Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

புலிகள் அமைப்பில் இருந்தமைக்காக 8 ஆண்டுகள் சிறை : நகங்களும் பிடுங்கப்பட்டன.! இலங்கை அகதிகளின் சோகம்...


இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 22 இலங்கை அகதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இந்தோனேசிய கடலில் தத்தளித்த 44 இலங்கை தமிழ் அகதிகள் பல்வேறு அழுத்தங்களுக்கு பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த அனைவரும் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த 44 அகதிகளில் ஐந்து பேருக்கு அகதி அந்துஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் 17 அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 22 அகதிகளும் நாடுகடத்தப்படக்கூடிய ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகதிகளில் ஒருவரான சிவரஞ்சனி இந்தோனேசியாவின் Lhokseumawe என்ற அகதிகள் மையத்தில் வசித்து வருகிறார்.

சிவரஞ்சனிக்கு அறுவைச் சிகிச்சை வழியே ஆண்குழந்தை பிறந்துள்ள நிலையில், மூன்றே நாட்களில் அகதிகள் மையத்திற்கு மீண்டும் அவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவரஞ்சனியின் கணவர் பகிதரம் கந்தசாமி தங்கள் சூழ்நிலை பற்றி நியூசிலாந்து ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், "கடந்த வருடம் ஜூன் மாதம் இந்தோனேசிய கடலில் தத்தளித்த அவர்கள் நியூசிலாந்து செல்ல முயற்சித்தாக கூறியுள்ளனர்.

ஆனால், ஐ.நா அகதிகள் முகமை தங்களிடம் கருத்து கேட்ட போது நாங்கள் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்ததாக தவறாக பதியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அகதிகள் படகுகளை அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பிவரும் செய்தியினை நாங்கள் அறிந்திருந்ததால் நியூசிலாந்து செல்லவே முயற்சித்தோம் என்கின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்ததற்காக தாம் எட்டு ஆண்டுகள் இலங்கைச் சிறையில் இருந்ததாகவும், நகங்கள் பிடுங்கப்பட்டு சி.ஐ.டியினரால் தொடர்ந்து சித்ரவதைக்கு உள்ளனாதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

44 அகதிகளும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பு) கொடுத்து வேதாரண்யத்திலிருந்து படகில் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தில் கரை சேர்ப்பதாக சொன்ன ஆட்கடத்தல்காரர்கள், எரிப்பொருள் தீர்ந்ததும் வேறு படகில் தப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னால் உட்கார, நிற்கக்கூட முடியவில்லை என கலங்கியுள்ளார் சிவரஞ்சனி.

கெளரவமான வாழ்க்கையை எதிர்ப்பார்த்துள்ள இந்த அகதிகள், இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால் கடும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவோம் என அஞ்சுவதாக" என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம்

இலங்கையில் இப்போது முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் இன விவகாரம் கையாளப்படுகிறது.
இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவர்களே முக்கூட்டுத் தலைவர்கள்.

மகிந்த ராஜபக்­வை தேர்தலில் வீழ்த்துவது; அவருக்கு நிகராக மைத்திரிபால சிறிசேனவை தேர்தல் களத்தில் இறக்குவது; மைத்திரி - ரணில் இணைந்த கூட்டு அரசை நிறுவுவது; இரா.சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது என்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியாக இருந்து செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க என்பது மறுக்க முடியாத உண்மை.

என்னுடன் போட்டியிடும் அந்த வீரன் யார்? அவரை அறிய விரும்புகிறேன் என்று மகிந்த ராஜபக்ச கர்ச்சித்த போது; மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானம் சந்திரிகா குமாரதுங்கவால் எடுக்கப்பட்டிருந்தது. இதற்குப் பின்னணியாக சில வெளிநாடுகளும் இருந்தன என்பது வேறு கதை.

மைத்திரிபால - ரணில் - சந்திரிகா என்ற முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் மகிந்த ராஜபக்சவுக்கான அரசியல் தோல்வி நிறைவேற்றப்பட்டது.

இந்த வெற்றியை அடுத்து போர்க்குற்ற விசாரணையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பையும் படைத்தரப்பையும் காப்பாற்றுவது என்ற விடயத்தை முக்கூட்டுத் தலைவர்களும் மிகச்சிறப்பாகக் கையாண்டனர்.

இதற்கு இரா. சம்பந்தருக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவி மிகுந்த உதவி புரிந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வருட கால அவகாசம் எல்லாப் பிரச்சினையில் இருந்தும் தப்புவதற்கான வழியாயிற்று.

இவை நடந்து முடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையர் தனது தாளத்தை மாற்றத் தொடங்கி விட்டார்.

ஆம், போர்க்குற்றம் தொடர்பில் படையினர் மீது விசாரணை நடத்த முடியாது. அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது என்பதாக சந்திரிகாவின் கதை உள்ளது.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் அதனை அப்படியே தாட்டுவிடுவதுதான் முக்கூட்டுத் தலைவர்களின் திட்டம். இது சந்திரிகாவூடாக வெளிப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பில் படையினருக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறும் சந்திரிகா அம்மையார்,

அதேநேரம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்துக் கூறுகையில், அவர்கள் குற்றம் செய்ததனாலேயே தண்டனை அனுபவிக்கின்றனர் என்கிறார்.

ஆக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதேயன்றி வேறு எதுவும் நடக்காதென்பது தெட்டத் தெளிவாகிறது.

அதாவது சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணை நடக்கும். அவர்கள் குற்றவாளிகளாக அறிக்கையிடப்படும். இந்த வேலையை இலங்கை அரசு நியமிக்கின்ற விசாரணைக் குழு செய்து முடிக்கும்.

அதேசமயம் படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர்கள் வன்னி யுத்தத்தில் எவரையும் சுட்டுக்கொல்லவில்லை என்பதாக முடிவு இருக்கும். இதுவே இரண்டு வருட கால அவகாசத்தில் நடக்கும்.

ஆம், சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக எது செய்தாலும் அது குற்றமில்லை.
ஆனால் சிங்களவர்கள் எந்தக் குற்றத்தை தமிழர்கள் மீது சுமத்தினாலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்குத் தண்டனை கிடைக்கும். இதுவே நடக்கப் போகிறது.

அட, பரவாயில்லை. தமிழர்கள் எதை இழந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்காக்கி இருக்கிறார்களே! அது போதாதா என்ன?

வலம்புரி 

தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் படும் அவலம்! வெளிவராத பல உண்மைகள் அம்பலம்...


தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது-

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு அண்மையில் தாக்கல்செய்த பட்ஜெட்டில், இலங்கை தமிழ் அகதிகளுக்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை எத்தனை பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், அகதிகள் மறுவாழ்வு பதிவேடோ, சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கி இருப்பதாகவும், முகாம்களுக்கு வெளியே சுமார் 40 ஆயிரம் பேர் உள்ளதாகவும் தெரிவிக்கிறது.

ஒரு லட்சத்தை நெருங்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி போதுமானதா? அவர்களின் வாழ்வாதாரம் எப்படி உள்ளது?

மத்திய - மாநில அரசுகளின் உதவிகள் குறித்து முகாம்களில் வசிக்கும் அந்த மக்கள் என்ன சொல்கிறார்கள்? என்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமுக்கு நேரில் சென்று விசாரித்தோம்.

முகாம்களில் இருந்தவர்களிடம் பேசிய போது ஒருவர்கூட வெளிப்படையாகப் பேசுவதற்கு முன்வரவில்லை.

அதற்கு அவர்கள் சொன்ன பதில், "நாங்கள் க்யூ பிராஞ்ச் போலீஸார் கட்டுப்பாட்டில் இருப்பதால் எங்களால் எதையும் வெளிப்படையாகப் பேச இயலாது. எனவே, அவர்களுடைய அனுமதியைப் பெற்றுக்கொண்டு எங்களிடம் வாருங்கள் என்பதுதான்.

விவசாயிகளையே விட்டு விட்டார்கள் எங்களுடைய நலனுக்காகத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இங்குள்ள குறைகளைச் சொன்னால் 'அகதிகளுக்கான பதிவை' பதிவேட்டில் இருந்து எடுத்து விடுவார்கள் என்றனர்.

முகாமில் தங்கியிருக்கும் மக்களிடம் பேச க்யூ பிரிவு போலீசார் அனுமதிக்க மாட்டர்கள் என்று தெரிந்தும் அந்த அலுவலகத்திற்கு போய் அனுமதி கோரிய போது, சம்பந்தப்பட்ட போலீஸார் வெளியில் சென்றிருந்தது தெரிய வந்தது.

பின்னர் அங்கிருந்த ரமேஷ் என்பவரிடம் முகாமின் நிலை குறித்து கேட்டோம். அவர் சொன்ன வார்த்தை, மத்திய-மாநில அரசுகளுக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக இருந்தது.

நாட்டுக்கே சோறு போடும் விவசாயிகள், பட்டினியோடு தலைநகர் டெல்லியில் அரை நிர்வாணமாகப் போராடுகிறார்கள். அவர்களையே கண்டுகொள்ளாத மத்திய அரசு, அகதிகளான எங்களையா ஏறெடுத்துப் பார்க்கப் போகிறது? என்றார் அவர்
தொடர்ந்து நீண்ட மௌனத்திற்குப் பிறகு ரமேஷ் பேசினார். என்னுடைய புகைப்படத்தை பிரசுரிக்க வேண்டாம். அப்படி, புகைப்படத்துடன் எழுதினால், அகதிகளுக்கான பதிவேட்டில் இருந்து என் பெயரை நீக்கி விடுவார்கள்.

தற்போது, கிடைத்து வரும் ஒருவேளை, அரை வேளை உணவும் கிடைக்காமல் போய்விடும். இந்த முகாமில் 936 குடும்பங்களைச் சேர்ந்த 3,800 பேர் உள்ளோம்.

நபர் ஒருவருக்கு அரசு தருகிற 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலான பணத்தை வைத்துக் கொண்டு, அகதிகளால் என்ன செய்ய முடியும்.

கடந்த 26 ஆண்டுகளாக 3 வேளை சாப்பாட்டுக்கான போராட்டமாகத்தான் எங்களுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது என்று சோகத்துடன் தெரிவித்தார்.

கல்லூரியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

அகதிகள் முகாம் அகதிகளுக்காக மத்திய-மாநில அரசுகளின் உதவித்தொகை போதவில்லை என்பதால், இங்குள்ள மக்கள் அருகாமையில் உள்ள நிறுவனங்களுக்கு தினக்கூலி வேலைக்குச் செல்கின்றனர்.

பெயிண்டிங், லோடு இறக்குதல், பெண்களாக இருந்தால் வீட்டுவேலை என மாறிமாறி கிடைக்கின்ற வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவி வருகிறோம்.

இதில் எல்லா நாட்களும் வேலை கிடைப்பதில்லை. சாப்பாட்டுக்கும், உடைகளுக்குமே அல்லாடிக் கொண்டிருக்கிறோம். இதில் பிள்ளைகளை எப்படி படிக்க வைக்கமுடியும்?

அப்படியே படிக்க வைத்தாலும் இங்கே எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது. 12-வது படிப்பதற்கு பஜார் பக்கம் உள்ள பள்ளிக்குப் போக வேண்டும். இவ்வளவு சிரமங்களைத் தாண்டி பிள்ளைகளை படிக்க வைக்க முடியல.

அப்படியே பள்ளிப்படிப்பை முடித்தாலும், கல்லூரிப் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது.அகதிகளுடைய பிள்ளைகள் அரசுக் கல்லூரியில் சேர முடியாது.

என் மகன் இந்த வருடத்துடன் 12-ம் வகுப்பை முடிக்கப் போகிறான். அவனை கல்லூரியில் சேர்க்க வேண்டும். அரசு கல்லூரி எனில், கட்டணம் குறைவாக இருக்கும். எனவே, எப்படியாவது கடன் வாங்கியாவது சேர்த்து விடுவேன்.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளில் எப்படி எங்களால் சேர்த்து பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும்? 12-ம் வகுப்பு வரை படிக்க வைப்பதற்கே மிகவும் கஷ்டப்பட்டேன்.

advertisement
இந்தப் பிரச்சினை எங்க குடும்பத்துக்கு மட்டுமில்ல. இங்குள்ள எல்லாருடைய குடும்பத்திற்கும் இதே நிலைதான். பிள்ளைகளை படிக்க வைக்க முடியாம அனைவருமே திண்டாடுறாங்க.

அரசு நினைத்தால் எங்களுக்கும் குடியுரிமை வழங்கி, எங்கள் வாழ்வையும் முன்னேற்ற வழிவகை செய்ய முடியும்" என்றார் அவர்.இதைத் தெரிவிக்கும் போது கண்கலங்கியவர் மீண்டும் தொடர்ந்தார்.

குடியுரிமை இல்லாத காரணத்தால்தானே பிள்ளையைப் படிக்க வைக்க முடியவில்லை என்ற யோசனை வரும். சொந்த நாட்டுக்கே திரும்பிடலாம்னு யோசிச்சா, கடந்த 26 வருடங்களாக கல்லு கட்டிடம் மாதிரி வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி வருகிறோம்.

திரும்பவும் எங்கள் நாட்டுக்குப் போனா, அங்கே வாழறதுக்கு ஆரம்பத்தில் இருந்தே வழிதேடணுமே? என்ற பயம் எங்களைத் தொற்றிக் கொள்ளும். இந்த கேள்விகளோடு தான் ஒவ்வொரு நாளும் ஓடிகிட்டு இருக்கு என்றார் ரமேஷ்.

மருத்துவமனை இல்லாத அவலம்!

இதனைத்தொடர்ந்து முகாமின் அடுத்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே சைக்கிளில் வந்தவரை மறித்துப் பேசினோம்.

என்னுடைய பெயர் கிருபாகரன் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசத் தொடங்கினார். அரசு கொடுக்கிற நிதியுதவியை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? நல்ல பள்ளிக்கூடம் இல்லை. மருத்துவமனை இல்லை. யாருக்காவது உடல்நிலை சரியில்லைன்னா கவரப்பேட்டைக்குத்தான் போகணும்.

இந்தப் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரால், இங்குள்ள மக்களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது.

பலமுறை இதுதொடர்பாக, தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டோம். ஆனாலும் அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

நிலம், வீடு உள்ளிட்ட வசதிகளோடு வாழ்ந்து விட்டு இங்கே பிச்சைக்காரர்களை விட மோசமான வாழ்கையைத்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சில நேரத்தில்,சொந்த நாட்டிற்கு போய் விடலாம்னு தோணும். அங்கே போனாலும் தங்குவதற்கு வீடு வேண்டும். புதிய தொழில் தொடங்க பணம் வேண்டும். அதனால் இங்கேயே அகதிகளாகவே காலத்தை ஓட்டி விடலாம் என்று மனசை தேற்றிக்குவேன் என்றார்.

பல்வேறு இடங்களில் சுவர் இடிந்தும், கம்பிகள் தொங்கிக்கொண்டும் காணப்படும் முகாம் வீடுகள், அந்த மக்களின் வறுமையை மௌனமாக சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒவ்வொருவர் வீட்டிலும் வளர்க்கப்பட்டுள்ள செடிகளும், மரங்களும் சிரித்துக் கொண்டிருந்தன.

சீருடை வாங்க காசில்லை!

