அண்மைய செய்திகள்

recent
-

தாராபுர கிராம பகுதியில் சட்டவிரோத சுற்றுலாவிடுதி தொடர்பாக....


மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் தாராபுர கிராம பகுதியில் கடற்கரைபகுதியில் இருந்து 20 மீற்றர் அருகில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மத்திய வணிக அமைச்சுக்கு செந்தமான சுற்றுலா விடுதியானது மாவட்ட செயலகத்தின் தலையீடு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது.

மேற்படி பிரதேசமக்களினாள் பாரளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு கிடைத்த முறைபாட்டையடுத்து 15.02.2017 இன்றுகுறிப்பிட்டபிரதேசத்துக்கு விஜயம் செய்ததுடன் சம்மந்தப்பட்ட கட்டட வேலையை உடனடியாக நிறுத்துமாறு கூறியதுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் உடனடியாக சம்பவ இடத்துக்கு அழைத்தது அவ் சட்ட விரோத சுற்றுலா விடுதி தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததுடன் சம்மந்தப்பட் சுற்றுலா விடுதி அமைப்பதை உடனடியாகவும்  நிரந்தரமாகவும் நிறுத்தவேண்டும் எனவும் சட்ட அனுமதி பெறாமல் தற்துணிவில் இவ்சுற்றுலா விடுதி அமைத்த நபர்கள் மீதுசட்ட நடவடிக்கை  எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டடார்.

குறிப்பிட்ட அமைச்சர் ஒருவர் மன்னாரில் தொடர்ச்சியாக இவ்வாறான சட்டவிரோத காணி அபகரிப்பிலும் கட்டட நிர்மாணப்பு  பணிகளில் ஈடுபடுவதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததுடன் இது தொடர்பான மகஜர் ஒன்றையும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பியுள்ளார்.
 













     
தாராபுர கிராம பகுதியில் சட்டவிரோத சுற்றுலாவிடுதி தொடர்பாக.... Reviewed by Author on February 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.