அண்மைய செய்திகள்

recent
-

50 ஆண்டுகளுக்கு பின்னர் பிரியாவிடை பெறும் உலகின் மிக உயரமான கேபிள் கார்....


உலகின் மிக பிரபலமான ஜேர்மனியின் கேபிள் கார் சேவையானது 50 ஆண்டுகளுக்கு பின்னர் பிரியாவிடை பெறவிருக்கிறது.

ஜேர்மனியின் மிக உயர்ந்த சுற்றுலாத்தலமான Zugspitze பகுதிக்கு கடந்த 54 ஆண்டுகளாக சேவையில் இருந்த கேபிள் கார் அமைப்பை தற்கால தொழுல்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளனர்.

தற்போதிருக்கும் அதே பயண பாதையில் புதிதாக வடிவமைத்து செயல்படுத்தவிருக்கும் கேபிள் காரையும் இயக்க உள்ளனர்.

அனைத்து கட்டப் பணிகளும் திட்டமிட்டபடி செயல்படுத்தும் படசத்தில் வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் மிக உயரமான மலையில் அமைந்துள்ள குறித்த கேபிள் காரானது 1963 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

சுமார் 2,000 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கேபிள் காரானது சுற்றுலாப்பயணிகளுக்கு உலகின் மிக சிறந்த கோணத்தை ரசிக்கும் அனுபவத்தை வழங்குகிறது.

குறித்த கேபிள் கார் வசதியானது செயல்பட துவங்கிய இந்த 50 ஆண்டுகால இடைவெளியில் சுமார் 21 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை Zugspitze மலைப்பகுதிக்கு கொண்டுச் சென்றுள்ளது.

மட்டுமின்றி பொருத்தப்பட்டிருக்கும் 2 கார்களும் இதுவரை பயணப்பட்ட தூரத்தை கணக்கிட்டால், அது உலகை 76 முறை சுற்றி வருவதற்கு நிகர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை செயல்பட்டு வந்த கேபிள் காரானது மணிக்கு 240 சுற்றுலாப்பயணிகளை எடுத்துச் சென்றுள்ளது.

ஆனால் புதிதாக அமைக்கப்படவிருக்கும் கேபிள் காரானது மணிக்கு 600 சுற்றுலாப்பயணிகளை கொண்டு செல்லும் திறன் படைத்தவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிதாக செயல்படுத்தப்படவிருக்கும் கேபிள் கார் அமைப்புக்கு சுமார் 50 மில்லியன் யூரோ செலவாகும் என கருதப்படுகிறது.

50 ஆண்டுகளுக்கு பின்னர் பிரியாவிடை பெறும் உலகின் மிக உயரமான கேபிள் கார்.... Reviewed by Author on April 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.