அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (10-08-2016) கேள்வி பதில்

கேள்வி:−

மதிப்பிற்குரிய உளவியலாளரும் சட்டத்தரணியுமாகிய திரு.சுதன் ஐயா!நான் குருகள்மடத்திலிருந்து பரமேஸ்வரி.ஐயா!எனது மகன் க.பொ.த.ச/தரம் படிக்கிறார்.அவர் படிப்பில் நல்ல கெட்டிக்காரன்.ஆனால் தாழ்வு மனப்பான்மை அதிகமுள்ளவர்.அதனை இல்லாமல் பண்ண என்ன பண்ண வேண்டும்?

பதில்:−

அன்புத் தாயாரே! இந்த பிரச்சனை தங்கள் மகனுக்கு மட்டுமல்ல.அனேகருக்கு உள்ளது.இதற்கு காதணம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்கு அதிக செல்லத்தை கொடுத்து,பாசத்தினால் வெளியுலகத்துடனான தொடர்பினை இழக்க செய்கின்றமையாகும்.அதாவது விளையாட,கல்வி சுற்றுலா செல்ல,திருவிழாக்கள் செல்ல,கல்வி சார் நிகழ்வுகளுக்கு செல்ல அனுமதிக்காததால் அவர்கள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே தமது ஆளுமையை வளர்த்துக் கொள்கின்றனர்.வளர்ந்து வெளியுலக தொடர்பில் இணையும் போது,அது சார் ஆளுமையில்லாததால் தாழ்வு மனப்பான்மை அவர்களுக்கு உருவாகின்றது.

தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை.திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு. பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள்.பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அபாயம் இவர்களில் உண்டு.
உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால் முதலில் அதை நீங்கள் ஒழிக்கவேண்டும்.

தாழ்வு மனப்பான்மைதான் உங்கள் முன்னேற்றத்திற்கான மிகப் பெரிய தடைக் கல்லாகும்.தாழ்வு மனப்பான்மை ஒருவரது தன்னம்பிக்கையைத் தகர்த்து எறிந்து விடும்.எதையும் தோல்விகரமான மனப்பான்மையிலேயே எண்ணத் தோன்றும்.சிலர் வறுமையான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். பாடசாலை/பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது இவர்கள் வசதியான பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கும்.வசதியான பிள்ளைகள் அணிந்திருக்கும் உடைகள், செலவு செய்யும் மனப்பான்மை, உணவுப் பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மனதைப் பெரிதும் காயப்படுத்தி இவர்களுடைய தன்னம்பிக்கையை இழக்க வழி செய்கிறது. அதுவே அவர்களிடத்து தாழ்வு மனப்பான்மை உண்டாகக் காரணம் ஆகிறது.
இந்தத் தாழ்வு மனப்பான்மை காலப்போக்கில் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற ஆசையினால் நியாயத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள்.
காலப்போக்கில் உண்மை தெரிந்த உடன் மிகவும் மனம் நொடிந்து போய் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அவ நம்பிக்கையுடன் ஈடுபடுகின்றனர்.
தாழ்வு மனப்பான்மை உங்கள் தோற்றத்தையே மாற்றி மற்றவர்கள் உங்களை வெறுக்கும் அளவுக்கு செய்து விடும். சிலருக்குப் படிக்கும் காலத்திலேயே தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிடும். அதன் விளைவாகச் சரியாகப் பாடங்களில் கவனம் செலுத்தமுடியாமல் போய் குறைவான மதிப்பெண்
எடுப்பார்கள். மனம் நொந்து போய் இனி நம்மால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற தவறான முடிவுக்கு வந்து விடுவார்கள்.
நன்றாகப் படிக்காத எத்தனையோ பேர் நாட்டில் முதல் மந்திரிகளாகவும் பிரதம மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள். இதற்க்கு சரியான உதாரணம் மறைந்த பெருந்தலைவர்
காமராஜர் ஆவார்கள்.
படிப்பு என்பது ஒருவருடைய வாழ்க்கையை ஓரளவு தான் நிர்ணயம் செய்யும்.ஒருவருடைய வளமான வாழ்க்கையைத் தீர்மானம் செய்ய வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் உள்ளன.
பிறக்கும் குழந்தைக்குத் தாழ்ந்தவரா உயர்ந்தவரா என்று தெரியாது.உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் சுய நலம் உள்ள மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை. படைப்பில் எவரும் உயர்ந்தவர் அல்ல தாழ்ந்தவர் அல்ல. அனைவருமே சமம்.
இது போன்று தாழ்வு மனப்பான்மை உண்டாகப் பல காரணங்கள் கூறலாம். தாழ்வு மனப்பான்மையை உங்கள் மனதிலிருந்து விரட்ட வேண்டும் என்றால் முதலில் நம்பிக்கை எனும் விதையை உங்கள் மனதில் விதிக்க வேண்டும்.
நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற நம்பிக்கை விதையை மனதில் ஊட்டித் தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறியுங்கள்.
நம்பிக்கை எனும் விதையை ஊட்டுவதற்குத் தியானம் பெரிதும் உதவுகிறது.தியானம் எனும் அறிய கலையின் மூலமாக தாழ்வு மனப்பான்மையினைத் தகர்த்து எறியலாம்.
தியானம் செய்வதின் மூலமாகச் சிந்தனைத் திறன் சரியாக வேலை செய்து நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற உண்மையினை உணரச் செய்து ஒருவரது மனதில் இருந்து தாழ்வு மனப்பான்மையினை தூக்கி எறியச் செய்கிறது.
Suthan Law
Law
04:04

தாழ்வு மனப்பான்மையை போக்க சில இலகுவான வழிகள்

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
இன்றைய (10-08-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on August 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.