அண்மைய செய்திகள்

recent
-

17 முறை கருச்சிதைவு: 9 மாதத்தில் 4 குழந்தைகளுக்கு தாயான பெண்...


பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு 9 மாதத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிங்காமில் வசித்து வந்த Lytina Kaur என்பவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்த இவருக்கு 17 முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

இதற்காக இவர் பலமுறை முயன்றும் கருதங்கவில்லை. ஏனெனில் இவருக்கு 17 வயது இருக்கும்போது myeloid leukaemia எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மனிதர்களின் bone Marrow மற்றும் இரத்தம் ஆகியவற்றில் தான் இதன் தாக்கம் ஏற்படும். இந்நிலையில் இவருக்கு bone Marrow மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நோயின் தாக்கத்தின் போது இவரது உடலில் உள்ள வெள்ளை அனுக்கள் குறைந்ததன் காரணமாக நோயெதிர்ப் சக்தியை எதிர்கொள்ளும் ஆற்றல் குறைந்தது.

இந்த காரணத்தினாலேயே இவருக்கு கருத்தரித்தல் என்பது அவ்வளவு எளிதில் நடக்கும் என கூறிவிட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



இதனால், ஏதேனும் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என முயற்சி செய்த இவர், அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த தம்பதியினரின் உதவியோடு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இதில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் இந்திய பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

இந்தியப்பெண் கருவுற்றிருந்த நேரத்தில், Lytina செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையை மேற்கொண்ட காரணத்தினால் இவர் கருவுற்றுள்ளார். இதில், 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆக மொத்தத்தில் 3 குழந்தைகள் என்று ஆகிவிட்ட நிலையில், Lytina இயற்கையான முறையில் மீண்டும் கருத்தரித்துள்ளார்.

இந்த குழந்தையானது 2016 ஆம் ஆண்டு யூன் மாதம் 28 வாரத்திற்குள் குறைமாத குழந்தையாக பிறந்துவிட்டது. 9 மாதத்திற்குள் 4 குழந்தைகளுக்கு தாயான சந்தோஷத்தில் இவர் இருக்கிறார்.

இதுகுறித்து இவர் கூறியதாவது, நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், எந்நேரமும் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருப்பதால் மிகவும் பிசியானா தாய் நான் என கூறியுள்ளார்.

17 முறை கருச்சிதைவு: 9 மாதத்தில் 4 குழந்தைகளுக்கு தாயான பெண்... Reviewed by Author on January 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.