அண்மைய செய்திகள்

recent
-

வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி முசலி பிரதேச மக்கள் மறிச்சிக்கட்டியில் கண்டன பேரணி-ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.(படம்)

முசலிப்பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் கபளீகரம் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி முசலி பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்ஸீம் மக்கள் ஒன்றிணைந்து இன்று வெள்ளிக்கிழமை ஜீம்மாத்தொழுகையின் பின் கண்டன போணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பேரணியானது மறிச்சிக்கட்டி ஜீம்மாப்பாள்ளிவாயலில் இடம் பெற்ற ஜீம்மாத்தொழுகையின் பின்னர் மதியம் 1.15 மணியளவில் பள்ளிவாயலுக்கு முன் ஆரம்பமாகி மறிச்சிக்கட்டி சக்கியா பள்ளிவாசலை சென்றடைந்தது.

-இதன் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக்காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வன பரிபாலனதிணைக்களத்துக்கு சொந்தமாக்கப்பட்டதுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாது அதனை வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு விடுவிப்பதற்கான திரைமறைவில முயற்சிகள் இடம் பெற்று வருவதாகவும் குற்றம் சுமமத்தினர்.

-கண்டனப்பேரணியானது மறிச்சிக்கட்டி சக்கியா பள்ளிவாசலை சென்றடைந்த நிலையில் அங்கு கூடியிருந்த பெண்களும் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.

-மேலும் குறித்த வர்த்தமானிப் பிரகடனத்தை அமுல்படுத்திய நாள் முதல் இன்று வெள்ளிக்கிழமை வரையிலான 4 தினங்கள் முசலி பிரதேச மக்கள் மறிச்சிக்கட்டி சக்கியா பள்ளிவாசலுக்கு முன் தமது கண்டன போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி மறிச்சிக்கட்டியில் நான்காவது நாளாகவும் முன்னெடுத்து வருகின்ற அமைதி போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலே முசலி பிரதேச மக்கள் ஒன்றிணைந்து இன்று வெள்ளிக்கிழமை மதியம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி முசலி பிரதேச மக்கள் மறிச்சிக்கட்டியில் கண்டன பேரணி-ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.(படம்) Reviewed by NEWMANNAR on March 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.