அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானிய வான் எல்லையில் அத்துமீறிய ரஷ்ய போர் விமானம்: போர் மூளும் அபாயாமா?


பிரித்தானிய வான் எல்லையில் ரஷ்ய போர் விமானங்கள் இரண்டு அத்துமீறியதை அடுத்து கண்காணிப்பு நடவடிக்கைகளை பிரித்தானிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

பிரித்தானிய வான் எல்லை அருகே ரஷ்யாவின் அணுவாயுதம் தாங்கிய போர் விமானம் Tupolev TU-160 Blackjack இரண்டு வட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதிக்கு பிரித்தானிய விமானங்கள் கண்காணிக்கும் பொருட்டு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அணுவாயுதம் தாங்கும் உலகின் மிகப்பெரிய போர் விமானங்களான Blackjack பிரித்தானிய எல்லையில் வட்டமிட்டு சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பிரித்தானிய வான் எல்லையில் ரஷ்ய போர் விமானங்கள் நுழையவில்லை என பிரித்தானிய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


இதனிடையே குறித்த ரஷ்ய விமானங்களை பிரான்ஸ் நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்புடன் ஸ்பெயின் எல்லையில் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பிரான்ஸ் கடற்பகுதியில் ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறுவது இது 4-வது முறை என குற்றம் சாட்டியுள்ளனர்.

Nato நாடுகளுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமே புடின் அரசு போர் விமானங்களை அனுப்பி வேவு பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே போலந்தில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அமெரிக்க ஐக்கிய நாடுகள் குவித்து வருவது பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் இந்த நடவடிக்கை தங்களுக்கு கண்டிப்பாக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யாவின் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் Alexei Meshkov கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தங்களது எல்லையில் இதுபோன்றதொரு பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை ரஷ்யா பார்த்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பிரித்தானிய வான் எல்லையில் அத்துமீறிய ரஷ்ய போர் விமானம்: போர் மூளும் அபாயாமா? Reviewed by Author on February 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.