அண்மைய செய்திகள்

recent
-

உலக வரைபடத்தில்,180 நாடுகளை,7 நிமிடங்களில் பொருத்தி தமிழ் மாணவி சாதனை!


தஞ்சை மாவட்டம், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவி, 180 நாடுகளின் பெயர்களை, உலக வரைபடத்தில் சரியாக பொருத்தி, சாதனை படைத்தார்.

நேற்று முன்தினம், இச்சாதனையை பதிவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

நான்காம் வகுப்பு மாணவி லாவண்யா, உலக வரைபடத்தில் உள்ள, 180 நாடுகளையும், 7 நிமிடங்களில், அதற்குரிய இடங்களில், சரியாக பொருத்தினார்.

அதே வகுப்பில் படிக்கும் ராகவி, 5 நிமிடம், 56 வினாடிகளில், 180 நாடுகளின் பெயர்களை, முதலில் எழுத்துக்களையும், பின், நாட்டின் பெயர்களையும் வாசித்து முடித்தார்.

மேலும், ரியா என்ற மாணவி, உலக வரைபடத்தில், அந்தந்த நாட்டின் பெயர்களை, 15 நிமிடங்களில் ஆங்கிலத்தில் எழுதினார்.

இந்த மூன்று சாதனைகளையும், 'ரியல் வேல்ட் ரெக்கார்ட்' (Real World Record) என்ற அமைப்பு பதிவு செய்து, அதற்கான சான்றிதழ், விருதுகளை வழங்கியது.

மாணவியருக்கு பயிற்சி அளித்த, ஆசிரியை ஆனந்திக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சாதனை மாணவியருக்கு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ரங்கநாதன் பாராட்டு தெரிவித்தார்.

- Dina Malar-

உலக வரைபடத்தில்,180 நாடுகளை,7 நிமிடங்களில் பொருத்தி தமிழ் மாணவி சாதனை! Reviewed by Author on April 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.