அண்மைய செய்திகள்

recent
-

சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள கிணறு……


யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் அருகாமையில் அமைந்திருக்கும் சிறிய கிணறு சுமார் 20அடி ஆழமுடைய தண்ணீர் அற்ற கிணறு ஒன்று உள்ளது. இக்கிணறு நிலத்தில் இருந்து 3அடி உயரம் தான் இருக்கும் இதுயாவருக்கும் தெரிந்த விடையம் தான்.
இங்கே சொல்ல வருகின்ற விடையம் என்னவென்றால் இக்கிணறு இருப்பது பிரச்சினை இல்லை இருக்கும் இடமும் அக்கிணறு பாதுகாப்பற்றமுறையில் இருப்பதுதான் இங்கே பிரச்சினைக்குரிய விடையம்…

காரணம் என்னவெனில் இந்த தரிப்பிடமானது ஏராளமான மக்கள் வந்து போகக்கூடிய இடமாகவும் இருக்கின்றது அதே வேளை இங்கே பெருமளவான பெண்கள் குறிப்பாக அவர்களோடு குழந்தைகள் சிறுவர்கள் வந்து போகின்ற இடத்தில் இக்கிணறு அமைந்துள்ளதானது பிரச்சினைக்குரிய விடையமே பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால்…

எனவே யாழ்ப்பாண மாநகர சபை பிரதேசசபை சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நல்ல தீர்வினை செயலாற்ற முன்வரவேண்டும். அசம்பாவிதங்கள் உயிர்பலிகள் ஏற்பட முன்னம் மிகவிரைவாக அக்கிணறை தகுந்த பாதுகாப்பான மேற்பரப்பினை கம்பி சட்டகத்தினால் மூடலாம் அல்லவா.....
முறையில் அமைக்கவேண்டிய பொறுப்பு உங்களுடையது.

உருவாக்கியதை பாதுகாப்பாக பயன்படுத்துவோம்

குறை காண்பது நோக்கமல்ல…நிறைவாக வாழ…..
மழைவரும் முன் அணை கட்டவேண்டும் என்பார்கள் பெரியோர்….
அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்…..


-வை-கஜேந்திரன்-


சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள கிணறு…… Reviewed by Author on May 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.