அண்மைய செய்திகள்

recent
-

1200 குடும்பங்கள் 05கிராமசேவகர் பிரிவு ஆனால் நிலையான தபாலகம் இல்லை…..மக்கள் கவலை…..தீர்வு கிடைக்குமா…..???


மன்னார் மாவட்டத்தின் தற்போது பல வகையான அபிவிருத்திப்பணிகள் நடை பெறுகின்றது. மட்டற்ற மகிழ்ச்சியான விடையம் இதுவரையில்லாத வகையில் அபிவிருத்திப்பணிகள் நடைபெறுகின்றது. அந்த அபிவிருத்திகள் நகரப்பகுதிக்குள் நின்றுவிடாமல் கிராமப்பகுதிக்கும் செல்ல வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

யாரையும் குற்றம் சுமத்துவதோ பழிவேண்டுதலோ எமது நோக்கம் அல்ல இங்கே குறிப்பிடவரும் விடையம் என்னவென்றால் மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவுக்கிராமத்தின் பிரதானவீதியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் இடம் தான் சன்னார் யாவருக்கும் தெரிந்த விடையமே….
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று
சன்னார் ஈச்சளவக்கை காயாநகர் பெரியமடு மேற்கு கிழக்கு 05கிராமசேவகர் பிரிவுகளை கொண்டுள்ளது கிட்டத்தட்ட 1200 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர் இவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளது அதில் சில…..

  • வீதி அபிவிருத்தி
  • குளங்கள் அபிவிருத்தி
  • மண் அகழ்வு 
  • ராணுவப்பயிற்சி(அதிக சத்தம் அதிர்வினால் கர்ப்பிணித்தாய்மார்கள் வயிற்றில் குழந்தைக்கு ஆபத்து)
  • மீன்பிடிக்க இயலாமை(இராணுவமுகாம் கடந்து 4மஅ செல்ல வேண்டிய நிலை)
  • விவசாய காணிப்பிரச்சினை(மேய்ச்சல் பகுதியில் கட்டாக்காலி விலங்குகள்)
  • கால்நடைவளர்ப்பில் சிக்கல்
  • காணிப்பிரச்சினை(மீள்குடியேற்றம்) 
  • பாதுகாப்பு பிரச்சினை ......... இப்படியான பல பிரச்சினைகள் இருந்தாலும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளில் சில பிரச்சினைகள் தீர்வு காணப்பட்ட போதிலும் பல பிரச்சினைகள் தீர்வு காணப்படவில்லை இதனால் மக்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் சுதந்திரமான நிலைமை பாதிக்க்படுகின்றது வெளிப்படையான உண்மை.

நாம் இங்கே வெளிக்கொணர இருக்கின்ற விடையம் என்ன வென்றால் நிரந்தரமான ஒரு தபால் நிலையம் இல்லை…..
2000ம் ஆண்டிற்கு பிறகு நிரந்தரமான தபால் நிலையம் இல்லை…
சுமார் ஒரு ஏக்கர் அரச காணியில் பழைய தபாலககட்டிடமானது இடிந்து சிதைந்த கட்டிடத்துடன் காடு பற்றிக்கிடக்கின்றது. பெரியமடு மேற்குப்பகுதியில் பள்ளிவாசலுக்கு முன்பாகவும் அருகில் கூட்டுறவுச்சங்கமும் சிறிது தூரத்தில் பிரதேச வைத்தியசாலையும் உள்ள பகுதியில் பழைய தபாலகம் இருக்கின்றது.

தற்போது குடியிருப்பாளர் ஒருவரின் வீட்டில் ஒரு அறையில் 250 ரூபாய் வாடகையில் இயங்கிக்கொண்டிருக்கும்  தற்போதைய தபாலகமானது 1போஸ் மாஸ்ரரையும் ஒரு போஸ் பியோனையும் கொண்டு இயங்குகின்றது.
 05 கிராம சேவகர் பிரிவில் அண்ணளவாக 1200 குடும்பங்கள் சிறிய பெரிய பாடசாலைகளாக 4 பாடசாலைகள் பெரிய இரண்டு இராணுவ முகாம்கள் ஆலயங்கள் தேவாலயங்கள் உள்ளது இவை ஒவ்வொன்றிற்கும் தபாலினை கொடுப்பது என்றால் குறைந்தது 3KM-5 KM-8 KM-பயணிக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் இன்னுமொரு தபால் ஊழியர் தேவையாகவுள்ளது.

தற்போது பணியில் உள்ளவர் விடுமுறை எடுத்தால் வருகின்ற தபால்கள் அப்படியே தங்கி விடுகின்றது. அவர் விடுமுறை முடிந்து 2நாளோ 3நாளோ கழித்து வந்து கொடுக்கும் வரை தபால் தேங்கியே கிடக்கும் மாணவர்களின் கல்வி சார்ந்த தபால்கள் சிலரின் வேலை சார்ந்த நேர்முகத்தேர்வு தபால்கள் வரும் இந்தக்காலதாமதம் அவர்களின் வாழ்வை பாதிக்கும் நிகழ்வாக அமைகின்றது அல்லவா…. இப்படியான காலதாமதம் ஆகும் தபாலினால் சிலரின் வேலைவாய்ப்புக்களும் பறிபோயுள்ளது.


காணியுள்ளது ஆள்வளமும் உள்ளது ஒதுக்குகின்ற நிதியும் உள்ள போது ஏன் இன்னும் நிரந்தரமான தபாலகமும் போதுமான ஊழியர்களையும் வழங்காமல் இருக்கின்நறீர்கள் என்ற கேள்வியினை மக்கள் கேட்கின்றனர். போதியளவில் அமைச்சரகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாணசபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து உடனே நல்ல தீர்வை எடுக்க வேண்டும் அபிவிருத்தி என்பது கிராமப்புறத்தில் இருந்த ஆரம்பித்தால் தான் மிகவும் சிறப்பானதாக இருக்கும் பல தடவைகள் கேட்டு விட்டோம் எங்கள் தேவைகளை நிவர்த்தி செய்துவைக்கவேண்டியது.
உங்களின் கடமை உணர்ந்து உடனே செயற்படுங்கள்.

வருடா வருடம் ஒதுக்கப்படுகின்ற நிதியானது அபிவிருத்திப்பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் திரும்புகின்றது இப்படியான கண்டு கொள்ளாமல் இருக்கின்ற பல அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பிலே கிடக்கின்றது. முடிந்த வரை ஒதுக்கப்படுகின்ற நிதியினை முழுமையாக பிரயோசனமான முறையில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
 தங்களின் சேவையினால் மன்னார் மாவட்டம் அபிவிருத்தி நோக்கி…………

மீண்டும் வருவேன் இன்னும் பல…………
-மன்னார்விழி- 









1200 குடும்பங்கள் 05கிராமசேவகர் பிரிவு ஆனால் நிலையான தபாலகம் இல்லை…..மக்கள் கவலை…..தீர்வு கிடைக்குமா…..??? Reviewed by Author on February 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.