அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மூடிய நிலையில் உள்ள தொல்பொருளியல் அலுவலகம்…..

மன்னாரின் அடையாளங்களில் ஒன்றான பள்ளிமுனையில் அமைந்துள்ள பெருக்கமரத்தினைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய விளம்பரப்பலகையானது மங்கிய நிலையில் உள்ளது அதை மாற்றி புதிதான விளம்பரபலகையினை போடுவதற்காக மன்னார் நகரசபைச்செயலாளர் அவர்களை சந்தித்தபோது புதிதாக விளம்பரப்பலகையினை நகரசபையினால் செய்து போடுவதாகவும் அதற்கு அனுமதியினை மன்னார் தொல்பொருளியல் அலுவலகத்திடம் பெற்றுத்தாருங்கள் ஏன் என்றால் தொல்பொருளியல் அதிகாரிகளின் பிரிவுக்குள் தான் வருகின்றது என்றார்.

மகிழ்ச்சியுடன் தொல்பொருளியல்அலுவலகத்தினை முதலில் தேடினேன் பெயர்பலகையே இல்லை.... பின்பு அங்கு அலுவலகம் உள்ளது ஆனால் அங்கு யாரும் இல்லை தொடர்ந்து 15 நாட்கள் சென்றேன் பலன் இல்லை
மன்னார் மாவட்டத்தில் கச்சேரியில் விளையாட்டு அபிவிருத்தி பிரிவுக்கு முன்பாக உள்ளது தொல்பொருளியல் அலுவலகம் அவ்வலுவலகம் மாதம் 30-31நாளும் மூடிய நிலையில் தான் உள்ளது ஏன் என்று புரியவில்லை.....

மன்னாரில் தொல்பொருளியல் தொடரபான எந்த விடையங்களும் இல்லையா….
அப்படியானால்….
  • மன்னார் கோட்டை(சென் ஜோர்ஜ் கோட்டை)
  • மன்னார் அல்லி ராணிக்கோட்டை
  • கரிசலில் உள்ள பழைய கச்சேரி
  • பள்ளிமுனையில் உள்ள பெருக்கமரம்
  • இன்னும் பல இடங்கள் தொல்பொருளியல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளது அப்படி இருக்கும் போது ஏன் அலுவலகம் மூடிய நிலையிலே உள்ளது என்ன பிரச்சினை…..

கச்சேரியில் சென்று விசாரித்தபோது கிழமையில் ஒருநாள் மட்டும் வருவதாகவும்   வந்து அலுவலகத்தினை கூட்டிதுப்பரவுசெய்து விட்டு சிறிது நேரம் கடமை புரிந்து விட்டு சென்றுவிடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
என்ன கடமை என்று விளங்கவில்லை…..

மன்னாரில் அழிவது அழிந்து கொண்டு தான் இருக்கின்றது. அதைக்காப்பாற்றுவும் ஆள் இல்லை அழிந்து எஞ்சியிருக்கும் சில வரலாற்று பொக்கிசங்களை காப்பற்றவும் ஆள் இல்லை இப்படியான சூழல் தொடர்ந்தால் எஞ்சி இருப்பதும் இருப்பது முற்றாக அழிந்து போனபின்பு என்ன தேவைக்காக இந்த தொல்பொருளியல் அலுவலகம் தேவையில்லாத ஒன்று தானே….

ஏன் இவ்வாறான விடையங்களை எமது மன்னார் மக்களும் அதிகாரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக இளைஞர் யுவதிகளும் கண்டு கொள்ளாமலும் அக்கறையின்மையோடும் இருக்கின்றார்கள் என்று புரியவில்லையே….கடவுளே….

செய்வதற்கு ஆள்பலமும் உள்ளது  நிதிவளமும் உள்ளது ஆனல் அனுமதி மட்டும் தான் இல்லை இதனால் பல அபிவிருத்திகள் நடைபெறாமல் உள்ளது கவலையான விடையமே

மன்னாரின் எழுச்சியை விரும்புகின்றவர்களில்  ஒருவன்
-வை.கஜேந்திரன்-





மன்னாரில் மூடிய நிலையில் உள்ள தொல்பொருளியல் அலுவலகம்….. Reviewed by Author on May 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.