அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கப்பட்டு உயிரிழப்பு

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் நேற்று (22) சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர், தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே இன்று (23) அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய அவசர தொலைபேசி பிரிவுக்கு நேற்று முன்தினம்(21) வந்த அழைப்பில் வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தில் சண்டை இடம்பெறுவதாக தகவல் கிடைத்தது.

தகவல் கிடைக்கப்பெற்று சிறிது நேரத்தில் சென்ற பொலிசார், அங்கு சென்று விசாரணை செய்த போது கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பப்பிரச்சினை என்பதை அறிந்ததும் அவர்களுக்கு பொலிசார் ஆலோசனைகள் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதே வீட்டில் அன்று மாலை பிறந்ததினம் இடம்பெற்றுள்ளது. அதில் நான்குபேர் கலந்து கொண்டு மது அருந்தியுள்ளனர்.

அளவிற்கு அதிகமாக மது அருந்தியதால் நிலை தடுமாறிய இருவர், காலை பொலிசாரின் அவசர தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்தியது யார் என வினவியதுடன் இதன்போது கருத்து முரண்பாடுகளும் அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ளது.



கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனியிலிருந்து வந்து தனது வீட்டின் திருத்தப்பணிகளை மேற்கொண்டு வரும் அயல்வீட்டுக்காரர் இந்த அழைப்பினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அயல்வீட்டுக்காரருக்கும், இவர்களுக்கும் இடையே கடந்த காலங்களில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் பொலிசாரின் அவசர தொலைபேசி பிரிவிற்கு தகவலை அருகில் வசித்துவந்த நபரே வழங்கியுள்ளதாக அவர் மீது சந்தேகம் கொண்டு மது அருந்தியவர்களில் இருவர் அவரின் வீட்டிற்குச் சென்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.



மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் அப்பகுதியல் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

வீட்டிற்கு முன்னால் சடலம் இருப்பதாக தொலைபேசி அழைப்பின் மூலமாக தகவல் கிடைத்த பின்னரே நாங்கள் அங்கு சென்று எமது விசாரணைகளை மேற்கொண்டுவருகிறோம் என தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவர் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கப்பட்டு உயிரிழப்பு Reviewed by NEWMANNAR on November 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.