முகாமில் வளர்ந்துள்ள மரங்கள்தான் இங்குள்ள மக்களின் கவலையைப் போக்குகிறதோ என்று எண்ணிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கையில், ஒரு சிறுமி எதிர்ப்பட்டாள். அவளிடம் பேசினோம்.

என் பெயர் குட்டி. நான் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். இவ்ளோ படித்ததே பெரிய விஷயம். என் அம்மா தெய்வானை. எங்கள் வீட்டில் மொத்தம் மூன்று பெண் பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள்.

அப்பா சரியாக காசு கொடுக்க மாட்டார். வாரத்திற்கு 300 ரூபாய் தருவார். அரசின் உதவித்தொகை வருகிறது. ஒரு சிறிய குளிர்பானக் கடை நடத்தி வருகிறோம். அதில் கிடைக்கும் 50 ரூபாய், 100 ரூபாய் வருமானத்தைக் கொண்டுதான் எங்கள் குடும்பம் கழிகிறது என்றாள்.

புத்தகத்தைச் சுமக்க வேண்டிய வயதில் குடும்ப பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் சிறுமியை நினைத்துப் பாராட்டுவதா, வேதனைப்படுவதா என்றே தெரியவில்லை.

சில நேரங்களில் சாப்பாட்டுக்கே கஷ்டம்தான். என் தம்பிகள், தங்கைகள் நன்றாகப் படிக்க வேண்டும். அவர்கள் படித்து வேலைக்குப் போனால் குடும்ப கஷ்டம் குறைந்து விடும். ஆனால், அவர்களைப் படிக்க வைக்க பணம் இல்லை. புத்தகம், சீருடை வாங்கக் கூட காசில்லை.

பள்ளியில் இரண்டு சீருடைதான் கொடுக்கிறார்கள். அந்த சீருடையும் கிழிந்து விட்டது. தம்பி கிழிந்த சட்டையோடுதான் பள்ளிக்குச் செல்கிறான். அவனுக்கு எப்படியாவது, புதிய சட்டை வாங்கி கொடுக்கணும்னு நினைப்பேன். ஆனா வர்ற காசு குடும்பச் செலவுக்கே போதாது" என்று அந்தச் சிறுமி சொன்னபோது,

பிரதமர் நரேந்திரமோடி, தான் அணிந்திருந்த சால்வையை ஒரு பெண் கேட்டார் என்பதற்காக, அதனை அனுப்பிய செய்திதான் என் நினைவில் வந்து நின்றது.

அகதிகள் முகாம்"என் வீட்டிற்கு வாருங்கள்" என அந்தச் சிறுமி அவள் வீட்டைக் காட்டியபோது, மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது.

மிகவும் குண்டும், குழியுமாக நான்கு சவுக்குக் கம்புகள் மட்டுமே நடப்பட்டு, அதன் மேல் இருந்த கூரையில் கிழிந்த பாய்களும், எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடக் கூடிய நிலையில் சில காய்ந்த ஓலைகளும் போடப்பட்டிருந்தன. இந்த வீட்டில்தான் ஏழு பேர் வசிக்கிறோம் என்றாள்.

தொடர்ந்து, "எங்களை விடவும் அருகில் உள்ள கவுரி அக்காவின் வீடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மூன்று பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

அவர்களுக்கு அரசின் அகதிகள் உதவித் தொகைகூட கிடைப்பதில்லை. அரசாங்கம் அவர்களுக்கு உதவித்தொகை கொடுத்தால் ஓரளவுக்கு பிரச்சினை குறையும் என்று அவள் கூறியது நம்மை நெகிழ வைத்தது.

அந்தச் சிறுமியின் நிலையையும், அங்கு வசிக்கும் அகதிகளின் வாழ்வாதாரத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்த பின்னர், நம் மனம் மிகுந்த பாரத்துடன் பயணத்தைத் தொடர்ந்தது.

கும்மிடிப்பூண்டி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் கேட்பதெல்லாம், பெரிய வசதியான வாழ்க்கையோ, ஆடம்பர மாளிகைகளோ அல்ல

தாங்கள் அன்றாடம் பசியின்றி வாழவும், கடும் மழை, வெயிலில் இருந்து பாதுகாப்புடன் வசிக்கவும் ஏற்ற வாழ்வாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே.

மத்திய அரசு தங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கினால் மகிழ்வோம்; அல்லது தங்கள் சொந்த நாட்டிற்குச் சென்று வாழ்க்கையை புதிதாகத் தொடங்க ஏதுவாக குறிப்பிட்ட உதவித் தொகையையாவது வழங்க வேண்டும் என்பதுதான்.

அரசு அவ்வாறு செய்தால் மட்டுமே, இந்த சமூகத்தில் எங்களாலும் கல்வி அறிவு பெற்றவர்களாக உயர முடியும் என்பதே இவர்களின் கண்ணீர்க் குரல்களாக ஒலிக்கிறது!

இந்தக் குரல்கள் மத்திய, மாநில அரசுகளின் காதுகளுக்கு கேட்குமா?

- Vikatan-முள்ளிக்குள மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.-தோழர் பாலன்

11 ஆண்டுகளாக வாழ்ந்த அகதி வாழ்வு போதும். எமது பூர்வீக காணிகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என முள்ளிக்குள மக்கள் அறிவித்துள்ளனர்.

முள்ளிக்குள மக்களின் கோரிக்கை நியாயமானது. கடற்படை உடனே வெளியேறி அந்த மக்களின் காணிகளை ஒப்படைக்க வேண்டும்.

முள்ளிக்குளத்தை உள்ளடக்கிய மன்னார் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இருக்கிறார்.

 முள்ளிக்குள மக்களின் 11வருட கொடிய அகதி வாழ்வு அவருக்கு எந்தளவு புரிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

ஏனெனில் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதற்காக 5 கோடி ரூபா குறைநிரப்பு பிரோரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

வாக்கு போட்ட தொகுதி மக்கள் தமது 11 வருட அகதி வாழ்வுக்கு எதிராக போராடுகிறார்கள். ஆனால் பதவி பெற்ற செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அவர்களோ தமக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்கிறார்.

சம்பந்தர் அய்யா ஒரு சின்ன அறையில் வாழ்வதாக சுமந்திரன் கூறுகிறார். ஆனால் சம்பந்தர் அய்யாவின் அந்த சின்ன அறையை அலங்கரிப்பதற்காக 3 கோடி ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.

ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதியளித்து பதவியை பெற்ற சம்பந்தர் அய்யா தனக்கு சொகுசு பங்களாவும் சொகுசு வாகனமும் பெற்றுள்ளார்.

முள்ளிக்குள மக்கள் சொந்த வீடுகளை இழந்து 11 வருடமாக அகதியாக வாழ்கிறார்கள். ஆனால் சம்பந்தர் அய்யா சொகுசு பங்களா பெற்றது மட்டுமன்றி அதனை அலங்கரிக்க 3 கோடி ரூபாவையும் அரசிடம் கேட்டு பெற்றுள்ளார்.

தமக்கு சொகுசு வாகனம், சொகுசு பங்களா கேட்டு வாங்கிய இந்த தலைவர்களால் தமக்கு வோட்டுபோட்ட மக்களின் சொந்த காணிகளை ஏன் அரசிடம் கேட்டு வாங்க முடியவில்லை?

என்ன கொடுமை இது?

Balan tholar 

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் தேவையா?


மாகாண சபைகள் அமைக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரை அது பற்றி பலவிதமான விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. மாகாண சபைகளினால் எதனை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதையிட்டும் அதன் செயல்பாடுகளை எவ்வாறு நெறிப்படுத்தலாம் என்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தாது குறுகிய நோக்கத்துக்காக தங்கள் கருத்துக்களை பலர் முன்னர் இருந்தே தெரிவித்து வந்துள்ளார்கள்.

புதிய அரசியல் அமைப்போடு மாகாண சபை என்னும் தலைப்பு மீண்டும் அரங்கத்துக்கு வந்துள்ளது. அது தொடர்பான கருத்துகளே முன்வைக்கப்பட்டுள்ளன.

கேள்வி: மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் போதுமானதில்லையா?

பதில்: இங்குள்ள ஆரம்ப தவறுதான் இது. இதன் விடயங்கள் கட்டுக்கோப்பு, நடுநிலை, இணைந்த என்ற மூன்று விடயங்களாக பிரிந்து இருப்பதாகும். கட்டுக்கோப்புடையவர்களை இணைந்தவர்கள் ஆக்குகின்றோம். இணைந்தவர்களை கட்டுக்கோப்புடையவர்கள் ஆக்குகின்றோம்.

மாகாண சபைகள் செய்யும் வேலையை மத்திய அரசும் செய்கின்றது. மத்திய அரசு செய்யும் வேலையை மாகாண சபைகளும் செய்கின்றது.இதன் மூலம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் சரியான முறையில் அதிகாரத்தை பரவலாக்கம் செய்யாமல் பிரித்து வேறுபடுத்தாததாகும். நாம் இவை எங்குள்ளன என்று நினைத்து சட்டங்களை தயாரித்து நடவடிக்கையில் ஈடுபடும்போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இதைத் தவிர சுற்றுநிருபர்கள் மூலம் மத்திய அரசு பலவற்றை சுவீகரிக்கின்றது. உதாரணமாக விவசாய சேவைகள் என்பது பரந்துபட்ட விடயமாகும். ஆனால் கடந்த காலங்களில் அதாவது இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசு தனக்குக் கீழ் கொண்டு வந்தது.அது அரசியல் அமைப்புக்கு உட்பட்டதல்ல.

அரசியலமைப்பில் உள்ளதை மாற்ற வேண்டும் என்றால் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு செல்ல வேண்டும். அதேபோல் தற்போது பல அமைச்சுக்களினூடாக இவை நடைபெற்று வருகின்றன. அதனால் அதிகாரத்தை சரியான முறையில் வழங்க வேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி: இதனால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் என்ன?

பதில்: மாகாண சபைகளுக்கு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வரை நிதி கிடைக்கவில்லை. அதனால் செய்ய வேண்டியிருந்த எவ்வித நடவடிக்கைகளும் நடைபெறவில்லை. அதற்காக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். அதனால் இவ்வாறான சிரமங்களுக்கு நாம் முகம்கொடுக்கின்றோம்.

கேள்வி: இதற்கு தீர்வாக எவ்வாறான யோசனைகளை நீங்கள் முன்வைக்கின்றீர்கள்?

பதில்: கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களையாவது சரியான முறையில் முகாமைத்துவப்படுத்தி உறுதியாக வழங்குவதாகும். உதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் அங்கு பிராந்திய அரசாங்கங்களுக்கு சுயாதீனமாக நடவடிக்கையில் ஈடுபட இடமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இது இந்தியாவில் இருந்து வந்தாலும் இங்கு அவ்வாறில்லை. அனைத்துமே மத்திய அரசாங்கத்தினூடாக நடைபெறுகின்றது.சரியான முறை என்னவென்றால் கொள்கைகளை திட்டமிட மத்திய அரசாங்கம் முன்னின்று செயல்பட்டு அதனை நிறைவேற்றும் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும்.

தற்போது பிரதேச சபைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக நாம் விசாரணை மற்றும் ஆய்வுகளை செய்கின்றோம்.ஆனால் அதன் நடவடிக்கைகளில் மாகாண சபை தலையீடு செய்யாது சுயாதீன நிறுவனமாக பிரதேச சபை அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

பரவலாக்கம் என்னும் விடயத்தின் அர்த்தம் பரவலாக்கம் தானே. அதனால் அதிகாரத்தை புதிதாகப் பெறுவதை விட தற்போது பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை சரியான முறையில் வழங்கி சுயாதீனமாக மாகாண சபையில் நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய பின்னணியை உருவாக்க வேண்டும்.

கேள்வி:
நீங்கள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் தொடர்பாக அதிகாரம் தேவை என எண்ணுகின்றீர்களா?

பதில்: மாகாண சபைகளுக்கு ஏன் பொலிஸ் அதிகாரம்? யுத்தம் புரியவா? உண்மையில் பொலிஸ் அதிகாரம் சிவில் பாதுகாப்பை வழங்கவே தேவைப்படுகின்றது. அதற்கு குண்டாந்தடியை கொண்டு செல்வது தவிர ரி-56 ஐ கொண்டு செல்வதல்ல. அது பிரதேச பரிபாலனத்திடம் இருக்க வேண்டும்.

காணி உரிமை தற்போது மாகாண சபைகளிடமே உள்ளது. ஒரு விடயம் எமக்கு தேவையானவாறு வெளியாட்களுக்கு கொடுக்க முடியாது. அரச காலத்திலிருந்தே உள்ள சட்டம் என்னவென்றால் ஒரு காணியை இன்னொருவருக்கு வழங்குவதாயின் அதனை அவராலேயே வழங்க முடியும். அது இன்னுமுள்ளது.

பரிந்துரையை மாகாண சபை வழங்கும். அதை அந்நியருக்கு வழங்குவது தொடர்பாக முடிவுக்கு கையொப்பம் இடுவது ஜனாதிபதியேயாவார். ஆனால் இங்கு அதிகாரம் கேட்கப்படுவது மாகாண சபைகளுக்கு தேவையான விதத்தில் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காகும். நான் நினைக்கின்றேன் இது சிறந்ததல்ல.

கேள்வி: மாகாண சபைகள் முறை இல்லாமல் ஆக்கப்படுமா?

பதில்: மாகாண சபைகள் முறை இல்லாமல் ஆக்கப்படமாட்டாது. அது தான் அரசியல் உண்மை. உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சி புரிதல் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் நியாயம் தான் ஈடுசெய்தலாகும். அதன் மூலம் நடைபெறுவது என்னவென்றால் மேல் மட்டத்தில் உள்ள அதிகாரம் கீழ்மட்டத்தில் செயல்படுவதாகும். இந்த மாகாண சபை முறையிலும் இது தான் நடைபெறுகின்றது.

மாகாண சபை முறை எமது நாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டதற்கு இனப்பிரச்சினையே காரணமாகும். இம்முறைமூலம் கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதிகாரம் ஏனைய மாகாணங்களுக்கும் பிரிக்கப்பட்டது. இவ்வாறு அதிகாரம் பரவலாக்கியதன் மூலம் நிர்வாகத்தின் பரிசுத்த தன்மை தெரியத் தொடங்கியது.

ஏனென்றால் அரசாட்சி மக்களை நெருங்கும்போது தான் அதன் பரிசுத்தன்மை தெரிய வருகின்றது.அதேபோல் முன்னேற்றமடையாத மாகாணங்களை அபிவிருத்தி அடையச் செய்யவும் மாகாண சபைகளை உபயோகிக்கலாம்.

மொனறாகலை பிரதேசத்தைப் பார்க்கும்போது சில அபிவிருத்தி சுட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தைவிட கீழ் மட்டத்திலேயே உள்ளன. ஏனென்றால் மொனறாகல பற்றி முடிவுகளை எடுப்பது கொழும்பிலிருந்து தான். அம்முடிவுகள் மொனறாகலை அபிவிருத்திக்கு காரணமாக அமையாது. எல்லாம் கொழும்பில் நடைபெறுவதன் தவறுதான் அது.

கேள்வி: அதாவது மாகாண சபைகள் இருந்தும் இன்னும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இந்த தவறை எவ்வாறு திருத்தம் செய்வது?

பதில்: புதிய அரசியலமைப்பில் ஆட்சி அதிகாரத்தை பிரதேச சபை நிறுவனங்களுக்கும் வழங்குவதே நோக்கமாகும். அதாவது சட்டமியற்றும் அதிகாரம் அல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை இந்நிறுவனத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது முன்னேற்றமடையாத பிரதேசங்களை விரைவாக முன்னேற்ற அப்பிரதேச மக்களால் இயலுமாக இருக்கும்.

