அண்மைய செய்திகள்

recent
-

தாடி, மீசையுடன் வாழும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பெண்....


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழும் 24 வயதான அல்மா டோர்டெஸ் என்னும் இளம்பெண் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோயினால் ஒழுங்கற்ற மாதவிடாய், தாய்மை அடைவதில் சிக்கல், முகத்தில் தாடி, மீசை முளைத்தல், உதிர போக்கு, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

இதனால் இதய கோளாறுகள், எடை அதிகரிப்பு, தூக்கமின்மை போன்ற உடல்நல கோளாறுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

அல்மா தனது 16 வயதில் இருந்து இந்நோயினால் பாதிக்கப்பட்டதால் அவர் முகத்தில் அடர்த்தியாக தாடி, மீசை வளர ஆரம்பித்தால் வீட்டிற்குள் முடங்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கே வந்தார்.

ஆனால் அவரது காதலர்,” தாடி, மீசையுடன் அழகாக உள்ளாய். இப்படி இயற்கையாகவே இருந்துவிடு. எனக்கு பிரச்சனை இல்லை”, எனக் கூறி தன்னம்பிக்கை அளித்துள்ளார்.

அதன் பின் வெளியுலகிற்கு வர ஆரம்பித்த அல்மா அனைவரின் கேலிக்குள்ளான போது மனம் தளராது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார்.

இது குறித்து,” ஐந்து ஆண்டுகளாக என் காதலர் எனக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். வெளியிடங்களுக்கு செல்லும் போது நேரிடையாக எதுவும் சொல்லாவிட்டாலும் மொபைலில் படம் பிடிப்பர்.

தாடி, மீசை எனக்கு ஒரு குறையாக தெரியவில்லை. நோயை எதிர்த்து போராடுவதை தவிர்த்து மற்றவர்கள் நினைப்பதை பற்றி யோசிப்பது கொடுமையானது,” என அல்மா கூறியுள்ளார்.

தாடி, மீசையுடன் வாழும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பெண்.... Reviewed by Author on April 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.