அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்று முடிந்த மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் 65 ஆண்டு விளையாட்டு விழா

 மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் 65 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு விழா நிகழ்வானது நியூ மன்னார் ஊடக அணுசரணையுடன் சிறப்பாக இடம் பெற்று முடிந்துள்ளது


 சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் உதவி அதிபர் செந்தூரன் அவர்களின் நெறிப்படுத்தலில் பழையமாணவர் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி வினோதன் தலைமையில் குறித்த விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றது


 குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனும் நெடுந்தீவு பிரதேச செயலாளருமான சத்தியசோதி மற்றும் அவரது மனைவி வித்தியா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


 குறித்த விளையாட்டு நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கரப்பந்தாட்டம்,கிரிக்கெட்,கால்பந்தாட்டம்,வலைப்பந்தாட்டம்,ஆகிய போட்டிகள் இடம் பெற்ற நிலையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது


 குறிப்பாக கரப்பந்தாட்ட போட்டி ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தை 2021 அணியினரும் இரண்டாவது இடத்தை 2017 பிரிவினரும் பெற்றுகொண்டனர்


 கரப்பந்தாட்ட போட்டி பெண்கள் பிரிவில் முதலாவது இடத்தை 2016 அணியினரும் இரண்டாவது இடத்தை 2017 பிரிவினரும் பெற்றுகொண்டனர்


 அதே நேரம் வலைபந்தாட்டத்தில் பிரிவில் முதலாவது இடத்தை 2016 அணியினரும் இரண்டாவது இடத்தை 2009 பிரிவினரும் பெற்றுகொண்டனர் 


 கிரிக்கட் ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தை 2017 அணியினரும் இரண்டாவது இடத்தை 2015 பிரிவினரும் பெற்றுகொண்டனர்


 கால்பந்தாட்ட போட்டி ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தை 2023 அணியினரும் இரண்டாவது இடத்தை 2020 பிரிவினரும் பெற்றுகொண்டனர்


 குறித்த விளையாட்டு போட்டிகளில் ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தமது திறமையை வெளிப்படுத்திய வீர வீராங்கணைகளுக்கு சிறந்த வீரர வீரங்கனைக்கான விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது 


 அந்த வகையில் கால்பந்தாட்ட போட்டியில் 2023 ஆண்டு அணியில் ஜெனிபர் சிறந்த வீரருக்கான விருதையும்


 கரப்பந்தாட்ட போட்டியில் 2021 ஆண்டு அணியில் சீனு சிறந்த வீரர்ருக்கான விருதையும் 


கரப்பந்தாட்டம் பெண்கள் பிரிவில் 2016 ஆண்டு அணி சாகித்தியா சிறந்த வீராங்கனைக்கான விருதையும் 

வலைபந்தாட்டதில் 2016 ஆண்டு அணி டிவினி சிறந்த வீராங்கணைக்கான விருதையும் 


 கிரிக்கட் சுற்று போட்டியில் 2017 ஆண்டு அணியில் ஸ்ரிபன் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கதுசிறப்பாக இடம் பெற்று முடிந்த மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் 65 ஆண்டு விளையாட்டு விழா Reviewed by Author on April 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.