அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா? மே தின கூட்டத்தில் சிறீதரன் எம்.பி ஆதங்கம்


தமிழ் மக்களுடைய கண்ணீருக்கும், கவலைகளுக்கும் இந்த அரசாங்கம் பதில் கூற தவறுமாக இருந்தால் அவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியிலும், அறவழியிலும், தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கேட்கின்ற போது அரசாங்கம் அதை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றது.

அப்படியானால், மீண்டும் யுத்தம் எனும் சகதிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் சிந்திக்கின்றதா? தமிழ் மக்கள் இதய சுத்தியுடனேயே இருக்கின்றனர்.

தமிழ் மக்களுக்காக எவ்வளவு தூரம் விட்டுக்கொடுத்து செயற்பட வேண்டுமோ அவ்வளவு தூரம் விட்டுக்கொடுத்து செயற்பட தயாராகவே இருக்கின்றோம்.

தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றோம். எனினும், அரசாங்கமும், அரசாங்கத்தில் இருக்கின்ற சிங்கள தலைவர்களும் இதனை இதய சுத்தியுடன் பார்க்கின்றீர்களா?

அவ்வாறு இல்லாவிடின் உங்களின் எண்ணம் என்ன? மீண்டும் தமிழர்களை என்ன நிலைக்கு கொண்டு செல்ல நினைக்கின்றீர்கள்? எனவும் அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, “தொழிலாளர்களாக இருந்து அந்தந்த குடும்பங்களை வழிநடத்தி பாதுகாக்க வேண்டிய உழைக்கும் வர்க்கத்தினர், இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா? மே தின கூட்டத்தில் சிறீதரன் எம்.பி ஆதங்கம் Reviewed by Author on May 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.