அண்மைய செய்திகள்

recent
-

"நான் வேண்டாதவன் தானே என்னை கூப்பிடவில்லை" -சி.வி


இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பில் உங்களுக்கு அழைப்பில்லையா என வடக்கு மாகாண முதலமைச்சரிடம் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு, நான் வேண்டாதவன் தானே என்னை கூப்பிடவில்லை என முதலமைச்சர் பதிலளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அரச தலைவர்களை சந்தித்த அவர்,

மலையகத்தில் வைத்தியசாலை திறப்பு விழாவிலும் கலந்து கொண்டு வைத்தியசாலையை திறந்தும் வைத்திருந்தார். இந்த நிலையில் நாடு திரும்பும் வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.


இதற்கு முன்னர் இந்திய பிரதமரின் இராப்போசன விருந்து பசாரத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே த.தே.கூட்டமைப்புடனான சந்திப்பில் தங்களுக்கு அழைப்பில்லையா என முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்களால் நேற்றைய தினம் கேட்கப்பட்டது. இதன்போதே நான் வேண்டாதவன் தானே என்னை கூப்பிடவில்லை என அவர் பதிலளித்துள்ளார்.

மேலும், இரவு போசனத்திற்கு அழைத்திருந்தார்கள் நான் போயிருந்தேன். எனக்கு பக்கத்தில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயசங்கர் உடன் இருந்தார். வட க்கு மாகாணத்தை பொறுத்தவரையில்,
மேலும் அதிகமான காணிகளை சுவீகரிக்காது தற்போது இருக்கும் விமான நிலையத்தை மாத்திரம் கொண்டு வர்த்தக விமான நிலையமாக மாற்றுமாறு கோரியிருந்தேன்.

காங்கேசன்துறை துறைமுகம் விஸ்தரிப்பு தொடர்பில் பேசப்பட்டது தலைமன்னார் தனுஸ் கோடி கப்பல் சேவையை மீள ஆரம்பிக்குமாறும் கோரிக்கை முன்வைத்திருந்தேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.




"நான் வேண்டாதவன் தானே என்னை கூப்பிடவில்லை" -சி.வி Reviewed by NEWMANNAR on May 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.