அண்மைய செய்திகள்

recent
-

12 நாடுகள் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை : திருத்­தங்கள் இன்றி 23 ஆம் திகதி நிறை­வேற்­றப்­படும்


இலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை வரைவுக்கு இது­வரை 12 நாடுகள் தமது இணை அனு­ச­ர­ணையை வழங்­கி­யி­ருக்­கின்­றன.

அந்­த­வ­கையில் இன்னும் சில தினங்களில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள நிலை யில் அதி­க­மான நாடுகள் இந்த வரைவுக்கு இணை அனு­ச­ரணை வழங்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.


ஐ.நா. மனித உரிமை பேர­வையின் ஒரு­சில உறுப்பு நாடு­களும் உறுப்­பு­ரி­மை­யற்ற சில நாடு­களும் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருக்­கின்­றன.

அந்­த­வ­கையில் அவுஸ்­தி­ரே­லியா, கனடா, ஜேர்­மனி, இஸ்ரேல், ஜப்பான், மொன்ட்­னே­குரோ, நோர்வே, மெஸ­டோ­னியா, பிரிட்டன், அமெ­ரிக்கா ஆகிய நாடுகள் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தன. மேலும் இந்த பிரே­ர­ணை­யுடன் சம்­பந்­தப்­பட்ட நாடான இலங்­கையும் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்க முன்­வந்­துள்­ளது.

அந்­த­வ­கையில் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணை­யா­னது இம்­மு­றையும் வாக்­கெ­டுப்­பின்றி ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­படும் சாத்­தியம் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தப் பிரே­ர­ணை­யா­னது இலங்கை, 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அது­மட்­டு­மன்றி நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றலை இலங்­கையில் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டு வரை 2015 ஆம் ஆண்டு பிரே­ணையை அமுல்­ப­டுத்த கால அவ­கா­சமும் வழங்­கி­யுள்­ளது.

இதே­வேளை நேற்று முன்­தினம் ஜெனிவா விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர சர்­வ­தேச நீதி­ப­திகள் இன்றி உள்­ளகப் பொறி­மு­றையின் மூலம் விசா­ர­ணையை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அந்­த­வ­கையில் இலங்கை பிரே­ர­ணைக்கு மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகள் ஆத­ரவு வழங்­க­வேண்­டு­மென அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுப்பதற்கான இந்தப் பிரேரணைக்கு உறுப்புநாடுகள் இணை அனுசரணை வழங்கவேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
12 நாடுகள் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை : திருத்­தங்கள் இன்றி 23 ஆம் திகதி நிறை­வேற்­றப்­படும் Reviewed by NEWMANNAR on March 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.