அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் காணி அனுமதிப்பத்திரம் வழங்ககோரி தொடர்போராட்டம் ஆரம்பம்


முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 77 முஸ்லிம் குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த போராட்டம் முல்லைத்தீவு, முறிப்பு கொத்தியாகும்பம் கிராம விசாலிப் புத்திட்ட அமைப்பினரால் முல்லைத்தீவு நீராவிப்பிட்டி குமாரபுரம் சந்தி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த குடும்பங்களுக்கு 1982 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முறிப்பு கொத்தியாகும்பம் கிராம காணிகளுக்கு இன்று வரை அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.


மேலும், கரைதுரைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ் நாகன் சோலைத்தீவு காடு கிராம விசாலிப்பு திட்டக்காணிகள் 1977 ஆம் ஆண்டு 102 தமிழ் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


அந்தக் காணிகளுடன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள நல்லுமுறிப்பு மற்றும் அம்பலன்பற்று காணிகள் என்பன இன்று வரை உரிய குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை என போராட்டகாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


முல்லைத்தீவில் காணி அனுமதிப்பத்திரம் வழங்ககோரி தொடர்போராட்டம் ஆரம்பம் Reviewed by Author on April 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.