கேள்வி: இன்னும் இம்முறையின் கீழ் எதிர்பார்த்த அபிவிருத்தியை அடைய முடியாதுள்ளது. இதனை யதார்த்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் மாகாண சபைகளின் அதிகாரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டுமென எண்ணுகின்றீர்களா?

பதில்: அதனை இதற்கு மேல் அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு பிரச்சினையாக இருப்பது அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியாத வகையில் சில தடைகள் காணப்படுவதாகும்.மாகாண சபை உறுப்பினர்களின் குற்றச்சாட்டானது 13வது அரசியலமைப்புத் திட்டத்தில் அதிகாரத்தை வலது கையால் கொடுத்து இடது கையால் பெறுகின்றார்கள் என்பதாகும்.

அதனால் வஞ்சகம் செய்யாமல் 13 வது அரசியல் திருத்தத்தின் மூலம் வழங்கிய அதிகாரத்தை மாகாண அபிவிருத்தியைத் துரிதப்படுத்த வழங்குமாறே அவர்கள் கேட்கின்றார்கள்.தற்போதுள்ள அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையிலுள்ள சட்ட சிக்கல்களை விடுவித்துத் தருமாறு அவர்கள் கேட்கின்றார்கள்.

 இங்கு புதிய அரசியலமைப்புக்கு சிறந்த யோசனையை வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை விட தெற்கிலுள்ள ஏழு மாகாண சபைகளின் உறுப்பினரகளே அளித்துள்ளார்கள். ஆகவே சட்ட திட்டங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே இங்கு மிக முக்கியமாகும்.

கேள்வி: காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக சமூகத்திலுள்ள சந்தேகங்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: தற்போதும் அந்த அதிகாரம் உண்டு. நடைமுறைப்படுத்த வேண்டியதுதான் அவசியமாகவுள்ளது. 13வது அரசியலமைப்பில் உள்ள தேசிய காணி ஆணைக்குழுவை செயல்படுத்தினால் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது.

கர்ப்பிணிப் பெண் படுகொலை; டி.என்.ஏ பரிசோதனை இன்று.....


ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரதும் மற்றும் அயல் வீட்டுக்காரரதும் இரத்த மாதிரியை பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் குறித்த நபரது இரத்த மாதிரியை பெற்று அதனை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளிக்க யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம். எம்.றியால் பணிப்புரை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் எனும் பிரதேசத்தில் வீட்டில் தனித்திருந்த ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் இனந்தெரியாத சிலரால் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவத்தையடுத்து குறித்த கொலையை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்திருந்தனர். அத்துடன் இவர்களது வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம் பெற்று வருகின்றது.

இவ்வாறன நிலையில் நேற்றைய தினம் இவ் வழக்கானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது குறித்த இரண்டு சந்தேக நபர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அத்துடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரும் அவர்களது அயல் வீட்டுக்காரரும் நீதிமன்ற அழைப்பின் பெயரில் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது ஊர்காவற்றுறை பொலிஸார் இவ் வழக்கு தொடர்பான விசாரணையை முன்னெடுத்து செல்வதற்கு குறித்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரதும் குறித்த மன்றில் முன்னிலையாகியிருந்த அயல் வீட்டுக்காரரதும் டி.என்.ஏ மாதிரி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அதற்கான கட்டளையை மன்று ஆற்ற வேண்டும் எனவும் மன்றை கோரியிருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மற்றைய நபரிடமும் மன்றானது டி.என்.ஏ மாதிரியை பெற்றுக்கொள்வதற்கான சம்மதத்தை மன்றானது பெற்றுக்கொண்டதையடுத்து குறித்த இருவரையும் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலையாகுமாறு மன்றானது கட்டளையை பிறப்பித்தது.

தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி குறித்த இரு நபர்களிடமும் பெற்றுக்கொள்ளும் டி.என்.ஏ இரத்த மாதிரியை உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்ப திகாரியிடமோ அல்லது அவரது பிரதிநிதியிடமோ கையளிக்க வேண்டும் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்றானது பணிப்புரை பிறப்பித்திருந்தது.
அத்துடன் இவ் வழக்கு விசாரணையை நாளைய தினம் வரை ஒத்திவைக்கவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை கடந்த வழக்கு தவணையின் போது குறித்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரின் இரத்த மாதிரியை இன்றைய தினம் பெற்றுக்கொள்ளுவதற்காக குறித்த சந்தேகநபரை யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்த சிறைச்சாலை அதிகாரிக்கு நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.                 

முதுகெலும்புடைய தலைவர்கள் தேவை – நிலாந்தன்

கேப்பாப்பிலவில் படைத்தளத்தின் முன்பாக நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கும் போர்த்தாங்கியின் நிழலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களில் இருவர் கடந்த வாரம்; சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள். இவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கிய பொழுது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களைச் சந்தித்தார்கள்.

சாகும் வரையிலுமான உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். திலீபன், அன்னை பூபதி போன்றவர்கள் இவ்வாறு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த போதிலும் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஓர் உயிர்தானும் இழக்கப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்றும் இது தொடர்பில் தாங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்றும் நாடாளுமன்றத்தில் இது பற்றி பேசுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள். எனினும் நிலங்களை மீட்பது தொடர்பில் தங்களுக்குள்ள இயலாமைகளையும் அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் சந்தித்ததையடுத்து சாகும் வரையிலுமான உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ஆனால் முகாம் வாசல் போராட்டம் தொடர்கிறது. இச் சந்திப்புத் தொடர்பில் சில கேள்விகள் எழுகின்றன. உண்ணாவிரதிகளுக்கு வாக்களித்தபடி மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதால் மட்டும் அரசாங்கம் அசைந்து விடுமா?

🏃ஏற்கெனவே சம்பந்தரும், சிவசக்தி ஆனந்தனும் உரையாற்றியதை விடவும் இவர்கள் கூடுதலாக எதை உரையாற்றப் போகிறார்கள்? அப்படி உரையாற்றி ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்றால் வேறெப்படி அழுத்தங்களைப் பிரயோகிப்பார்கள்? குறைந்தபட்சம் போராடும் மக்களோடு வந்திருந்து தாங்களும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்களா? அல்லது அதை விடக் குறைந்த பட்சம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் தாம் தமது பதவிகளைத் துறப்போம் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பார்களா?

இக் கேள்விகள் மக்கள் பிரதிநிதிகளை நோக்கி மட்டும் கேட்கப்படும் கேள்விகள் அல்ல. அவர்களைத் தெரிவு செய்யும் பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையை நோக்கியும் கேட்கப்படும் கேள்விகள்தான். இவை கேப்பாப்பபிலவு போராட்டத்தோடு மட்டும் தொடர்புடைய கேள்விகள் அல்ல. பெருந்தமிழ்ப்பரப்பையும், உள்ளடக்கி இந்திய உபகண்டத்தை நோக்கியும் கேட்கப்படும் கேள்விகள்தான்.

பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமைக்கூடாக தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தமது மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் எது வரையிலும் போராடலாம்? எப்படிப் போராடலாம்? அந்தத் தலைவர்கள் போராட வேண்டிய ஒரு களத்தில் சாதாரண சனங்கள் போராடுகிறார்கள் என்றால் அந்தத் தலைவர்களுக்குரிய வேலை என்ன? தலைவர்கள் செய்யத் துணியாத காரியங்களை சாதாரண சனங்கள் செய்கிறார்கள் என்றால் தலைவர்கள் எதற்கு?

தலைவர்களுகாகக் காத்திருக்காமல் போராட முன்வரும் சாதாரண சனங்கள் தேர்தல் என்று வரும்பொழுது ஏன் மேற்படித் தலைவர்களையே தெரிவு செய்கிறார்கள்? அல்லது தாங்களே தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏன் அவர்கள் முன்வருவதில்லை? அல்லது அவர்கள் போட்டியிட முடியாதபடிக்கு பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையானது மூடப்பட்ட ஒன்றாகக் காணப்படுகிறதா? அப்படியென்றால் போராடத் தயாராக இருக்கும் மக்களுக்கு போராடத் தயாரற்ற தலைவர்கள் எப்படித் தலைமை தாங்கலாம்?

மேற்படிக் கேள்விகளை முன்வைத்து சில வகைமாதிரி உதாரணங்களை இங்கு பார்க்கலாம்.

முதலாவது அண்மையில் தோற்கடிக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த உண்ணாவிரதப் போராளியான இரோம் சர்மிலா சானு. அவர் தனது மக்களுக்காக பதினாறு ஆண்டுகள்; உண்ணாவிரதம் இருந்தார். அந்த உண்ணாவிரத்திலேயே அவருடைய இளமை கரைந்து போனது. அவர் திருமணம் செய்யவில்லை. பதினாறு ஆண்டுகளின் பின் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு தொன்ணூறு வாக்குகளே கிடைத்தன. எந்த மக்களுக்காக அவர் தன்னை ஒறுத்துப் போராடினாரோ அதே மக்கள் அவரைக் கேவலமாக தோற்கடித்தார்கள். அதே சமயம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கிறிமினலை தமது பிரதிநிதியாக தெரிந்தெடுத்திருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் கிடைத்ததும் சர்மிலா கண் கலங்கியபடி சொன்னார். ‘நான் இனி இந்தப் பக்கம் கால் எடுத்து வைக்க மாட்டேன்’ என்று. ஒரு மகத்தான போராளி பிரதிநிதித்துவ ஜனநாயக்தின் பக்கம் இனி காலெடுத்து வைக்க மாட்டேன் என்று கூறும் அளவிற்குத்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் ஒன்றின் உள்விரிவு காணப்படுகிறதா?

சர்மிலாவின் தோல்வியிலிருந்து இந்திய ஜனநாயக முறைமை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பித்திருக்கின்றன. இ.வெ.ரா.பெரியார் ஒரு முறை கூறினார் ‘ஜனநாயகம் என்றால் மக்களாட்சி என்பதுதான் உண்மையான கருத்து. அப்படிப்பட்ட ஜனநாயகத்திற்கு மக்கள் அறிவாளிகளாகவும்,ஓரளவிற்காவது யோக்கியர்களாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்’ என்று. இது சர்மிலாவைத் தோற்கடித்த அவருடைய ஜனங்களுக்குப் பொருந்துமா? அல்லது சர்மிலா போட்டியிட்ட பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையின் செழிப்பின்மைதான் அவரைத் தோற்கடித்ததா? சர்மிலாவின் தோல்வி இலட்சியவாதத்தின் தோல்வியா? அல்லது இந்திய ஜனநாயக பாரம்பரியத்தின் தோல்வியா?

சொத்துக்களைக் குவித்த நடிகைகள் பெருந்தலைவிகளாக வர முடிகிறது. ஆனால் தனது மக்களுக்காக உயிரைத் துறக்கச் சித்தமாயிருந்த ஓர் இலட்சியவாதிக்கு தொன்ணூறு வாக்குகளே கிடைத்திருக்கின்றன. இலட்சியவாதிகளையும், தியாகிகளையும் தெரிந்தெடுக்க முடியாத அளவிற்கு இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை காணப்படுகின்றதா? அல்லது வாக்கு வேட்டை அரசியலின் நெளிவு சுழிவுகளோடு தன்னைப் பொருத்திக் கொள்வதற்கு ஓர் இலட்சிய வாதியால் முடியவில்லையா? அல்லது அவருடைய இலட்சிய வாதத்தை மக்கள் மயப்படுத்த அவரால் முடியவில்லையா? இது முதலாவது உதாரணம்.

இரண்டாவது உதாரணம் தமிழகத்துப் போராட்டங்கள். அண்மையாண்டுகளாக தமிழகத்தில் இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிகளில் அரசியல் வாதிகள் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவை அரசியல்வாதிகளை நீக்கிய போராட்டங்களாக காணப்படுகின்றன. ஆனால் அரசியல் நீக்கப்பட்ட போராட்டங்கள் அல்ல. அரசியல்வாதிகளை நீக்கியது என்பதே ஓர் அரசியல்தான். இவ்வாறு அரசியல்வாதிகளை நீக்கும் மக்கள் தேர்தலின் போது யாரைத் தெரிவு செய்கிறார்கள்? அல்லது அவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாரைத் தெரிவுசெய்கிறார்கள்? அவர்களால் அல்லது அவர்களுடைய குடும்பத்தவர்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை நீக்கும் ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது? தலைவர்கள் பொருத்தமில்லை என்றால் ஒரு மாற்றுத் தலைமை குறித்தே சிந்திக்க வேண்டும்.

தன்னெழுச்சிப் போராளிகள் அண்மையில் ஒரு கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதில் இடமில்லை என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் பக்கத்து நாடாகிய சீனாவில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களைத் தான் இளம் தலைவர்கள் என்று அழைக்கப்படுவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடிய செயற்பாட்டாளர்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். அரசியல்வாதிகளை நீக்குவது என்பது ஒரு இலட்சியவாதமாக இருக்கலாம். ஆனால் பொருத்தமான அரசியல்வாதிகளை அரங்கினுள் கொண்டு வரும் போதே தன்னெழுச்சிப் போராட்டங்கள் அவற்றின் உன்னதமான உச்சங்களை அடைகின்றன. இது இரண்டாவது உதாரணம்.

மூன்றாவது உதாரணம். ஓர் உள்ளூர் உதாரணம். சுன்னாகம் நீரில் எண்ணெய் கலந்திருப்பதாக ஒரு சர்ச்சை உண்டு. இது தொடர்பில் வட மாகாணசபைக்கு எதிராக போராட்டங்களும் நடந்திருக்கின்றன. அந்த நீரில் எண்ணெய் இல்லை என்று வடமாகாண சபை கூறுகின்றது. அது நியமித்த நிபுணர் குழுவும் கூறுகின்றது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு வேறு விதமாக உள்ளது. மத்திய அரசாங்கத்தின் அமைச்சரும் நீரில் மாசு உண்டு என்று கூறுகிறார்;. சம்பந்தப்பட்ட பகுதி மக்களில் பலர் இப்பொழுதும் தமது கிணற்று நீரை குடிக்கத் தயாரில்லை. இவ்வாறு தமது கிணற்று நீரை குடிக்கத் தயங்கும் மக்கள் அதில் எண்ணெய் கலந்திருக்கவில்லை என்று கூறும் ஒரு கட்சிக்கே கடந்த பொதுத் தேர்தலின் போது வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள். சுன்னாகம் நீர் தொடர்பில் போராடிய ஒரு பகுதியினரின் பின்னணியில் ஒரு மருத்துவரும் இருந்தார். அவர் பின்னர்; யு.என்.பியின் வேட்பாளராக கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தோற்கடிக்கப்பட்டார். மேற்படி தேர்தல் முடிவுகளை முன்வைத்து பின்வரும் கேள்விகளை எழுப்பலாம்.

1. சுன்னாகம் நீரில் எண்ணெய் கலந்திருந்தாலும் அதற்கு கூட்டமைப்பு பொறுப்பில்லை என்று வாக்காளர்கள் கருதுகிறார்களா?

2. எண்ணெய் கலந்திருந்தாலும் அதை அகற்ற கூட்டமைப்பால் முடியாது என்று மக்கள் நம்புகிறார்களா?

