அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு உதவி வழங்க 44 நாடுகள் முன்வருகை...


இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக 44 சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இவற்றில் 30 நாடுகளின் உதவிகள் விரைவாக இலங்கைக்கு கிடைக்கவுள்ளதுடன் வெள்ளம் மண் சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த நிதியில் நேரடியாகவே வீடுகளை நிர்மாணித்து வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக துறைமுக கப்பல்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கும் உதவியுடன் தற்போதைய இயற்கை அனர்த்தங்கள் உட்பட மீதொட்டமுல்ல, கேகாலை அனர்த்தங்கள், சாலாவ அனர்த்தம் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீடுகளை நிர்மாணித்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை அறிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

44 சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாக நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார். அதில் 30 நாடுகள் உடனடியாக தமது உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிணங்க நேற்று ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகளைக் கொண்டு அண்மைக் காலங்களில் இடம்பெற்ற இயற்கை அனரத்தங்களில் பாதிக்கப்பட்ட சகலருக்கும் வீடுகள் நிர்மாணித்து வழங்கும் தீர்மானத்தை ஜனாதிபதி முன்வைத்தார்.

இதேவேளை, கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் மீண்டும் அழிவுகளுக்குள்ளாகியுள்ளன.இதனால் பாதிக்கப்படாத இடங்களில் வீடுகளை நிர்மாணித்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கென பொருத்தமானதும் இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்படாததுமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டே வீடுகள் அமைக்கப்படவுள்ளன.வீடுகளை நிர்மாணித்தல் தொடர்பில் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய அரசாங்க சுற்றறிக்கை இன்னும் 2, 3, தினங்களில் வெளியிடப்படும்,

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்ச அளவில் நிவாரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு உதவி வழங்க 44 நாடுகள் முன்வருகை... Reviewed by Author on May 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.