அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச தொழிலாளர் தினமானது தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது-வி.எஸ். சிவகரன்.(Photos)

சர்வதேச தொழிலாளர் தினமானது தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டு அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுவதற்காகவும், கூட்டத்தை கூட்டுவதற்காகவும் தொழிலாளர் தினம் நிகழ்வாக அனுஸ்ரிக்கப்பட்டு வரவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

'அடக்கு முறைக்கு எதிராக அணி திரள்வோம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மே தின கூட்டம் இன்று திங்கடக்pழமை காலை 10 மணிளவில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தில் இடம் பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு மே தின சிறப்புரை ஆற்றுகையிலேயே வி.எஸ்.சிவகரன் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,


தற்போதைய சூழ்நிலையில் மே தினங்கள் அரசியல் கட்சிகளின் கூட்டங்களாகவே நடாத்தப்பட்டு வருகின்றது.


தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிக மோசமான முறையில் குறித்த சம்பவம் அரங்கேரி வருகின்றது.

மே தினம் என்கின்ற கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு இடது சாரிகள் தமது பிரதான கொள்கைக்கோட்பாடுகளோடு முன்னிறுத்திய காலங்கள் எல்லாம் போய் தற்போது இலங்கை போன்ற நாடுகளில் இடது சாரிகள் வலது சாரிகளில் உற்புகுந்து அவர்கள் வலுவான ஒரு நிகழ்தகவை நடத்த முடியாத ஒரு சூழ்நிலையில் காணப்படுகின்றனர்.

-இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் தினம் வெறுமனே சம்பிரதாய பூர்வமாக அரசியல் மயப்படுத்தப்பட்ட நிகழ்வாகவே நடாத்தப்பட்டு வருகின்றது.

-தொழில்ச்சங்கங்கள் தொழில் உரிமைகளுக்காகவும்,தொழில் உரிமைகளுக்கான நிலைப்பாட்டை சரியாக நகர்த்திச் செல்ல வேண்டிய போக்கிலும் கொண்டு செல்ல வேண்டிய தேவை தொழிலாளர்களுக்கும்,தொழில் உறவாளர்களுக்கும்,தொழில் உரிமையாளர்களுக்கும் இட்டுச் செல்லக்கூடிய ஒரு பணிக்காக நாங்கள் அவர்களுடைய உரிமைக்காக போராட வேண்டிய கால கட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பும்,கடமையும் சமூக நிலையியலாளர்களுக்கு உள்ளது.என தெரிவித்தார்.

-குறித்த மே தின கூட்டத்தில் அருட்தந்தை ஜெதாஸ் அடிகளார் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





சர்வதேச தொழிலாளர் தினமானது தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது-வி.எஸ். சிவகரன்.(Photos) Reviewed by NEWMANNAR on May 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.