3. எண்ணெய் கலந்திருக்கிறதோ இல்லையோ தேர்தல் என்று வரும் பொழுது இன அடையாளத்தின்பாற்பட்டே மக்கள் சிந்திக்கிறார்களா?

4. மக்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. புத்தி பூர்வமாக யோசிக்காமல் ஒரு பழக்கத்தின் பிரகாரம் அவர்கள் வாக்களிக்கிறார்களா?

இக் கேள்விகளில் எது சரி? தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மருத்துவர் – இவர் போராட்டங்களில் ஈடுபட்டவரல்ல- சொன்னார் ‘இந்தச் சனத்திற்கு நஞ்சைக் கலந்து கொடுத்தாலும் வீட்டுக்குத்தான் வாக்களிக்கும் போல’ என்று.

சுன்னாகம் நீர் விவகாரமானது பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையின் கோறையான தன்மையைக் காட்டுகிறதா? அல்லது தமிழ் வாக்காளர்கள் தேர்தல் என்று வரும் பொழுது எப்பொழுதும் பெரும்பாலும் இனரீதியாகவே சிந்திக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறதா?

சுன்னாகம் நீர் விவகாரம் மட்டுமல்ல,தன்னெழுச்சியான போராட்டங்கள் மட்டுமல்ல நிகழ்ந்து கொண்டிருக்கும் ஜெனீவாக் கூட்டத் தொடரும் தமிழ்த் தலைவர்களின் யோக்கியதையை நிரூபித்திருக்கிறது. அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று முதலில் சம்மதம் தெரிவித்த தலைவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வவுனியாவில் நடந்த கூட்டத்தில் நசிந்து கொடுத்திருக்கிறார்கள். அரசுத் தலைவர் மைத்திரியின் வார்த்தைகளில் சொன்னால் அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. அண்மையில் பலாலியில் வைத்து மைத்திரி என்ன சொன்னார்? படையினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நானொன்றும் முதுகெலும்பில்லாதவன் இல்லை என்ற தொனிப்பட அவர் உரையாற்றியுள்ளார்.

மைத்திரி ஏன் அவ்வாறு உரையாற்றினார் என்று சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணத்திற்கு வந்த நோர்வீஜிய தூதரகத்தின் அரசியல் விவகாரத்திற்குப் பொறுப்பான அதிகாரி கேட்டிருக்கிறார். ‘நீங்கள் கொடுத்த துணிச்சல்தான் காரணம். ஐ.நாவும், மேற்கு நாடுகளும் தங்களை எதுவும் செய்யப் போவதில்லை என்று அவர்கள் நம்புவது தான் காரணம்.’ என்று ஒரு சிவில் சமூகப் பிரதிநிதி அவரிடம் கூறியிருக்கிறார்.

தோற்றத்தில் மைத்திரி சாதுவாகத் தோன்றுகிறார். மகிந்தவைப் போல தண்டு சமத்தான உடல் வாகோ முரட்டு மீசையோ அவருக்கு இல்லை. ஆனால் தனது வெற்றி நாயகர்களைப் பாதுகாப்பதற்கு தேவையான முதுகெலும்பு தனக்கு உண்டு என்று அவர் கூறுகின்றார். தன்னுடைய இனத்திற்கு அவர் விசுவாசமாகக் காணப்படுகின்றார். ஆனால் தமிழ்த் தலைவர்கள் அப்படியா இருக்கிறார்கள்? தமது இனத்திற்கு விசுவாசமாக முதுகெலும்போடு நிமிரும் தமிழ்த் தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? வவுனியாவில் தமது முதுகெலும்பை வளைத்துக் கொண்ட தலைவர்களை இதே தமிழ் மக்கள்தானே தெரிந்தெடுத்தார்கள்? ஆனால் அண்மை வாரங்களாக அந்தத் தலைவர்களுக்காக காத்திருக்காமல் முகாம்களின் வாசல்களில் போய் குந்தியிருக்கிறார்கள். இது பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையின் போதாமைகளைக் காட்டுகின்றது.

ஈழத்தமிழர்களுக்கு இப்போது தேவைப்படுவது பங்கேற்பு ஜனநாயக முறைமைதான். ஒரு பேரழிவிற்கும் பெருந் தோல்விக்கும் பின்னரான கடந்த எட்டாண்டு காலப் பகுதி எனப்படுவது தமிழ் மிதவாதத்தின் முதுகெலும்பின்மையைத்தான் நிரூபித்திருக்கிறது. பங்கேற்பு ஜனநாயக முறைமை தொடர்பில் சிந்திக்கவும்,ஆராயவும்,எழுதவும், தர்க்கிக்கவும் வேண்டிய காலம் வந்து விட்டது.

ஐ.நா கூட்டத் தொடரையொட்டி கடந்த மாதம் யாழ் நாவலர் மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பது பற்றிக் கலந்துரையாடுவதற்காக கூட்டப்பட்ட அக் கூட்டத்தல் மிகக் குறைந்தளவு மக்களே பங்குபற்றினார்கள். அதில் தொடக்கத்தில் ஒரு மூத்த சட்டத்தரணி உரையாற்றினார். தமிழரசுக்கட்சியின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவரான அவர் சொன்னார் ‘இக் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக நான் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தேன். ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே வந்திருக்கிறார்கள். இப்படித்தான் சுமாராக அறுபது ஆண்டுகளுக்கு முன்னரும் சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்காக நான் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்திருக்கிறேன்’ என்று.

ஒரு மூத்த சத்தியாக்கிரகியின் கூற்று இது. அறுபது ஆண்டுகளின் பின்னரும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் ஒரு நிலைக்குத்தான் கடந்த எட்டாண்டுகால அரசியல் ஒரு மூத்த சத்தியாக்கிரகியை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இத்தருணத்திலாவது பங்கேற்பு ஜனநாயகத்தை குறித்து தேவையான ஆராய்ச்சிகளைச் செய்யவும் ஈழத் தமிழர்களுக்கேயான புத்தாக்கம் மிக்க செயற்பாட்டு அரசியல் வடிவங்களை கண்டு பிடிப்பதற்கும் தமிழ் மக்கள் முன்வர வேண்டும். இல்லையென்றால்; அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடியும் போது 2019ம் ஆண்டிலும் யாரும் மூத்த சத்தியாக்கிரகி ஒருவர் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்து ஒரு முப்பது பேரைக் கூட்டி கூட்டம் நடத்தும் நிலைமைதான் தொடர்ந்துமிருக்கும்.

தமிழர்களின் பிரச்சினையை மூன்றாவது நாடு தீர்க்கப்போவதில்லை.....!


இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலமே தமிழ் மக்களுக்கான நீடித்து நிலைத்து நிற்கும் தீர்வினைப்பெற்றுக்கொள்ள முடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சத்துருக்கொண்டான் மீன்பிடி நிலையத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரையும் மிகச்சிறந்த சட்டவாதியான சுமந்திரனையும் இன்று தும்படித்துக்கொண்டிருக்கின்றனர். எங்களுடைய சகோதரர்களே இதனைச்செய்கின்றனர்.

எங்களை கூடுதலாக விமர்சிப்பவர்கள் எங்களுடன் இருந்தவர்கள்தான். அவர்கள் உடனடியான ஒரு தீர்வு வரும் என நினைக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.


பல நூல்களை வாசித்துள்ளார். அதன் மூலமும் பல அனுபவங்களைப்பெற்றுள்ளார். அதிகமான இராஜதந்திரிகளையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றார். அதன் மூலமும் அனுபவங்களைப்பெற்றுள்ளார்.

இவற்றினைக்கொண்டு பிரச்சினையினை எப்படி தீர்ப்பது என்பதுதொடர்பில் நடவடிக்கையெடுத்து வருகின்றனர்.

பிரச்சினையை தீர்ப்பது என்பது ஒருவருக்கு தோல்வியேற்பட்டு ஒருவர் வெற்றிபெறும்போது ஏற்படாது. எவருக்கும் தோல்வி ஏற்படக்கூடாது.


போர் வெற்றியை இறுமாப்புடன் கொண்டாடியவர்கள் அழுத்தம் காரணமாக போர்குற்றம் தொடர்பில் விசாரணைசெய்வதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

போர்வெற்றியை கொண்டாடியவர்கள் பான்கீன்மூன் வந்தபோது சிலவற்றை செய்தனர். பின்னர் இலங்கை அரசாங்கம் செய்யாததன் காரணமாக நிபுணர்குழுவொன்றை ஐ.நா.உருவாக்கியது. அதுவந்தபோது இலங்கையில் கற்றறிந்த பாடகங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

இவ்வாறுதான் விடயங்கள் நடைபெற்றுவருகின்றன. இவ்வளவு விடயங்களும் நடைபெறுதவற்கு வெறுமனே சர்வதேச நாடுகள் மட்டும் காரணமல்ல.


இந்த சர்வதேச நாடுகளில் மிக முக்கியமான நாடான அமெரிக்காவினை எங்களது தலைவர்கள் சந்தித்து என்ன பொறிமுறையை கையாள்வதன் மூலம் எங்களது மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கலாம்.

மகிந்த ராஜபக்ஸ சிங்கள மக்களிடம் சென்ற என்னை மின்சார கதிரையில் ஏற்றப்போகின்றார்கள், அதற்காகத்தான் ஜெனிவா தீர்மானம்கொண்டுவரப்படுகின்றது என சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துவந்தார்.

அவரை மின்சாரக்கதிரையில் ஏற்றுவதா? இல்லையா? என்பதை பிறகுபார்க்கலாம்; முதலில் எங்களுக்குரிய நிவாரணத்தை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவேண்டும் என்று கூறினோம்.


இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டாலும் அதன்கீழ் விசாரணைசெய்வதும் இல்லை, அதன் கீழ் வழக்கு தாக்கல்செய்வதும் இல்லை.

ஒவ்வொரு பொறிமுறையினையும் நாங்கள் கையாள அரசாங்கம் எங்களுக்கு எதிரான விடயங்களை கைவிட்டேயாகவேண்டிய நிலைக்கு சென்றுள்ளது.

இன்று எதுவும் நடைபெறவில்லையென்று நாங்கள் கூறிவிடமுடியாது. பல விடயங்கள் 18மாத அவகாசத்திற்குள் நடைபெற்றுள்ளன. சில இடங்களில் இருந்து இராணுவம் நகர்ந்துள்ளது, பல போராளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மீள்நிர்மாணம் என்ற தோனியில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் நினைத்தவேகத்தில் சர்வதேசம் நினைத்தவேகத்தில் நடைபெறவில்லையென்பது உண்மையாகும். ஆனால் அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லையென சொல்லமுடியாது.


வழங்கப்பட்ட கால அவகாசத்தில் இலங்கை அரசாங்கம் என்ன செய்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி இறுதி தீர்மானத்தை வெளியிடவுள்ளது ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு. இன்று கால அவகாசம் வழங்குவதா இல்லையா என்ற கேள்வியெழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரையில் அவர்களுக்கான நீதி நிவாரணங்கள் கிடைக்கவேண்டும். கால அவகாசம் வழங்குவதா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும்.

இலங்கையினை அகற்றிவிட்டு இலங்கை வந்து ஐ.நா.சபை எதனையும் செய்யப்போவதில்லை. ஒரு நாட்டினை வைத்தே ஐ.நா.செயற்படுமே தவிர ஐ.நா.படையினைக்கொண்டுவந்து ஒரு நாட்டின் இறைமைக்கு எதிராக ஐ.நா.செயற்படாது.


அவ்வாறு செய்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. இந்திய படை வந்து இங்கு இறங்கியது. பல பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்ட மூன்றாவது நபர் வந்து எமது பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை.

எங்களது சமாதானத்தை ஐக்கிய நாடுகள் சபையோ வேறு எந்தசபையோ வந்து பறித்து எங்களிடம் தந்துவிட்டு காவல்பார்க்கமுடியாது. அரசாங்கத்திடம் அதன்பொறுப்புகளை கூறி அவர்களாகவே அதனைச்செய்யவேண்டும்.எங்களுக்கான தீர்வானது நின்று நிலைத்து நீடித்துநிற்ககூடியதாக இருக்கவேண்டும்.

சிங்கள மக்கள் மத்தியில் சென்று நாங்கள் ஐ.நா.விசாரணையை ஏற்றுக்கொள்கின்றோம் என்றால் சிங்கள மக்கள் மத்தியில் இன்று கூட்டு எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்பவர்கள் அதனை வேறுவிதமாக பயன்படுத்தும் நிலையேற்படும்.


பத்திரிகையில் வரும் செய்திகள் அனைத்தும் அரசாங்கத்தின் சரியான நிலைப்பாடு என்று எடுக்கமுடியாது.அவ்வப்போது அந்ததந்த மக்களை திருப்திப்படுத்தும் வகையில் சில விடயங்களை சொல்லவேண்டிய நிலையுள்ளது.

எமது உறவுகளிடம் ஒன்றை வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவது ஓரளவுக்கு சரி.ஆனால் தலைமைத்துவத்தினை தேவையற்ற விதத்தில் விமர்சிக்காதீர்கள்.

இதனால் எங்களுக்கு எந்த இழப்பினையும் சந்திக்கப்போவதில்லை.நீங்கள்தான் உங்களது செல்வாக்கினை இழப்பீர்கள்.

ஜனாதிபதி,பிரதமரை தவிர எமது தலைவரை சம்பந்தன் என்று சொல்வதுகுறைவு.சம்பந்தன் ஐயா என்றுதான் கூறுவார்கள்.

ஆனால் எங்களோடு இருந்து பிரிந்துசென்ற சில சகோதரர்கள் வெறும் சம்பந்தன் என்று உறுத்தமாக சொல்கின்றனர்.

நீங்கள் சொல்வதுபோன்று சம்பந்தன் ஐயாவினையும் சுமந்திரனையும் தூக்கியெறிந்துவிட்டு நீங்கள் சொல்பவர்களை வைத்து நடாத்தினால் அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு கொண்டுசெல்லப்போவார்கள்.உங்களுககு; அந்த தகுதியில்லையென மக்கள் உங்களை நிராகரித்துள்ளனர்.

தந்தை செல்வாவினை ஜி.ஜி.பொன்னம்பலம் செவிடன் என்று ஏளனப்படுத்தியபோதும் தந்தை செல்வா அவரை இறுதி நேரத்தில் அழைத்துவந்தார், தமிழர் விடுதலைக்கூட்டணியை உருவாக்கி ஜி.ஜி.பொன்னம்பலம் உயிரிழந்தபோது முழு தமிழர்களும் அஞ்சலி செலுத்தும் நிலைமையினை தந்தை செல்வாவே ஏற்படுத்தினார்.

சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரை போராட்டம் தொடரும்! கேப்பாப்புலவு மக்கள் திட்டவட்டம்....


எமது சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரையும் இந்தப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என கேப்பாப்புலவில் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி முதல் கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 17வது நாளாகவும் தொடர்கிறது.

இலங்கையின் வடபகுதியில் மிக நீண்டகாலமாக வரலாற்று ரீதியாக மக்கள் வாழ்ந்த பகுதிகளில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு காணப்படுகின்றது.

கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் ஆகிய பகுதிகளில் படையினர் வசமிருந்த 528 ஏக்கர் காணிகளில் பிலக்குடியிருப்பு பகுதியில் 42 ஏக்கர் காணிகள் விடுவிகப்பட்டவை தவிர ஏஞ்சியுள்ள 486 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரியே இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எங்களது நிலத்தை வழங்க சர்வதேசமும் நல்லாட்சி அரசும் முன்வரவேண்டும் என இந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நிலத்திற்காக போராடும் மக்கள் இரவு பகலாக இராணுவ முகாமின் முன்வாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த கேப்பாப்புலவு மக்களின் காணிகள் வரலாற்று ரீதியாக தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்யப்பட்ட காணிகள் என்றும் இது எங்களின் மூதாதையர்கள் எங்களுக்கு தந்த சொத்து, இது வேறு யாருக்கும் சொந்தமில்லை.

எங்களது காணிகளை தான் நாங்கள் கேட்கின்றோம். இதை தருவதில் இந்த நல்லாட்சிக்கு என்ன தடையுள்ளது என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் உள்ள 482 ஏக்கர் வரையான காணிகள் படையினர் வசம் இருந்து வருகின்றது. இதனை விடுவிக்க வேண்டும் என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், அரசாங்கம் இதில் வாழும் மக்கள் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக சொந்தமான எந்த தொழில்களும் இன்றி வாழ்வதற்கும் வசதியான வீடுகளும் இன்றியும் அவர்களது கலை கலாச்சாரம், பண்பாடுகளை சிதைக்கும் நடவடிக்கைக்கையாவே இது காணப்படுகின்றது.

இலங்கையில் எரிமலைகள் இல்லாததது ஏன்? மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்....


இலங்கை எரிமலைகளின் அச்சுறுத்தல் இல்லாத நாடாகவே கருதப்படுகின்றது.

உலக நாடுகளுக்குள் இலங்கைக்கு அந்த அதிஷ்டம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. எப்படியிருப்பினும் இலங்கையினுள் எரிமலைகள் இல்லாமைக்கான காரணம் என்ன என்பதனை தற்போது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

புளோரிடா பல்கலைக்கழகம் மற்றும் எடின்பரோ பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய, பூமில் 620 இடங்களில் கடல் நீர் தேங்கியுள்ளதாகவும், பூமியின் நிறையில் நூற்றுக்கு 1.5 வீதம் வரையில் நீர்மட்டம் பூமிக்கு ஆழத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூமிக்கு நடுவில் காணப்படுகின்ற லாவா மற்றும் அதிக வெப்பம் வெளியே வராமல் இந்த நீர் தடுத்து பாதுகாத்து வைத்துள்ளதாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில பலவீனமான இடங்களில் லாவா மற்றும் அதிக வெப்பம் மேலே பயணித்து மீண்டும் பூமிக்கு கீழ் பயணித்து விடுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய ஏதாவது ஒரு நாட்டில் எரிமலை இல்லை என்றால் அந்த நாட்டின் பூமிக்கு அடியில் பாரிய நீர் தேங்கியிருக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நல்லாட்சிஅரசாங்கமும் தமிழரசுக் கட்சியும் அ.நிக்ஸன்-

தமிழரசுக் கட்சியின் சில மூத்தஉறுப்பினர்கள் 2009 மேமாதத்திற்குப் பின்னர் பூனையில்லா வீட்டில் எலிக்கு கொண்டாட்டம் என்ற அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்
70 ஆண்டுகால இனப்பிரச்சினையை பத்தோடு பதிணொன்றாக சேர்த்துநோக்குகின்ற அரசியல் அணுகுமுறை ஒன்றை நல்லாட்ச என்று கூறப்படும் அரசாங்கம் வெளிப்படையாகவே கடைப்பித்து வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்ற வாசகத்தை மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது மறைமுகமாகவும் நேரடியாகவும் கூறிவந்தார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் அதனை புதிய அரசியல் அணுகுமுறையாகவும் ஜெனீவா மனித உரிமைச் சபையும் அந்த அடிப்படையில் இலங்கை விவகாரத்தை நோக்கவேண்டும் என்ற தொணியிலும் செயற்படுகின்றது.
பூனையில்லாவீட்டில் எலி
ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து உரையாடிய வெளியுறவு அமைச்சர் மங்களசமரவீர இனப்பிரச்சினை இல்லை என்ற மறைமுகமான கருத்தை முன்வைத்ததுடன் புதிய அரசியல் யாப்புக்கு தமிழ்த் தரப்பு முழு ஒத்துழைப்பும் வழங்குகின்றது எனவும் அடித்துக் கூறியதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற அடிப்படையிலும் அமைச்சர் மங்களசமரவீர விளக்கமளித்திருக்கின்றார்.
அமைச்சர் மங்களசமரவீர இவ்வாறு கூறுவதற்கும் இனப்பிரச்சினையை பத்தோடு பதிணொன்றாக நோக்குவதற்கும் இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. ஒன்று- தமிழரசுக்கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள் 2009 மேமாதத்திற்குப் பின்னர் பூனையில்லாவீட்டில் எலிக்குகொண்டாட்டம் என்ற அரசியலில் ஈடுபட்டு வருகின்றமை. இரண்டாவது அமெரிக்கா, இந்திய போன்ற நாடுகள் மைத்திரி ரணில் அரசாங்கத்தை தொடர்ச்சியாக தக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றமை. இந்த இரண்டு காரணங்களும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு மத்திரமல்ல தென்பகுதி அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் சாதகமாக அமைந்துவிட்டன.
ஜே.வி.பியின் யோசனைஏற்பு
குறிப்பாக காணாமல் போவோரை கண்டறியும் அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்ற யோசனையை அரசாங்கம் ஏற்றுள்ளது. அதாவது அந்தசட்டமூலத்தில் கூறப்பட்டுள்ள வெளிநாட்டு உதவிகளை பெறவேண்டும் என்ற வாசகத்தை நீக்குமாறு ஜே.வி.பி யோசனைகளை முன் வைத்துள்ளது. அந்த யோசனைகளின ;படி அந்த வாசகத்தை நீக்கி பதிலாக வேறுவாசகம் ஒன்றை இணைத்து உள்ளக நீதிவிசாரணைகள் மூலம் காணாமல் போனோர் பற்றிய விடயங்களை அறிய அரசாங்கம் விரும்புகின்றது.
ஜே.வி.பி அரசியல் ரீதியாக கடுமையான எதிரிகளாக இருந்தாலும் இனப்பிரச்சினைவி வகாரத்தில் மாத்திரம் ஜே.வி.பியின் யோசனைகளை கேட்பது என்ற நிலைப்பாடு சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான உத்தியாக கருதலாம் என்ன விலை கொடுத்தாயினும் போர்க்குற்றவிசாரணை, மனித உரிமை மீறல் பற்றிய விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்பது தென்பகுதி சிங்களஅரசியல் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடு. அதாவது முரண்பாட்டிலும் ஓர் உடன்பாடாக அந்தவிடயத்தில் செயற்படுகின்றனர். எனவே ஜெனீவா விவகாரத்தை கையாள்வதற்கு நல்லாட்சி அரசாங்கத்துக்கு இது மிகவும் இலகுவாக அமைந்துவிட்டது..
நல்லிணக்கத்துக்கான சூழல்?
போருக்கு பின்னரான காலத்தில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ விரும்புகின்றனர் என தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா கூறியுள்ளார். அத்துடன் சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் நல்லிணக்கத்துக்கான சூழல் உருவாகிவிட்டது என்றும் அவர் பாராட்டியுள்ளார். ஜெனீவா தீர்மானங்களை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்ற கடுமையான அழுத்தத்தை அமெரிக்க, இந்தியா போன்ற நாடுகளுக்கு கொடுத்தவர் ஜெகான் பெரேரா. அது குறித்து ஜெனீவாவுக்கும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில் இனப்பிரச்சினை விவகாரம் அடுத்து வரும் ஆண்டுகளில் இலங்கை மக்களின் பொருளாதார பிரச்சினையாகவும் அபிவிருத்திகளை செய்தால் போதும் என்ற நிலையும் உருவாகலாம். ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு அரசாங்கம் வழங்கவுள்ள அறிக்கையில் இனப்பிரச்சினை விவகாரம் உள்ளக பிரச்சினை என்ற அடிப்படையில் அமையும் என பிரதி வெளிவிகார அமைச்சர் ஹரஷாடிசில்வா கடந்தவாரம் கூறியுள்ளார். சர்வதேச நீதிபதிகள்,கலப்பு முறை நீதிமன்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை அவர் அடித்துக் கூறியிருக்கின்றார். இது தருவதை பெற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழரசுக் கட்சிக்கு சொல்லப்பட்ட செய்தியாகும்.
நடைமுறைச ;சாத்தியம் எது?
இந்த இடத்தில் நடைமுறைச் சாத்தியமானதையே பேசவேண்டும் என தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறுவது எந்த அடிப்படையில் என்ற கேள்விகள் எழுகின்றன. போர்;க்குற்ற விசாரணை, காணாமல்போனோர் பற்றிய விடயங்களை கைவிடுதல், காணி அபகரிப்பு, புத்தர் சிலை வைப்பது ஆகிவற்றுக்கான எதிர்ப்பு போராட்டங்களை நிறுத்துதல் போன்றவை தான் நடைமுறைச் சாத்தியமான விடயங்களா என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. யுதத்தின் பக்கவிளைவகள்தான் இவை. ஆகவே இந்த போராட்டங்களை நிறுத்திவிட்டு வேறு எதைப் பேசுவது என மக்கள் தமது மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.
கேப்பாப்புலவு காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டபெண் ஒருவர் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களிடம் இந்தக் கேள்விகளை முவைத்துள்ளார். நடைமுறைச் சாத்தியமானதை பேசுவோம் என்பது, அடிப்படை உரிமைகளைக் கூட விட்டுக் கொடுத்து மக்கள் முன்னிலையில் பெய்யான வாக்குறுதிகளை கொடுப்பதுதானா என்று வவுனியாவில் காணாமல்போனோர் போராட்டத்தில் ஈடுபடும் தாயார் ஒருவர் கேட்டுள்ளார். இது வெறுமனே மக்களுடைய மனக்குமுறல் அல்ல. கடந்தகால அரசியல் தவறுகளில் இருந்து தமிழரசுக் கட்சி இன்னமும் பாடம் படிக்கவில்லை என்பதை சாதாரண மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ் மக்கள் பேரவை
அதேவேளை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்பதற்காக அரசாங்கத்துக்கு ஜெனீவா மனித உரிமைச் சபை கால அவகாசம் வழங்கியது என்றும் கூற முடியாது. கால அவகாசம் வழங்குவது என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரல் என்று முத்த இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார். ஆகவே மேற்படி கூறிய இரண்டு காரணங்களும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு சாதகமாகவே உள்ளன.
குறிப்பாக முதலாவது காரணமான பூனையில்லா வீட்டில் எலிக்கு கொண்டாட்டம் என்ற அரசியலை தமிழரசுக ;கட்சிகை விட்டு உரிமைப் போராட்டத்தை சாத்வீகமாக முன்னெடுத்திருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தை காப்பாற்றுவது என்ற சர்வதேசத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலில ;மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அல்லது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் அனைவருமே நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனா ;என்ற செய்தியை கொடுத்திருக்கலாம். இதன் மூலம் விரும்பியோ விரும்பாமலோ வடக்கு கிழக்கில் முழுமையான அமைதி நிலை ஒன்றை உருவாக்க சர்வதேசம் முற்பட்டிருக்கும். இந்த இடத்தில் தமிழ்த் தேசியம க்கள் முன்னணியும் தமிழ் மக்கள் பேரவையும் மக்களின் இயல்பான போராட்டங்களை கையில் எடுக்கத் தவறிவிட்டது என்பதும் பாரிய குற்றச்சாட்டாகும்.

வடக்கு மாகாணசபை முன்பாக பட்டதாரிகள் நேற்று போராட்டம் 13-ம் திகதி ஆளுநரை சந்திக்கவும் முடிபு,,,,


வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் அரச வேலைவாய்ப்பை வழங்கக்கோரி நேற்று பதி னொராவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தை வடக்கு மாகாணசபை முன்பாக முன்னெடுத்திருந்த நிலையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்றும் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடி பட்டதாரிகளுக்கான வேலைவா ய்ப்பு தொடர்பில் ஆராய்வது என தீர்மானி க்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பட்டதாரிகள் கடந்த பத்து நாட்களாக யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக வேலைவாய்ப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், நேற்று பதினோராவது நாளாக வடக்கு மாகாண சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் கலந்து கொண்டு தமக்கான நியாயத்தை வழங்குமாறு கோரியிருந்தனர். காலை ஒன்பது மணியளவில் வடக்கு மாகாண சபைக்கு முன்பாக வெளியே முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் பின்னர் வடக்கு மாகாண சபையின் உள் வளாகத்திற்குள் பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோரினை பட்டதாரிகள் சந்திப்பதற்கான ஏற்பாட்டினை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் செய்தார்.

இதனை அடுத்து பட்டதாரிகள் சார்பில் இரு பெண்கள் உட்பட ஏழு பிரதிநிதிகள் உறுப்பினர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒருமணித்தியாலம் வரை நடைபெற்ற நிலையில், வடக்கு மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் பட்டதாரிகளுக்கு கூறப்பட்டது.

எனினும் அந்த வெற்றிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை நிரப்புவதற்கு போதுமானதாக இல்லாமல் இருந்தமையால் வேறு ஏதும் யோசனைகளை முன்வைக்குமாறு பட்டதாரிகள் தரப்பில் கோரப்பட்டது. பட்டதாரிகளை மேலதிகமாக உள்வாங்குவதற்கான அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது.

அவருடனான சந்திப்பை அடுத்தே இது தொடர்பில் கூற முடியும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அவைத்தலைவர் ஆகியோரால் கூறப்பட்டது. மேலும் வட க்கு மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற் றிடங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யுமாறும் அவைத்தலைவர் சிவஞானத்தினால் முதலமைச்சர், அமைச்சர்களுக்கு கடிதம் ஒன்று உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும்  13 ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநரை பட்டதாரிகளின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சபையின் பிரதிநிதிகள் ஆகியோர் சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டு.
அதுவரை பட்டதாரிகளை அமைதியாக இருக்குமாறும் கோரப்பட்டது. எனினும் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வரும் தமது போராட்டம் தொடரும் என தெரிவித்த பட்டதாரிகள், ஆளுநருடனான சந்திப்பினை அடுத்து தமது போராட்டம் தொடர்வதா? இல்லையா? என தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பட்டதாரிகளின் இந்த போராட்டத்தின் போது வடக்கு மாகாண சபையில் வழமைக்கு மாறான அதிகளவான பொலிஸ் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டு காணப்பட்டதோடு, ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.  தமது மக்கள் பிரதிநிதிகளை தாம் சந்திக்க வரும் போது இவ்வாறான பாதுகாப்புக்கள் குறித்து தமது கவலையை ஊடகங்களிடம் பட்டதாரிகள் தெரிவித்தனர்.     

இறப்பதற்கு முன் இந்தியர் ஒருவர் எழுதியது... கண்ணீர் விட்டு அழுத பில்கேட்ஸ்: உருக்கமான சம்பவம்


இந்திய அமெரிக்கர் பால் கலாநிதி புற்று நோயால் இறப்பதற்கு முன்பு எழுதிய முடிக்கப்படாத புத்தம் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனாரான பில்கேட்சை கண்ணீர் வர வைத்துள்ளது.

நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்த அவர் மூச்சுக்காற்று வெறும் காற்றாகும் போது (when breathe become air) என்ற பெயரில் தன் வாழ்க்கையைப் பற்றி அதில் எழுதியுள்ளார்.

