அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையிலிருந்து புகலிடம் கோரி லண்டன் சென்ற யாழ். இளைஞனின் சாதனை!


இலங்கையிலிருந்து லண்டனுக்கு புகலிடக் கோரிக்கையாளராக சென்ற யாழ்.இளைஞர் ஒருவர் தொழில்நுட்பத் தொழிலதிபராக சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட ஈழத்து இளைஞரே இவ்வாறு லண்டனில் தொழிலதிபராக முன்னேறியுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இளைஞர், தான் சிறு பராயத்திலிருந்து எதிர் நோக்கிய இன்னல்கள் குறித்தும், தற்போது இந்த உயர் நிலைக்கு வருவதற்கு அவர் மேற்கொண்ட கடின முயற்சிகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

“உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக ஐந்து வயதில் எனது குடும்பத்துடன் புகலிட கோரிக்கையாளர்களாக இலங்கையை விட்டுச் சென்றேன்.

இந்த அகதிப் பயணம், என் குழந்தை பருவத்தையும் வாழ்க்கையின் உயரிய கண்ணோட்டத்திற்கு வழிவகுத்தது.


இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையாளராக 10 பெயர்கள், 15 கடவுச் சீட்டுகளில் சென்று இறுதியாக பிரித்தானியாவிற்குச் சென்றோம்

அடிப்படை ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு வடமேல் லண்டனில் உள்ள பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்றேன். இது ஒரு பெரிய சவாலாக இருந்தது, ஆனால் நான் அதை எதிர்கொண்டேன்.

கடின உழைப்பினாலும் இரவுகளிலும், ஆங்கிலத்தை கற்க ஆரம்பித்தேன். இருப்பினும் எனது முதல் தேர்வில் நான் தோல்வியடைந்தேன். பெற்றோர்களுக்கும் குறைந்த ஆங்கில அறிவு. எனவே ஆங்கிலம் தொடர்பில் அறிந்து கொள்வது எனக்கு சவாலாகவே அமைந்தது.

பெற்றோருக்கும் ஆங்கில அறிவு குறைவு என்பதால் பிறர் பேசும் போது அதை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் பெற்றோரின் வாடிக்கையாளர்களுடன் தொலைபேசியில் எனது அப்பாவைப் போன்று பேசி நடித்துள்ளேன்.

மொழிபெயர்ப்பு மற்றும் கடிதங்களை எழுதி நான் ஏனைய தமிழர்களுக்கு உதவி செய்து வந்தேன். இதனால் எனது ஆங்கில அறிவு கூடியதோடு, ஏனைய புது முயற்சிகளுக்கும் வழிவகுத்தது.


எனக்கு சர்வதேச கல்வி அனுபவம் இருக்க வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினர். அவர்கள் என்னை இந்தியாவில் ஊட்டியில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் படிக்க வைத்தனர்.

இந்த அனுபவம் என் வாழ்க்கையை மாற்றியது. இது கல்விக்கான முக்கியத்துவத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தது, வெற்றி தொடர்பில் உண்மையான பசி ஏற்பட்டது.

நான் உயர்தர கற்கை நெறிகளை மேற்கொள்ள மீண்டும் பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு வந்தேன்.அப்போது வயது 18 அப்போது.

என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு எந்தக் குறிப்பும் இல்லை.

சில சோதனை மற்றும் பிழைகளுக்குப் பிறகு, லண்டனில் உள்ள ஒரு முன்னணி பல்கலைக்கழகத்தில் கணக்கியல் பட்டம் பெற்றேன்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு கொலம்பியாவிற்கு வேலைவாய்ப்பு ஒன்றை தேடிச் சென்றேன். அங்கு பல மக்களை சந்தித்தேன். பின் கலாச்சாரத்தையும் மக்களையும் நேசித்தேன்.

வேலையில் எனது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் சில மாதங்கள் கழித்து, லண்டன் நகரத்தில் ஒரு தரகு நிறுவனத்தில் மீண்டும் பதவி வகித்தேன்.

மூன்று மாதங்களின் முடிவில், நான் வர்த்தகம் செய்யத் தயாராக இருந்தேன். சுவிஸ் நிறுவனமான UBS உட்பட மூன்று நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களாக செயற்பட்டேன்.

நிதி தொழில்நுட்பம் தொடர்பில் பணியாற்ற விரும்பினேன். ப்ரோடக்ட் தொடக்கத்தில் ஒரு வணிக மேம்பாட்டு மேலாளராக நியமனம் பெற்றேன்.

பின்னர், தலைமை நிர்வாகி என்ற விருதையும் பெற்றுக் கொண்டேன்” என குறித்த ஈழத்து இளைஞர் தெரிவித்துள்ளார்.

இந்த சாதனைப்பயணம் தொடர்பில் தற்போது சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து புகலிடம் கோரி லண்டன் சென்ற யாழ். இளைஞனின் சாதனை! Reviewed by Author on April 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.