அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்களுக்கு வரப்பிரசாதம்! வந்துவிட்டது புதிய ஆப்....


தமிழக மீனவர்களை இலங்கை படையினர் அடிப்பதும், சிறைப்பிடித்து செல்வதும் காலம் காலமாக நடந்து வருகிறது.

தமிழக மீனவர்கள் பிரச்சனை இதுவரைக்கும் எந்தவொரு நிரந்தர தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் The Fisher Friend Mobile Application என்னும் புதிய செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது.

இதனை மீனவர்கள் அவர்களது மொபைல் போனில் தரவிறக்கம் செய்து கொள்வதன் மூலம், இலங்கை கடற் எல்லைக்குள் நுழையும் போது எச்சரிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கடல் நீரின் மட்டம், ஆபத்தான பவளப்பாறைகள், மீன்பிடி மண்டலங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் காலநிலை, காற்றின் வேகம், புயல் எச்சரிக்கை பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

ஏதேனும் ஆபத்தான சூழ்நிலைகளின் போது மீனவர்கள் அருகிலுள்ள கடலோர காவல்படைக்கு குறுந்தகவல்கள் அனுப்பமுடியும்.

MS Swaminathan Research Foundation உருவாக்கியுள்ள இந்த செயலியை தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா மீனவர்கள் உபயோகப்படுத்த முடியும்.

இதுவரையிலும் 6 மொழிகளில் அறிமுகமாகியுள்ள இந்த செயலியை, ஆப்லைனில் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு வரப்பிரசாதம்! வந்துவிட்டது புதிய ஆப்.... Reviewed by Author on October 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.