அண்மைய செய்திகள்

recent
-

மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதை வலியுறுத்தவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்- சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் 'சயில் செட்டி

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதை வலியுறுத்தவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். சர்வதேசத்திடம் இலங்கை வாக்குறுதியளித்துள்ள நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்கு இலங்கை அரசு காலம் தாழ்த்தாது தீர்வு வழங்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் 'சயில் செட்டி' தெரிவித்தார்.

முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் இன்று திங்கட்கிழமையுடன் 12 ஆவது நாளாகவும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

-இதன் போது முள்ளிக்குளம் மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அவதானிப்பதற்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் 'சயில் செட்டி' உள்ளிட்ட குழுவினர் இன்று திங்கட்கிழமை காலை முள்ளிக்களம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை சந்தித்து உரையாடினர்.

-பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் 'சயில் செட்டி' அவ்வாறு தெரிவித்தார்.


-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இராணுவ முகாமுக்கு முன்னதாக காணி மீட்புக்கு மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிந்து இங்கு வந்திருக்கிறோம்.நேரடியாக நிலைமைகளை ஆராய்துள்ளோம்.

இன்றைய சூழ்நிலையில் இலங்கை என்று சொன்னால் உலக நாடுகளுக்கு தெரிந்துள்ளது.
2009 ஆண்டு உள்நாட்டுப்போர் முடிவடைந்துள்ள நிலையில் கிட்டத்தட்ட 10 வருடங்கள்களை நெருங்கும் வேளையில் மக்களின் பிச்சனைகள் தீர்க்கப்படவில்லை.

மீள் குடியேற்றம் உற்பட காணி தொடர்பான பிரச்சனைகள் அரசாங்கத்தால் தீர்க்கப்படவில்லை.
முள்ளிக்குளம் மக்கள் இரண்டு மூன்று தடவைகள் இடம் பெயர்ந்த நிலையில் மீள் குடியேறியுள்ளனர்.
ஆகவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதை வலியுறுத்தவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.
சர்வதேசத்திடம் இலங்கை வாக்குறுதியளித்துள்ள நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்.

இலங்கை அரசு காலம் தாழ்த்தக் கூடாது என்பதுடன் புதிய அரசு பதவியேற்று இரண்டு வருட காலம் முடிந்து விட்ட நிலையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இலங்கையின் பிரதமர் உட்பட பல அரச தலைவர்களை நாங்கள் சந்திக்கவுள்ளோம்.

இந்த நிலையில் இந்த பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும் அவர்களின் நீதிக்காகவும் அரசிடம் வலியுறுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இம் மக்கள் சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், டெலோ மாவட்ட அமைப்பாளர்கள் அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்

(3-4-2017)


மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதை வலியுறுத்தவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்- சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் 'சயில் செட்டி Reviewed by NEWMANNAR on April 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.