அண்மைய செய்திகள்

recent
-

அதிகமான வீதி விபத்துக்கள் வடமாகாணத்திலேயே இடம் பெற்றுள்ளது-வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன்

கடந்த வருடம் மட்டும் வீதி விபத்துக்களால் ஏறக்குறைய 2900 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 7500 க்கும் மேற்பட்டவர்கள் உடல் அவயவங்களை இழந்துள்ளதாகவும் ஏறக்குறைய 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் நடை பெற்றுள்ளதாகவும், அதில் அதிகமான வீதி விபத்துக்கள் வட மாகாணத்திலேயே இடம் பெற்றுள்தாக வடமாகாண வீதி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 09 ஆவது அமர்வு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை அமைச்சரது மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் இடம் பெற்றது.
-குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய விடையங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,

மேற்படி கூட்டத்தில் இரண்டு முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு விசேட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளத குறித்த அமர்வு இடம் பெற்றது.

கடந்த வருடம் மட்டும் வீதி விபத்துக்களால் ஏறக்குறைய 2900 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 7500 க்கும் மேற்பட்டவர்கள் உடல் அவயவங்களை இழந்துள்ளதாகவும்,ஏறக்குறைய 35ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் அதிகமான வீதி விபத்துக்கள் வட மாகாணத்திலேயே இடம் பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாகவும், இதனைக் கட்டுப்படுத்தாமலும் ஒழுங்கு படுத்தாமலும் விடுவோமெனில் கடந்த காலத்தைவிட எதிர்காலத்தில் பன்மடங்குகளால் அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளது.

அந்தவகையில் மேற்படி விடயங்களை ஒழுங்குபடுத்தும் பொருட்டு கடந்த 15 ஆம் திகதி பல்வேறு சட்ட ஒழுங்குகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடமாகாணத்திற்குள் சேவை வழங்குகின்ற இலங்கை போக்குவரத்து சபையினருக்கு 40வீதமும், தனியார் பேருந்துகளுக்கு 60வீதம் என்ற வகையில் பேரூந்து சேவைகளை ஒழுங்கு செய்யவும், அதனடிப்படையில் இணைந்த நேர அட்டவணையை தயார் செய்து அமுல் படுத்துவது தொடர்பில் விசேட அறிவுறுத்தல்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவற்றை மீறுகின்ற தரப்பினருக்கு எதிராக 10,000 ரூபாய் தண்டப்பணமும் அல்லது இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கவும் அல்லது இரண்டு தண்டனைகளையும் அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.

ஆகவே சம்பந்தப்பட்ட சேவை வழங்குகின்ற இரு தரப்பினரும் வீதிகளில் வருகிற பொது மக்களது உயிர்களில் அக்கறையுள்ளவர்களாக செயற்படுமாறும், ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்படுகளையும் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு இரண்டாவது தீர்மானமாக வவுனியா மாவட்டத்தில் ஏறக்குறைய 195 மில்லியன் ரூபாய்களில் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற புதிய பேரூந்து நிலையத்தை மீள இயங்கவைப்பது தொடர்பிலும், அதனை ஒழுங்குபடுத்துவது தொடர்பிலும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேற்படி இரண்டு விடயங்களையும் செயற்படுத்தும் பொருட்டு நீதிமன்ற கட்டளையையினை பெறுவதற்கான தீவிர நடவடிக்கையில் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

-எனவே சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி எமது மாகாணத்தை வீதி விபத்துக்கள் அற்ற மாகாணமாக மாற்றுவதற்கும், அதி உச்ச சிறந்த போக்குவரத்து சேவையினை மக்களுக்கு வழங்குவதற்கும் அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறும் அமைச்சர் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

மன்னார் நிருபர்-
(31-05-2017)


அதிகமான வீதி விபத்துக்கள் வடமாகாணத்திலேயே இடம் பெற்றுள்ளது-வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன் Reviewed by NEWMANNAR on May 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.