரசிக்கப்படுகின்ற நிலைய குறியிசை என்றால் அது சூரியனுடையதாகவே இருக்கும். சூரியன் நிலைய குறியிசைகளை நேயர்கள் அவர்களது கையடக்க தொலைபேசிகளில் குறியீட்டு இசையாக சேமித்து வைத்திருந்தும் சூரியன் மீது நேயர்களாக அவர்களது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்துகின்றனர். இசை கோர்ப்புக்களை அழகாக வடிவமைத்து வழங்குவதில் இளம் இசையமைப்பாளர் ஹனி நாயக்கரா மிக சிறப்பாய் சூரியன் ரசிகர்களின் ரசனை அறிந்து குறியிசைகளை வழங்குகிறார்.  பண்பலையை பல இலட்சம்  சொந்தங்களால் முழுமைப் படுத்திய சூரியன் தற்கால நவீனம் கருதி இணைய வெளியிலும் மற்றுமொரு சாதனையைப்   படைத்துள்ளான் இலங்கை வானொலி வரலாற்றில் வேறெந்த வானொலியும்  நெருங்க கூட முடியாத வகையில்  சமூக வலைத்தளமான சூரியன் பேஸ் புக் பக்கத்தில் 10 இலட்சங்களை விருப்பாக பெற்ற ஒரே அலைவரிசை என்றால் மிகையாகாது.

 ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் சூரியனைத் தாண்டி தடம் பதிக்க வேறெந்த வானொலியாலும் முடியாது என்பதே உண்மை. உயரக் கோபுரத்தில் இருந்து இடை விடா இசை தந்து  வானலைகளின் அரசனாக வலம் வரும் வானொலிகளின் முதல்வன் சூரியன் கடந்த 17 ஆண்டுகள் அசைக்க முடியாதவனாய் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவனாக   18ம் ஆண்டிலும் எத்துணை தடை வந்தாலும்  அவற்றை தகர்த்து தன் தனி ராஜ்ஜியத்தை பண்பலையில் நிலை நிறுத்துவான் என்பதும்  எங்களின் நம்பிக்கை.

 நாமும் நியூமன்னார் இணையகுழுமம் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம்...
 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்




சாதனைகளின் சிகரம் தொட்டு நாளை......தங்கச்சூரியனுக்கு வயது பதினெட்டு...... Reviewed by Author on July 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.