அண்மைய செய்திகள்

recent
-

முதலமைச்சரின் கோரிக்கையை மீறி தண்ணீர் பிரச்சினை தொடர்பில் வடக்கு சபையில் நேற்று அமர்வு...


வடக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கையை மீறியும் வடக்கின் தண்ணீர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கான சிறப்பு அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
சிறப்பு அமர்வை நடத்துவது தொடர்பான விடயம் சபை நடவடிக்கை குழுவில் ஆராயப்பட்டதற்கு இணங்க சிறப்பு அமர்வை ஒத்திவைக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டது என தெரிவித்த அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சிறப்பு அமர்வினை நேற்றைய தினம் நடத்தியுள்ளார்.

வடமாகாண சபையின் சிறப்பு அமர்வை ஒத்தி வைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த முதலாவது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இரண்டாவது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. வடமாகாண குடிநீர் தேவைகள், மற்றும் நீர் தேவைகள் தொடர்பாக ஆய்வுகளை நடத்துவதற்கு கடந்த மாதம் சிறப்பு அமர்வொன்றினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்போது அந்த அமர்வை ஒத்திவைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் கடந்த மாத அமர்வில் கேட்டிருந்தார். எனினும் அன்றைய தினமே முதலமைச்சருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அன்றைய அமர்விலேயே 7-ம் திகதி (நேற்றைய தினம்) நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை கடந்த 28 ஆம் திகதி முதலமைச்சர் மேற்படி சிறப்பு அமர்வினை ஒத்திவைக்கும்படி கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக நேற்றைய அமர் வில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த அமர்வை நடத்துவதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு தற்போது அந்த அமர்வினை நடத்துவது பொருத்தமற்றது எனவும் குறிப்பிட்டது. எனினும் அந்த விட யம் சபை நடவடிக்கை குழுவில் ஆராயப்பட்டதற்கு இணங்க சிறப்பு அமர்வை ஒத்திவைக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டது என கடந்த 1ஆம் திகதி முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாகவும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறினார்.

இதேபோல் நீர் பிரச்சினை தொடர்பில் சிறப்பு அமர்வினை நடத்த வேண்டும் என அவைத் தலைவருக்கு கடிதம் மூலம் கோரியிருந்த ஆளும் கட்சி உறுப்பினர்களில் பலர் இந்த அமர்வினை ஒத்திவைக்கும்படி கேட்டிருந்தனர், மேலும் சிலர் முதலமைச்சரின் கோரிக்கையை நிராகரிக்கும்படியும் கேட்டுள்ளனர். இந்நிலையில் திட்டமிட்டபடி நேற்று சிறப்பு அமர்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முதலமைச்சரின் கோரிக்கையை மீறி தண்ணீர் பிரச்சினை தொடர்பில் வடக்கு சபையில் நேற்று அமர்வு... Reviewed by Author on March 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.