அப்புத்தகத்தை படித்துப் பார்த்த பில்கேட்ஸ். இது ஒரு மிகச்சிறந்த புத்தகம். வெகு நாட்களுக்கு பிறகு நான் படித்த புத்தகங்களிலே மனதை தொடக்கூடிய புத்தகம் என்று கூறியுள்ளார். எந்த ஒரு சூழ்நிலையில் அழாத எண்ணை இப்புத்தகம் அழ வைத்துவிட்டது. அதாவது கண்ணீர் சிந்த வைத்துவிட்டது என்று கூறி தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

கலாநிதி கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்புத்தகத்தை முடிக்கும் முன்பே இறந்து விட்டார். யேல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்த கலாநிதி, கேம்பிரிட்ஜ் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம், வரலாறு மற்றும் அறிவியல் தத்துவம் படித்திருந்ததாக கூறப்படுகிறது.

புற்று நோயால் பெரிதும் பாத்திக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வந்த போதும், கலாநிதிக்கு இது போன்ற புத்தகத்தை எழுத எப்படி வலிமை வந்தது என்பதை எண்ணி வியக்கிறேன் என்றும் பில் கேட்ஸ் கேள்வி கூறியுள்ளார்.

மாண்புறு மகளிர் தினம்.....08 அனைத்துலக பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் சிறப்பு பார்வை


அனைத்துலக பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்-08-03-2017
HAPPY WOMEN'S  DAYS
மாண்புறு உலகில் மகத்தான தினங்களில் மனிதர்கள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ளவேண்டிய தினம் மார்ச்-8 மகளிர் தினம் தரணியில் நாம் வாழக்காரணமான நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் மகளிர்களுக்கான தினம் அவர்களின் சாதனைகள் சரித்திரங்கள் சோதனைகள் வேதனைகள் என்பனவற்றை எண்ணி உணரவும் உதவவும் உண்டான உன்னத தினம் தான் இந்த மகளிர் தினம்.

மகளிர்க்கு மட்டும் என்று பத்திரிகையில் பார்த்திருப்போம் கேள்விப்பட்டிருப்போம் மகளிர் என்றால் யார் பெண்தான் ஆம் நம் தாய் தங்கை தமக்கை சித்தி அம்மம்மா பெரியம்மா எனத்தொடரும் உறவுகளும் சொந்தங்களும் அது போல நண்பி தோழி ஆசிரியை அன்ரி எனத்தொடரும் அயலவரும் சமூகமாய் வாழ்ந்து கொண்டும் வாழவைத்துக்கொண்டும் இருக்கும் பெண்களுக்கான நம் நாடடின் கணகளுக்குத்தான் மார்ச்-8 மகளிர் தினம். பெண்களை பெருமைப்படுத்தவே…..


பெண்களின் எட்டு பருவங்கள்

7வயது வரை-பேதை
8-11 வயது வரை-பெதும்பை
12-13 வயது வரை-மங்கை
14-19 வயது வரை-மடந்தை
20-25 வயது வரை-அரிவை
25-31 வயது வரை-தெரிவை
32-55 வயது வரை-பேரிளம் பெண்
56-முதல் இறக்கும் வரை விருத்தை 

பெண்களின் 7 வகை
பத்தினி--சித்தினி--சங்கினி--அத்தினி--மான்ஜாதி--பெட்டைக்குதிரை-பிடியானை எனவும்
பெண்ணுக்கு 5வகை அனுபவம் கண்டு-கேட்டு-உண்டு-உயிர்த்து-உற்று அறியும் அனுபவம் என்கிறார் வள்ளுவர் ஆறாவது அனுபவமாக அவள் அழகை பேசிமகிழ்வது பெண்களின் குணமாம் இவ்வாறு சொன்னவர்கள் இதோடு நின்று விடவில்லை பெண்களுக்கே உரிய பாரம்பரியமாக விதிகளாக தேவையானவையாக அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு என தமிழ் இலக்கணமும் தமிழர் பாரம்பரியமும் வரையறுத்தள்ளது.

அச்சம்-அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல்
மடம்-கொண்ட கொள்கையை விடாத தன்மை
நாணம்-தீய செயல்கள் செய்ய அஞ்சுதல்
பயிர்ப்பு- பெண்மை இயல்பை எக்காலத்திற்கும் காப்பாற்றும் தன்மை
இப்படியாக பெண்ணின் பெருமை பேசவந்த தமிழ் தென்றல் திரு.வி.கா பெண்ணின் பெருமையே இம் மண்ணின் பெருமை என்றார.

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டின் மண்ணடிமை தீராது என்றார் பாவேந்தன் பாரதிதாசன். கற்பு என்பது தனது உறுதியான நிறைகுணங்களை காப்பதே சிப்பாக பிறர் நெஞசு புகா மாண்பு எனலாம்.
“சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலையென்பது” வள்ளுவர் வாய்மொழி. பெண்டிற்கு அழகு தருவது உண்ணும் உணவை குறைவாக உண்பதே “பெண்டிற் அழகு உண்டி சுருங்குதல்”என்பது ஒளவையாரின் அமுத வாக்கு.


பெண்ககளின் கற்பு என்று வரும்போது பாரதி பெண்ணுக்கு மட்டும் தான..? ஆணுக்கும் வேண்டும் என்று வலியுறத்துகிறான். கற்பு நிலை என்றால் அதை இருவருக்கும் பொதுவில் வைப்போம் என்றானே பாரதி…!   மனித உரிமைகள் சகல மனிதர்க்கும் உரியவை அவற்றை முழுமையாக அனுபவிக்க சகலருக்கும் உரிமையுண்டு அது மானிடவர்க்கத்தின் பிறப்பிடமாக விளங்கும் பெண்களுக்கும் சமஉரிமையுண்டு தானப்பா பெண்ணியம் பெண்விடுதலை எனும் போது ஆனாதிக்கம என்ற வார்த்தை இல்லாமலா…


பெண் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்றுக்கொள்கின்ற அனைத்தப்பாத்திரங்களுக்கும் அக்காலம் தொட்டு இக்காலம் வரை சமூகத்தினாலும் பாரம்பரியத்தினாலும் உண்டாக்கப்பட்ட எழுதப்படாத சட்ட திட்டங்கள் ஏராளம் எண்ணிலடங்காதவைகள் உள்ளன. ஆண் பெண் என்பது உயிரியல் அடிப்படையிலானதாகும் உடலியல் சார்ந்ததும் பிறக்கின்ற மனிதக்குழந்தைகள் அவர்களின் பிறப்புறுப்க்களின் மூலம் தான் இனங்காணப்பட்டு வளர வளர அப்பெண்குழந்தைக்கான பாரம்பரிய சம்பிரதாயங்கள் பிண்ணப்படுகின்றன வலையில் சிக்கிய மீனைப்போலவே பெண்கள் வாழவேண்டிய நிலையாகின்றது.

ஆண்களின் ஆதிக்கம் ஆணாதிக்கம் ஆனது இன்றல்ல அந்தக்காலத்தில் இருந்தே “அடுப்படி கடப்படி வாயிற்படி” தாண்டாமல் வாழவேண்டும். அப்படி தாண்டினால் அவள் கற்பற்றவள் அகிவிடுவாள் அதன் பின்பு அந்தச் சமுதாயத்தில் வாழவே முடியாது கூடப்பிறந்த அண்ணன் அல்லது தகப்பனாலேயே சமூதாயத்தின் தீர்ப்பின் படி தண்டணையாக நஞ்சூட்டிக் கொலை அடித்துக் கொலை கல்லெறிந்து கொலையென தொடரும் கொளைக்களம்.

கல்யாணம் ஆகிவிட்டால் கழுத்தில் தாலி நெற்றியில் குங்குமப்பொட்டு காலில் மெட்டி மூக்கில் மூக்குத்தி குனிந்ததலை நிமிராத நடை இன்னும் ஏராளம் இவைகள் தான் ஆரம்ப அடிமைத்தனம. ஆண்களுக்கு இவை எதுவுமே கிடையாது. பெண்களுக்குத்தான் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று பெண்ணியம் எனும் உருவெடுத்து விருட்சமாய் நிற்கிறது. சூபீட்சத்தை தேடுகிறது…

“ஆவதும் பெண்ணாலே உலகம் அழிவதும் பெண்ணாலே” என்ற பாட்டிற்கு ஏற்ப மனித வரலாறகட்டும் ஏன் எந்த இதிகாசமோ......! புராணமோ.....! காப்பியங்களோ.......! பெண்ணில்லாமல் இல்லை வரலாறே பெண்தானே அக்காலத்தில் அடிமைத்தனம் இருந்தாலும் பெண்கள் பல வழிகளில் பாண்டித்தியம் பெற்று வாழ்ந்து இருக்கின்றார்கள்  கம்பன் பார்வையில் பெண் கல்வி
“பெருந்தடக்கண் பிறை நூதலார்க்குகெல்லாம் பொருந்து செல்வமும் கல்வியும் புத்தியால்” என்பது கம்பன் கவிதை கோசல நாட்டில் மகளிர்க்கு சொத்துரிமை இருந்ததோடு கல்வியிலும் மேலோங்கி இருந்ததாக கம்பன் குறிப்பிடுகிறான். ஆயக்கலைகள் 64ம் கற்ற பெண்பாற்புலவர்கள் 30ற்கும் மேற்பட்வர்கள் இருந்துள்ளனர் அதிலும் சிறப்பாக தமிழ் நாடு போர் இன்றி இருக்க சமாதான தூதுவராக ஒளவையார் செயற்பட்டுள்ளதை சங்ககாலத்து புறநானூறு கூறுகிறது. ஒளவையாரின் தமிழ் புலமைக்கும் ஆளுமைக்கும் சான்று அதியமன் தன் தவத்தினால் கிடைத்த என்றும் சாக வரமுடைய அதிசய நெல்லிக்கனி கதையும் உண்டல்லவா…


இன்று பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை அரசசபைகளிளும் அதிஉயர்ந்த பதவிகளிளும் அடுப்படியில் இருந்து அன்று நிலம் பார்த்த பெண்கள்  இன்று நிலாவில் விண்வெளியில் உலா வருகிறார்கள். ஆண்களுக்கு சரிநிகராய் பெண்களாளும் சாதிக்க முடியும் என்று சாதித்து காட்டுகிறார்கள் சாதித்தும் வருகின்றார்கள் பெண்கள் இல்லாத துறையே இல்லை இப்போது பெண்களின் அதீத வளர்ச்சி கண்டு பொறாமை கொள்ளும் சில ஆண்களும் உண்டு நல்ல துணையுமுண்டு பெண்கள் அதீத சக்தி வாய்ந்தவர்கள் ஆதலாலே சக்திகள் என அழைக்கப்பட்டனர் பெண்களின் வீரம் பற்றியும் தகுந்த நேரத்தில் நிதானமாய் முடிவெடுப்பவர்கள் அதற்கு சாட்சியாக கலைக்கு வாணியாக சரஸ்வதியும் வீரத்திற்கு துர்க்கையும்  செல்வத்திற்கு இலட்சுமியும் நிலமும் பெண்தான் கங்கை காவிரி ஜமுனா எல்லாமே பெண்தான் பெண்களை தெய்வமாக இந்தியாவில் வழிபடுகிறார்கள் தப்பில்லை ஏன் என்றால் ஒவ்வொரு “தாயும் தெய்வம்” தான் பெண்ணின் பெருமையே தாய்மைதானே.


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னூல் பெண் நிச்சயமாக இருக்கின்றாள் பெண்ணடிமை எதிர்த்த பெரியாருக்கும் மகாகவி பாரதியாருக்கும் மகாத்மா காந்திக்கும் நெல்சன் மண்டேலாவுக்கும் ஏன் எமது விடுதலை இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இன்னும் வரலாறு பேசிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைவர்களுக்கு பின்னாலும் பெண்கள் உள்ளனர் தாயாக தாரமாக தங்கையாக நண்பியாக பல பாத்திரங்கள் ஏற்று பாரிய சேவை செய்துள்ளனர் செய்தும் வரகின்றனர்.

 வலாற்றுப் பக்கங்களை புரட்டிப்பார்ப்போமானால் தனியே நின்று சாதித்த பெண்களாக கனவனுக்காக போராடிய சாவித்திரி கற்புக்கு இலக்கணமான சீதை கண்ணகி புராணங்களிலும் அன்பின் உருவமாய் அன்னைத்திரேசா விண்வெளியில் கரைந்த கல்பனா சாவ்லா-புளோறன்ஸ் சீமாட்டி பக்தி மீரா பட்டத்தரசி ஜான்சிராணி பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்த குட்டிப்பெண் மலால ஒரு கிலோ தங்கத்தை அநாதைக்குழந்தைகளுக்கு அளித்த ஈழச்சி ஜெஸிக்கா இலங்கைக்கு புகழ் சேர்த்த முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளான சிறிமாவோ பண்டாரநாயக்க சந்திரிக்கா குமாரதுங்க இந்தப்பட்டியல் இக்காலம் வரை இன்னும் ஆரோக்கியமாய் நீள்கிறது.

                                                                                   
இந்த மகளிர் தினம் எவ்வாறு உருவாயிற்று பழங்காலத்தில் கிரேக்கப்போரை முடிவுக்கு கொண்டுவரப்போராடினார்கள் பெண்கள் பிரேஞ்சுப்புரட்சியின் போது பெண்கள் சுகந்திரம் சமத்துவம் கேட்டு போராட்டம் வலுக்க அதிகாரவர்க்கத்தன்மை கொண்ட மன்னன் லூயிஸ் பிலிப்பு முடி துறந்தான். இச்செய்தி ஐரோப்பா நாடெங்கும் பரவியது கிறீஸ்ஸில் லிசிஸ்ட்டா தலமையிலும் ஜேர்மனி ஒஸ்த்தியா டென்மார்க் போன்ற நாடுகளிலும் இத்தாலியிலும் பெண்கள் நீண்ட காலமாக கோரிக்கையினை முன்வைத்து போராடினார்கள் தங்களுக்கு வாக்குரிமை வேண்டும். ஆர்ப்பாட்டத்திலும் இறங்கினர் பிரான்சில் புருஸ்ஸியஸ் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் பெண்களை அரசசபை ஆலோசனைக்குழுவிலும் இடம் பெறச்செய்து பெண்களுக்கு வாக்குரிமையளிக்கவும் ஒப்புதல் தந்தான் அந்த நாள் தான் 1848ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதியாகும்.


1945ல் சென்பிரான்சிஸ்கோவில் நடந்த உடன் படிக்கையில் சம உரிமை என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டு சர்வதேச அளவில் பெண்களுக்கான இயக்கங்கள் வளர்ச்சி பெற்றன இவ்வளர்ச்சியின் பயனாக பெண்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை சட்ட நடவடிக்கைகள் பொதுக்கருத்துக்கள் உருவாக்குதல் சர்வதேச நடவடிக்கைகள் பயிற்சிகள் ஆராய்ச்சிகள் வழிகாட்டி செயற்பட்டு வருகின்றது. தேசிய மனித உரிமை ஆணையம் விதவை என்கிற வார்த்தை பிரயோகிக்க வேண்டாம் என்கிறது. விதவைக்கு பொட்டில்லை அந்த வார்த்தை “விதவை” பொட்டில்லை மாறாக “கைம்பெண்” என்று சொல்லுங்கள் ஒரு பொட்டுப்போனாலும் மறு பொட்டு இட்டுக்கொள்ள முடியும் என்பதற்காய்.

