அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தொடர்ச்சியாக 'கேரள கஞ்சா' போதைப்பொருள் மீட்பு-மூடி மறைக்கும் நடவடிக்கையில் மன்னார் பொலிஸார்-(படம்)

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்றில் தனது உடமையில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளதோடு அவரிடம் இருந்து சுமார் 40 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதி கொண்டகேரள கஞ்சா போதைப்பொருளை மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று முந்தினம் திங்கட்கிழமை இரவு மீட்டுள்ளனர்.

எனினும் கடந்த சில மாதங்களாக மன்னார் மாவட்டத்தில் மீட்கப்படுகின்ற கஞ்சா போதைப்பொருள் தொடர்பான உண்மை விபரங்களை மன்னார் பொலிஸார் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதில் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் தெரிய வருகின்றது.

தலை மன்னாரில் இருந்து மன்னார் ஊடாக கொழும்பு நோக்கி நேற்று (20) திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் பயணிகளுடன் பயணித்த தனியார் பேரூந்தை மன்னார் தாராபுரம் பிரதான வீதியில் இடை மறித்து சோதனையிட்ட பொலிஸார் பேசாலை பகுதியில் இருந்து கொழும்பிற்குச் சென்ற நபர் ஒருவரின் உடமையில் இருந்து சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதியினை மீட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த தனியார் பேரூந்து இடை மறிக்கப்பட்டு சோதனைக்கு உற்படுத்தப்பட்டது.

-இதன் போதே குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு,மன்னார் போசாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

குறித்த இளைஞரிடம் கைது செய்த பொலிஸார் மேற்கொண்ட விசாரனைகளின் போது தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் 38 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 40 கிலோ கிராம் எடை கொண்ட குறித்த கஞ்சாப்பொதிகள் இலங்கை பெறுமதிக்கு அமைவாக சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதி வய்ந்தது என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றார்.

தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த கேரள கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டு வருகின்ற போதும் உண்மை விபரங்களை ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதில் மன்னார் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றனர்.

அண்மையில் தலைமன்னார்- மன்னார் பிரதான வீதியில் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டது.

குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பாக மன்னார் பொலிஸார் ஊடகங்களுக்கு உண்மை விபரங்களை வழங்க மறுத்து விட்டனர்.

எனினும் சில தினங்களின் மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற தென் பகுதியை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைப்பற்றப்பட்ட கஞ்சாப் போதைப்பொருள் பொதியொன்றை விடுமுறையில் சென்ற போது விற்பனை செய்ய தெண்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டார்.

-குறித்த சம்வத்துடன் மன்னாரை வதிவிடமாக கொண்ட தமிழ் பொலிஸ் கொஸ்தபில் ஒருவர் தொடர்பு கொண்டிருந்த நிலையில் அவர் வவுனியாவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.விசாரனைகள் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்க அமைவாக இடம் பெற்று வருகின்றது.

-அதே வேளை மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் 110 கிலோ கிராம் எடை கொண்ட சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகள் அண்மையில் மீட்கப்பட்டது.

கடந்த வருடத்தை போன்று இம்முறை உண்மை விபரங்களை ஊடகவியலாளர்களுக்கு வழங்க மன்னார் பொலிஸார் மறுத்து வருகின்றனர்.

-மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்பு சம்பவம் தொடர்பாக வினவுகின்ற போதும் தகவலை உறுதிப்படுத்துகின்ற போதும் மேலதிக விபரங்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்கான அனுமதிக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றார்.

-மன்னார் பொலிஸாரின் குறித்த செயற்பாடானது மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்தும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை ஊக்குவிக்கும் செயற்பாடாக காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் உற்பட வடக்கில் பொலிஸாரினால் கைப்பற்றப்படுகின்ற போதைப்பொருள் தொடர்பில் சில மணி நேரங்களில் ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு உண்மை விபரங்கள் வெளி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்


(21-2-2017)

மன்னாரில் தொடர்ச்சியாக 'கேரள கஞ்சா' போதைப்பொருள் மீட்பு-மூடி மறைக்கும் நடவடிக்கையில் மன்னார் பொலிஸார்-(படம்) Reviewed by NEWMANNAR on February 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.