அண்மைய செய்திகள்

recent
-

யாழ். மாணவி அனிதா உட்பட 6 பேர் புதிய சாதனை----


ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளுக்கான ஆரம்பகட்ட தேர்வு போட்டியில் 6 தேசிய சாதனைகளை வீர, வீராங்கனைகள் முறியடித்துள்ளனர்.

குறித்த தேர்வு போட்டியானது கடந்த வாரம் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் தன்னுடைய தேசிய மட்ட சாதனையினை முறியடித்து புதிய சாதனையினை படைத்துள்ளார்.

குறிப்பாக 03.45 மீற்றர் உயரத்தினை தாண்டி புதிய இலங்கை சாதனையைப் புதுப்பித்தார்.

அத்துடன், மகளிருக்கான முப்பாய்ச்சலில் விதுஷா லக்ஷானி 13.67 மீற்றருக்கு தாவி மற்றுமொரு இலங்கை சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும்,800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாராச்சியின் வசமிருந்த சாதனையை கயந்திகா அபேரத்ன தனதாக்கிக்கொண்டார்.

800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாராச்சியின் வசமிருந்த சாதனையை கயந்திகா அபேரத்ன தனதாக்கிக்கொண்டார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற போட்டியின் போது தம்மிக்க மெனிக்கேவினால் பந்தயத் தூரத்தை 2 நிமி. 85 செக்கனில் ஓடி முடித்து தன்வசம் வைத்திருந்த சாதனையை, கடந்த வருடம் நடைபெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் போது நிமாலி லியனாராச்சி 2 நிமி 57 செக்கனில் ஓடி முறியடித்தார்.

இந்த நிலையில் கயந்திகா அபேரத்ன 2 நிமி. 55 செக்கனில் கடந்து இந்த சாதனையை தனதாக்கியுள்ளார்.

அத்துடன் சுத்தி எறிதலில் மதுவந்தி மற்றும் 300 மீற்றர் தடகள ஓட்டப் போட்டியில் அஜித் குமார் கருணாதிலக்கவும் புதிய சாதனைகளைப் படைத்தனர்.

இந்த சாதனைகளுடன் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தெரிவுப்போட்டிகள் நிறைவுக்கு வந்ததுடன், இதில் 06 இலங்கை சாதனைகள் நிலைநாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாணவி அனிதா உட்பட 6 பேர் புதிய சாதனை---- Reviewed by Author on April 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.