 18ஆம் நூற்றாண்டிலேயே பெண்விடுதலைச் சிந்தனைகள் எழுச்சி பெற்றிருந்தாலும் 19ஆம் நூற்றாண்டில் தான் பெண்ணியம் தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது. மேலைத்தேசம் கீழைத்தேசம் எங்கும் பெண்ணொடுக்குமுறை இருந்த காலம் கடந்து இன்று உலகின் மூலைமுடக்கெங்கும் பெண்கள் தம் உரிமைகளுக்குப் போராடும் நிலையில் வெற்றி கண்டும் வருகின்றார்கள். இனம், மதம், மொழி, கலாசாரம், சமூகப்பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றால் பலதரப்பட்டவர்களாய் இருந்த போதிலும் பெண்கள் எனும் அடையாளத்தால் ஒன்றுபட்டு நிற்கும் பெண்ணினம் சமூகநீதி, சமவுரிமை, சமத்துவம் போன்றவற்றிற்காக ஒன்றுதிரண்டு அகிலமெங்கும் குரல் கொடுக்கும் நாள் இப் பெண்கள்தினம்.


முதலாவது மகளிர் தினம் மார்ச் 19-1911 கொண்டாடப்பட்டது.
உலகில் உள்ள ஏறத்தாள 3கோடி அகதிகளில் 80 முதல் 85 வீதம் வரை பெண்கள்தான்
தினமும் பிரசவத்தின் போது 1600 பெண்கள் மரணமடைகிறார்கள்
சு10வீடன்-கனடா-நோர்வே-அமெரிக்கா-பின்லாந்து போன்ற நாடுகளில் பெண்கள் ஆயுள் கல்வி வருமானம் என்பவற்றில் முன்னேறியுள்ளனர்.
பெண்களுக்கு வாக்குரிமையளித்த நாடுகளில் முதன்மையானது நியூசிலாந்து 1893 இல்
இதுவரை உலகில் 28 பெண்களே நாட்டில் தலமைப்பொறுப்பை ஏற்றுள்ளனர் இது 14.1வீதமாகும்
சு10விடனில் 1998ல் அமைச்சரவையில் பெண்களுக்கு சமவிகிதத்தில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
1975ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
1977ம் ஆண்டு தான் பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
1909ம் ஆண்டு தான் பெண்கள் தினமாக அமெரிக்காவில் 28-2-முன்பு அனுசரிக்கப்பட்டது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 மில்லியன் பெண் குழந்தைகள் பிறக்கின்றன 1.5 மில்லியன் பெண்குழந்தைகள் பிறந்த தினமே இறக்கின்றனர்.விருப்பமின்மையால்  5வயதிற்குள் பல பெண் குழந்தைகள் இறந்து விடுகின்றனர்.
உலகில் 5கோடியே 20 இலட்சத்திற்கு மேற்பட்ட பெண்கள் பணிப்பெண்களாக உள்ளனர்.


இலங்கையைச்சேர்ந்த 18 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக உள்ளனர்.
சீனா ஜப்பான் கொரியா இந்தியா போன்ற நாடுகளில் மத மூடநம்பிக்கைகளினால் பெண்குழந்தைகள் கொள்ளப்படுகின்றனர்.
இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 4 மில்லியன் கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றது அதில் 10 வீதம் சட்டரீதியானது.
உலகத்தில் நான்கில் ஒரு பெண் குடும்பத்தலைவியாக உள்ளாளனர்.
உலகில் பெண்கள் வாழ மோசமான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்த்தான்- பாகிஸ்த்தான் கொங்கொங் இன்னும் பல நாடுகள் உள்ளன
உலகில் 245மில்லியன் விதவைகள் “கைம்பெண்” உள்ளனர்
இலங்கையில் யுத்தத்தம் முடிந்த ஒரு இலட்சம் பெண்கள் விதவைகளாக….?

போரின் பின்பான காலங்களில் தமிழீழத்தில் இராணுவத்தால் திட்டமிட்ட ரீதியில் பெண்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. திட்டமிட்ட முறையில் கருத்தடைகள், பாலியல் ரீதியான தொல்லைகள், இனக்கலப்பிற்கு தூண்டுதல், போன்ற கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றது. 90ஆயிரத்துக்கும் மேட்பட்ட பெண்கள் விதவைகளாகவும்; ஆதரவற்றவர்களாகவும், உளவியல்பாதிப்புக்கு உட்பட்டவர்களாகவும் அலைகின்ற நிலைமையே உள்ளது. இவ் அவலங்களுக்கெதிராக குரல் கொடுக்க இராணுவ அடக்குமுறைக்குள் சிக்கியிருக்கும் மக்களால் முடிவதில்லை. வன்முறைக்கு உட்படுத்தபட்ட ஆயிரக்கணக்கான பெண்களும் குடும்பத்தினரும் அவர்களது உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் .

தற்போது இலங்கயில் பெண்களின் நிலை

  • பொதுப்போக்கு வரத்தில் 90% பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றார்கள்
  • வேலைக்கு செல்லும் பெண்கள் 50%
  • கல்வியினை பெறும் பெண்கள் 28%
  • பொருளாதார செயல்திறன் மிக்க வயதுப்பிரிவில்  தொழிலில் ஈடுபடும் பெண்கள் 34%
  • பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் தீர்வுகள் பற்றி அறியாதவர்கள் 74%
பெண்கள் வீட்டிலும் நட்டிலும் பல்வேறு சொல்லமுடியாத துன்பங்களுக்கு ஆளாகின்றார்கள் இந்த கணக்கெடுப்பு எல்லாம்  விட்டுவிட்டு பெண்களும் ஏனையோரும் விழிப்படைய வேண்டும்.
  
 இயல்பாகவே பெண்கள் மென்னையானவர்கள் பெண்களிடமே கருணை அன்பு பணிவு சகிப்புத்தன்மை தாய்மை புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு தியாகம் அனைத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்டவளாக பெண் காணப்படுகின்றால் அவளால் தகுந்த பாதுகாப்பின்றி துணையின்றி வாழமுடியாத நிலை பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் நாட்டிலும் இதைசாதகமாகப்பயண்படுத்தும் ஆண்கள் பல ஆண்கள் தன்னிலை மறக்கும் போது பெண்கள் பாதிப்படைகிறார்கள்.


பெண்கள் பொதுவாக காதல் வலையில் காமூகர்களிடமும் சொல்ல முடியாத இம்சைகள் பாலியல் வன்கொடுமைகள் வறுமை-பொருளாதாரக்கொடுமைகள் சீதனக் கொடுமைகள் நவநாகரீக போகவாழ்க்கையினாலும் மோகத்தினாலும் கவர்ச்சிப்பொருளாய் நுகர்வுப்பொருளாய் இரண்டாவது பிரiஐயாக இரண்டாவது பாலினமாக குறைத்து மதிப்பிடப்படுவதும் வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதும் உடமைப்பொருளாக்கப்படுவதும் பொதுவுடமையாகிப்போயுள்ளது பெண்ணினம்.  மனிதன் என்னும் ஒட்டு மொத்தத்திற்குள் பெண் தன்னை காலகாலமாக இரண்டறக்கலந்தபடியும் பிள்ளை பெற்றுக்கொடுக்கும் இயந்திரமாக பெண் தனது சுயத்தை இழந்து ஆணுக்கானவளாக வடிவமைக்கப்பட்டபடியும் இருந்திருக்கிறார்கள்.

இருந்தும் வருகின்றார்கள்.  பெண்களுக்கான மனித இருப்புக்கள் சமூகம் கலாச்சாரம் பண்பாடு என்றும் மறுக்கப்பட்டபடியே உள்ளது சடங்கு சம்பிரதாயம் எனும் பாரம்பரியக் கிடங்கில் பெண்களை தள்ளிவிட்டு எள்ளிநகையாடும் மனிதவர்க்கமே ஏன் இந்த கொலை வெறி…!
இக்கொடிய நிலை மாற மகளிர் வெற்றிக்கொடி ஏற… பெண்கள் தங்களை தங்களில் இருந்து அறிந்து கொள்ள வேண்டும் தங்களை முதலில் ஆளவேண்டும் அழுவதைவிட்டு அத்தனையும் கைக்கொள்ள வேண்டும் அண்டமும் கண்டமும் தாண்டு வாழ் ஆயுள் நீண்டு மீண்டு மீண்டு…

ஆண்களே உங்களுக்கு…

பெண்……
கவிதை வடிக்கவும்
கண்ணடித்து காதலில்
கட்டிப்பிடிக்க கட்டிலில்….எண்
 உன் வாழ்வின் கண்

பெண்களே உங்களுக்கு….

உறுப்புக்கள் இல்லையேல் ஊனம்-நீ
உடையணிந்தும் போகுதே மானம்
உன்னில் தானே உண்டு “தாய்மை” குணம்
உணரவில்லையா இன்னும் உன் மனம்….

 கவிஞர் வை-கஜேந்ந்திரன்


இலங்கையில் 13000 கோடீஸ்வரர்கள்! கொழும்பில் ஏற்படவுள்ள மாற்றம்! சர்வதேச ஆய்வில் தகவல்...


எதிர்வரும் 10 வருடங்களில் இலங்கையின் தலைநகரான கொழும்பு நகரில் வாழும் பணக்காரர்களின் எண்ணிக்கை 160 வீதம் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் சொத்து ஆலோசனை சேவைகள் நிறுவனமாக Knight Frank னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் தசாப்தத்தில் கொழும்பு நகரில் 30 மில்லியன் டொலர் அல்லது 45 பில்லியன் ரூபாயக்கும் அதிக சொத்துக்களுக்கு உரிமை கோரும் நபர்களின் எண்ணிக்கை 182 ஆகும் என இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு வரையில் இலங்கையின் கொழும்பு நகரத்தில் வாழும் பணக்காரர்களின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டு பதிவாகிய 70 பேரில் 160 முதல் 182 வீதம் வரை அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, வளர்ச்சிகளுக்கு மத்தியில் எதிர்வரும் ஒரு தசாப்த்தத்தில் வியட்நாம் நாட்டின் சி மின் நகரம் முதல் இடத்தை வகிக்கிறது. 30 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்களுடன் மதிப்பிடும் போது அதிக வளர்ச்சியை வெளிப்படுத்தும் நாடாக இலங்கை இரண்டாமிடம் கிடைக்கும் என Knight Frank இன் கருத்தாகும்.

Knight Frankஇனால் வெளியிடப்பட்டுள்ள 2016ஆம் ஆண்டிற்கான அறிக்கைக்கமைய கொழும்பு நகரத்திகுள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான சொத்துக்களுக்கு உரிமை கோரும் 3400 பேர் வாழ்வதாக குறிப்பிடப்படுகின்றது. அவற்றில் 170 பேர் ஒரு கோடி டொலருக்கும் (10 மில்லியன்) அதிகமான சொத்துக்களுக்கு உரிமை கோருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர்களில் 70 பேர் பிரபல பணக்காரர்கள் பட்டியலில் இணைகின்ற நிலையில் அவர்களில் ஒருவரின் சொத்துக்களின் பெறுமதி 30 மில்லியன் டொலருக்கு அதிகமாகும்.

கொழும்பு நகரத்தின் நிலைமை இவ்வாறு காணப்படுகின்ற நிலையில் முழுமையாக இலங்கை தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2026ஆம் ஆண்டு வரையில் இலங்கையினுள் வசிக்கும் ஒரு மில்லியன் டொலருக்கு உரிமைக் கோரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 13 ஆயிரமாகும். 2015ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4,200 எனவும், 2016ஆம் 5000 பேர் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2026ஆம் ஆண்டு வரையில் இலங்கையில் உள்ள 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான நபர்களின் எண்ணிக்கை 26 ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் என்பது கிட்டத்தட்ட 15 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும். எப்படியிருப்பினும் எந்தவொரு இலங்கையரும் ஒரு பில்லியன் டொலருக்கு உரிமையாளர்களாக இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு, சொத்து பங்கு சந்தை முதலீடு உட்பட அனைத்து பொருட்களின் பெறுமதிக்கமைய இந்த நபர்களின் சொத்துக்கள் மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்!


எங்கள் உறவுகளை எங்கே என்று கேட்டு வாட்டும் வயோதிபத்திலும் இரவு பகலாக போராடும் எம் முடைய குறைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்பாரா? என வவுனியா மற்றும் கிளிநொச் சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் மல்க தெரிவித்து ள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடை  பெற்றது என்பது தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி,

கிளிநொச்சியில் பன்னிரண்டு நாளாகவும், வவுனியாவில் எட்டாவது நாளாகவும் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற குறைகேள் அரங்கினை திறந்து வைப்பதற்கென இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

இந்த நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற குறைகேள் அரங்கினை திறந்து வைப்பதற்கு யாழ்ப்பாணம் வருகின்ற ஜனாதிபதிக்கு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது? என்பதனை கோரி தொடர்ச்சியாக இரவிலும் பகலிலும் போராடி வரும் எமது குறைகள் தெரியவில்லையா?

அல்லது நாங்கள் இந்த நாட்டின் பிரஜை கள் இல்லையா? எமது கண்ணீர் ஜனாதிபதிக்கு இந்த நாட்டு மக்களுடைய குறைகளில் ஒன்றாக தெரியவில்லையா? எமது உறவுகளுக்கு என்ன நடைபெற்றது என்று இந்த அரசு பொறுப்புக்கூறலை வழங்கும் வரையில் நாம் எமது போராட்டத்தை நிறுத்த போவதில்லை. பல வாக்குறுதிகளை நம்பி பலமுறை ஏமாந்துவிட்டோம்.

இனியும் வாக்குறுதிகளை நம்பி எம்மால் ஏமாற முடியாது. எத்தனையோ வருட காலமாக எமது உறவுகளை காணாது கண்ணீர் வடித்து செத்து கொண்டுள்ளோம். இந்த போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை. ஜனாதிபதி அல்லது பிரதமர் எமக்கான பதிலை வழங்கும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.                               


போராடினால்தான் எதுவும் கிடைக்கும் என்றாயிற்று


எதுவும் தானாக நடக்கும் என்ற பேச்சுக்கே இந்த நாட்டில் இடமில்லாமல் போயிற்று.
அந்தளவுக்கு எல்லாவற்றுக்கும் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தங்கள் சொந்த மண்ணில் குடியிருப்பதற்கு அனுமதியுங்கள் என்று மன்றாடியும் சரிவராத நிலையில்,
கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்களின் தொடர் போராட்டம் அவர்களின் நிலத்தை மீட்பதற்கு வழிவகுப்பது மட்டுமன்றி,

தமிழர் தாயகத்தில் எங்கெல்லாம் படையினர் தமிழ் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனரோ அங்கெல்லாம் நில மீட்புப் போராட்டம் நடப்பதற்கும் வழிவகுத்துள்ளது.

நில மீட்புக்காக மட்டுமல்ல காணாமல்போன வர்களின் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்ற விடயங்களிலும் போராட்டம் நடத்தினால்தான் எதுவும் நடக்கும் என்றாயிற்று.

தமிழ் மக்களின் அரசியல் தலைமை எதுவும் செய்யாத நிலையில் தமிழ் மக்கள் தாமே தமக்குத் துணை என்பதாக களத்தில் இறங்கி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கேப்பாப்பிலவு மக்களின் தொடர் போராட்டம்; காரணமாக அவர்களின் நிலத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி உத்தரவு வழங்கியதான செய்திகள் வெளிவந்தமை மனதுக்கு ஆறுதலைத் தருகிறது.

