அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை செல்லும் போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்! மோடியிடம் ஸ்டாலின் வேண்டுகோள்


பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது தமிழக மீனவர்களின் படகுகள் பிரச்சினைக்கு நல்லெண்ண அடிப்படையில் தீர்வு காண இந்திய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வெசாக்’ தினத்தை முன்னிட்டு, மே மாதம் 12-ம் திகதி முதல் 14-ம் திகதி வரை ஐ.நா சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார்.

இந்நிலையில் அவரின் இந்தப் பயணத்தின் பொழுது, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும் அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை பிரதமர் இலங்கையுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனெனில், தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் மாநில அரசு மத்திய அரசிற்கு கடிதம் எழுதுவதை மாத்திரம் செய்கிறது. அதைத் தவிர வேறு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை.

எனவே பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்களும், அவர்களின் படகுகளும் விடுதலை செய்யப்படவேண்டும். இதற்கு வினைத்திரன் மிக்க நடவடிக்கைகள் அவசியம் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, இருநாட்டு அரசுகள் மற்றும் மீனவப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்திய மீனவர்களின் கைதுகளும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்தும் நடந்து கொண்டு தான் இருக்கி்ன்றன.

மீனவர்கள் மீதான தாக்கதல்கள் குறைந்தபாடு இல்லை. படகுகளை விடுவிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னர், திடீரென வட மாகாண மீனவர்கள் அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் கூறுவது வியப்பாக உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கைப் பயணத்தின் போது பிரதமர் தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். இதற்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை செல்லும் போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்! மோடியிடம் ஸ்டாலின் வேண்டுகோள் Reviewed by Author on May 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.