எனினும் காணி விடுவிக்கப்படுவதும் ஒரு பகுதி சிறுபகுதி என்றால் அதைவிட்ட அநியாயம் வேறு எதுவுமாக இருக்காது.

ஆக, மக்களின் சொந்த நிலத்தை முழுமையாக விடுவித்து அவர்களின் வாழ்வியலுக்கு உதவுவது அரசின் கடமை என்ற அடிப்படையில், நில விடுவிப்பு முழுமையாக இடம்பெற வேண்டும்.

கேப்பாப்பிலவு மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டமே அந்த மக்களுக்கு அவர்களின் நிலத்தை மீட்டுக் கொடுக்கிறது. இதில் அரசியல் இலாபம் தேடுவதற்கு ஒரு சிலர் முற்படுவது மிகப்பெரும் அபத்தம்.

ஒரு மாத காலமாக கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம் நடத்திவரும் வேளையில், தாம் ஜனாதிபதியைச் சந்தித்ததால்தான் பிலவுக்குடியிருப்பு விடுவிக்கப்படுகிறது என்று தமிழ் அரசியல் தலைமை கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இருந்தும் அவ்வாறான கதைகள் அவிழ்த்துவிடப்பட்டால் அதன் பின்விளைவு மிக மோசமானதாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டால் சரி.

இது ஒருபுறம் இருக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு  ஆதரவு வழங்கிய தமிழ் அரசியல் தலைமை  ஆதரவுக்காக சில நிபந்தனைகளை  முன்மொழிந்து அதை அமுல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

அந்த மகா தவறுக்குப் பின்னர் இப்போது ஐ.நா கூட்டத்தொடரில் கடும் நிபந்தனையுடன் காலஅவகாசம் வழங்கலாம் என்று சம்பந்தப் பெருமான் பரிந்துரை செய்துள்ளார்.

இஃது தமிழ் அரசியல் தலைமை விடும் மாபெரும் தவறாகும். என்ன செய்வது அரசுக்கு விசுவாசம்; தமிழர்களுக்கு எதிர் என்று தமிழ்த் தலைமை முடிவு செய்து விட்டது என்றால் இதைத் தவிர வேறெதுதான் நடக்கும்.

-நன்றி-வலம்புரி-

சம்பந்தனின் கருத்து முட்டாள்தனமானது! கடுமையாக சாடுகிறார் சுரேஷ்....


ஒட்டுமொத்த தமிழ் மக்களும்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசுக்கு ஐ.நா கால நீடிப்பு வழங்க கூடாது என்று இருக்கும் போது சம்பந்தன் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவித்திருக்கும் கருத்தானது மிகமிக முட்டாள்தனமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடியுள்ளார்.

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு  போராட்டத்தை   மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை   நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்  போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசுக்கு நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என்ற சம்பந்தனின் கருத்து மிகமிக முட்டாள்தனமான கருத்து. ஒட்டுமொத்தமான தமிழ் மக்களும் கால அவகாசம் வழங்குவதனை மறுத்திருக்கின்றார்கள்.

ஏற்கெனவே இருந்த ஒன்றரை வருட காலத்தில் நல்லாட்சி எனக்கூறுபவர்கள் ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள். அதுமாத்திரமல்ல வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க  மறுத்தவர்கள். ஐ.நாவில் ஒப்புக்கொண்ட விடயங்கள் எதனையும் நடைமுறைப்படுத் தாதவர்கள். இனிவரும் ஒன்றரை வருட கால அவகாசத்தில் எதை செய்யப்போகின்றார்கள்.

இராணுவத்தை விசாரிக்கமுடியாது, சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது, விசாரணை குழுவை அமைக்க முடியாது என்றால் அதற்கு பிற்பாடு கால அவகாசம் எதற்கு?.இது சம்பந்தனுக்கு விளங்கவேண்டும்.

ஏற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரைவாசி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று எழுதி அனுப்பியிருகின்றர்கள்.
பல மாகாண  உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பன கால அவகாசம் வழங்க கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள்.

எனவே சம்பந்தன் இதனை விளங்கி கொண்டு உடனே  கால நீடிப்பு வழங்க கூடாது என்று வெளிப்படையாக உலக அரங்கிற்கும் ஐ.நாவுக்கும் அறிவிக்க வேண்டும் என்பது எனது கட்சி சார்ந்தும் தமிழ் மக்கள் சார்ந்தும்  நான் முன் வைக்கும் கோரிக்கையாகும் எனத் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன்,

இலங்கை அரசாங்கம் தமது உறவுகளை தேடித்தராது, இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தங்களை ஏமாற்றி வருகிறது என்பதனை மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்  எனவே தான்  ஒரு சர்வதேச விசாரணைக்கு ஊடாக மாத்திரம்தான் காணாமல்போன உறவுகளை கண்டுபிடிக்க முடியும். அது மாத்திரம்  மன்றி உண்மைகள் வெளிக்கொண்டுவரப் படவேண்டும் என உணர்ந்துள்ளார்கள்.

அதாவது  காணாமல் போனவர்கள் எங்கிருகின்றார்கள்? அல்லது இருகின்றார்களா? இல்லையா? அல்லது இல்லையென்றால்  அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்களா? அவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தால் யாரால் கொலை செய்யப்பட்டார்கள்? என்ற உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண் டும்.

எனவேதான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச விசாரணை என்பது  மிகமிக  அவசியம் என்பது உணரப் பட்டுள்ளது எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தனதுரையில் தெரிவித்துள்ளார். 

மகா சிவராத்திரி.......சிவபெருமானுக்கு ஒரே ஒரு நாள்.....


இந்துக்களின் மிக உன்னதமான விரதமாக மகா சிவராத்திரி விரதம் அமைகின்றது. விரத அனுஷ்டானங்கள் என்பது இந்துக்களின் வாழ்விலே நிரந்தரமாக பின்னிபிணைந்திருப்பது ஆகும்.

நாம் பல்வேறு வகையான விரதங்களை அனுஷ்டிக்கின்றோம். அந்த வகையில் மகா சிவராத்திரி விரதம் சிறப்பிடம் பெறுகின்றது.

ஒவ்வொரு மனிதனும் புனிதனாக மாறுவதற்கும் எம் வாழ்விலே ஆன்மீக சிந்தனையுடன் தன்னை ஒரு நிலைப்படுத்தி இறைவழிப்பாட்டில் ஈடுப்படுத்திக்கொள்வதற்கும் மகா சிவராத்திரி விரதம் பெரும் பங்காற்றுகின்றது.

மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் அமாவாசை முதல் நாள் துர்முகியாண்டு  மாசித்திங்கள் 12ம் நாள் 24-02-2017 சம்பவிக்கிறது.

சிவபுராணத்திலும், பவிஷ்ய புராணத்திலும் மகா சிவராத்திரியின் மகிமைகள் வெகு விமரிசையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிவ பூஜை செய்தால் உலகத்திற்கு நலமளிக்கும் என்பது நம்பிக்கை.

சிவபெருமானுக்கு ஒரே ஒரு நாள் மகா சிவராத்திரியென்று அழைக்கப்படுகிறது. நமஹம், சமஹம் என்ற மந்திரத்தினால் அன்றைய தினம் மஹண்யாசம், லருண்யாசம்,ருத்ரம் ஆகிய வேத கோஷங்களினால் சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகப்ரியோ சிவஹ, அலங்கார ப்ரியோ விஷ்ணுஹோ என்று புராணங்கள் கூறுகின்றன. மகா சிவராத்திரியன்று உப்பில்லாத ஆகாரம் சாப்பிட்டு, சிவ பூஜை செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரியன்று தூங்காமல் ஐந்தெழுத்து மந்திரத்தை (ஓம் நமச்சிவாய) உச்சரிக்க வேண்டும். ஆபத்தைப் போக்குவது ஐந்தெழுத்து மந்திரம். பாவத்தைப் போக்குவது பஞ்சாட்சர மந்திரம் என்று சொல்லப்படுகிறது.

சிவராத்திரி மகிமை

ஒரு வில்வ மரத்தடியில் சிவராத்திரியன்று சிவனும், பார்வதியும், அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மரத்தின் மேலிருந்து குரங்கு ஒன்று வில்வ மரத்தின் இலைகளை பறித்து மேலேயிருந்து கீழே ஒவ்வொன்றாகப் போட்டுக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் தூங்காமல் வில்வ இலையைப் போட்டதால், சிவபெருமான் அருள் செய்தார். தெரியாமல் செய்த குரங்கிற்கே ஈசன் அருள் புரிந்தார். என்றால் பக்தர்கள் சிவராத்திரியன்று பூஜை செய்தால் எல்லா செல்வ வளங்களையும் சிவபெருமான் வழங்குவார்.

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் சத்ரியாயுதம்

த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்.

மூன்று தளம் (இலைகள்) உடைய வில்வத்தால் அர்ச்சனை செய்தால் ரஜோ, தமோ, சாத்விக குணங்களையும் மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணும் மூன்று ஜென்மங்களின் ஆயுளும் கிடைக்கும். மூன்று ஜன்மங்களின் பாவங்களையும் போக்கும். வில்வத்தால் பூஜை செய்தால் சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.

தர்சனம் பில்வவ்ருஷாய ஸ்பர்சனம் பாதஸேவனம்

அகோர பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்.

ஒரு வில்வ மரத்தைப் பார்த்தாலோ, தொட்டாலோ, பாவம் அழிந்துவிடும். செய்யத்தகாத பாவங்கள் செய்திருந்தாலும் உடனடியாக நிவர்த்தியாகும். இதனால் அவர் ஒருவருக்கே வேதங்கள் நமஸ்காரம் செய்கின்றன. ருத்ர மந்திரம் முழுவதும் நமஸ்கார ரூபமாகவே உள்ளன. ஆதலால் இவ்வளவு மகிமையுள்ள பார்வதி, பரமேஸ்வரரை மகா சிவராத்திரியன்று கண்விழித்துப் பூஜித்தால், சிவனின் அருள் பெறலாம்.

கயிலையே மயிலை, மயிலையே கயிலை என்று போற்றப்படும். மயிலாப்பூரில் ஏழு சிவாலயங்கள் உள்ளன. ஏழு கிழமைக்கும் ஏழு சிவாலயங்கள் என்று கொண்டால் அருள்மிகு கபாலீஸ்வரர், வள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாதீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மகா புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த ஏழு சிவாலயங்களுக்கும் மகா சிவராத்திரி அன்று ஒரே இரவில் சென்று வழிபாடு செய்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி வைபவம் மிகச் சிறப்பாக நான்கு காலமும் ருத்ரம், சமகம் என வேத பாராயணத்துடன் நடைபெறும். முதல் ஜாமம் இரவு சுமார் 11.30 மணிக்குத் தொடங்கும். இக்கால பூஜை சிவப்பு சாத்துதல் என அழைக்கப்படுகிறது. மூலவர் அபிஷேகத்திற்குப் பிறகு, சிவனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்படும். சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் நான்கு கால பூஜைகளில், தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது கால பூஜை மஞ்சள் சாத்துதல் எனப்படும். இதில் அபிஷேகத்திற்குப் பிறகு லிங்க ரூபமான கபாலீஸ்வரர் மஞ்சள் வஸ்திரத்தாலும், மஞ்சள் நிற மலர்களாலும் அலங்கரிக்கப்படுவார். மூன்றாம் ஜாமம் பச்சை சாத்துதல். பச்சை நிற வஸ்திரம், வில்வம், தாழம்பூ ஆகியவை சாற்றப்படும். நான்காம் காலம் மீண்டும் சிவப்பு சாத்துதல். சிவப்பு வஸ்திரம் சாற்றி, சிவப்பு மலர்களால் அலங்கரிப்பர். நான்காம் கால பூஜை, மறுநாள் விடியற்காலை நான்கரை மணியளவில் நிறைவுறும். அனைத்துக் கால பூஜைகளிலும் வில்வம் சாற்றுவது விசேஷம்.
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்று ஐதீகம்.

மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு.

ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்கி நன்மைகள் நமக்கு உண்டாகும்.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாள் மகா சிவ ராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.

சிவபூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.இராணுவம் சுட்டு வீழ்த்தினாலும் காணிக்குள் வீழ்ந்தே உயிரை விடுவோம்! கேப்பாப்பிலவு மக்கள் உறுதி


கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் கடந்த 19 நாட்களாக விமானப்படை முன்பாக தமது காணிகளை விடுவிக்கக்கோரி உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதில் தேவையில்லாமல் காணிக்குள் உட்சென்றால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள் தாம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானாலும் காணிக்குள் வீழ்ந்தே உயிரை விடுவோம் என உறுதியாகத் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள், விமானப்படை பிடித்து வைத்துள்ள தமது காணியை விடுவிக்ககோரி நேற்று பத்தொன்பதாவது நாளாகவும் கடும் இராணுவம் மற்றும் விமானப்படை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இரவு பகலாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். எரிக்கும் வெயிலிலும் கொட்டும் பனியிலும் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் பலர் சுகவீனமடைந்துள்ளனர்.

மக்களுடைய போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், விமானப்படையும் தமது முன்னரங்குகளை பலப்படுத்தி வருகின்றமையை காணமுடிகின்றது. எனினும் மக்கள் விமானப்படையின் அச்சுறுத்தல்களுக்கு பயப்படாமல் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் சில தினங்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் தமது போராட்டம் வேறு திசைக்கு திரும்பும் எனவும் அந்த மக்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை பாடசாலை மாணவர்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை காலை ஒரு மணிநேர போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தமது காணிகளை விடுவிப்பதாக கூறி இராணுவமும் அரச அதிகாரிகளும் எம்மை ஏமாற்று கின்றனர் என குற்றஞ்சாட்டி தமது காணி விடுவிப்பு தொடர்பான உறுதியான திகதியை வழங்குமாறு கூறி அங்குள்ள விமானப் படை முகாம் முன்பாக கடந்த 31 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த போராட்டத்தை நிறுத்து மாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்த போதிலும் உறுதியான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என அறிவித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது பல சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இனியும் தாம் ஏமாற முடியாது என கூறி தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குடியிருப்பாளர்களின் பிள்ளைகள் கடந்த பல நாட்களாக பாடசாலை செல்லாத நிலையிலும், வீதிகளில் சமைக்கப்படும் சுத்தமற்ற உணவுகளையும் உண்ட வண்ணம் கடும் பனியில் படுத்துறங்கி வருகின்றனர்.

இதனால் அவர்களது உடல்நிலை வேகமாக பாதிப்படைந்து வருகின்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் வயோதிபர்களாக காணப்படுவதால் அவர்களது உடல் நிலையும் காலநிலையால் வெகுவாக பாதிப்படைந்து வருகின்றது.

இது தவிர தொடர்ந்தும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.
நேற்றும் நேற்றுமுன்தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை விமானப் படையினர் காணிக்குள் தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காவீர்கள் என அறிவுறுத்தல் மூலம் அச்சுறுத்தியுள்ளனர்.

எனினும் போராட்டத்தில் உறுதியான மக்கள் தாம் காணிக்குள் செல்லும்வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தாம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானாலும் தமது காணிக்குள் வீழ்ந்தே உயிரை விடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
நன்றி-வலம்புரி-

Photos