அண்மைய செய்திகள்

recent
-

விக்னேஸ்வரனை பதவி நீக்கிவிட்டால் ஊழல் குற்றம் நிரூ பிக்கப்பட்ட கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இராஜனாமா செய்ய தேவையில்லை -தமிழரசு கட்சி சயந்தன் சொல்கிறார்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்கிவிட்டால் ஊழல் குற்றம் நிரூ பிக்கப்பட்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இராஜனாமா செய்ய தேவையில்லை என தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந் திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் நீதிக்கான உறுப்பினர்கள் என்ற புதிய அமைப்பின் சார்பில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந் திப்பு ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றது.

இதன் போது அமைப்பின் சார்பில் நேற்றைய தினம் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி கேசவன் சயந்தன் மற்றும் அரியரட்ணம் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்கள். இதன் போது ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணையை அடுத்து இரு அமைச்சர்களையும் தாமாகவே விலகுமாறும் ஏனைய இரு அமைச்சர்களையும் இரு மாத விடுமுறையில் நிற்குமாறும்,
வடக்கு மாகாண முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து, அவரை பதவியிலிருந்து தூக்கியெறியும் முயற்சியில் தமிழரசு கட்சி ஈடுபட்டிருந்தது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து 15 பேரினது கையொப்பங்களுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழரசு கட்சியின் சிவஞானம் கையளித்திருந்தார். அரசோடு இணைந்த தமிழரசு கட்சியின் இந்த முடிவுகளுக்கு,
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எதிர்ப்பு வலுப்பெற்று வரும் நிலையிலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் வடக்கில் பூரண ஹர்த்தால் ஒன்றையும் நடத்தியிருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழரசு கட்சி நேற்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பை அவசர அவசரமாக ஒழு ங்கு செய்து நடாத்தியிருந்தனர். இதன்போது ஊடகவியாளர்களுக்கு கருத்துதெரிவித்த உறுப்பினர் சயந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் தமிழரசு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றார்.

இதனை விட நிர்வாகத்தை சரியான முறையில் அவர் கொண்டு நடத்த முடியவில்லை. வடக்கு மாகாண சபையில் உள்ள 30 ஆளுங் கட்சி உறுப்பினர்களுக்கும் சரியான தலைமைத்துவத்தை வழங்க முதலமைச்சர் தயாராக இல்லை. தனக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்தாலும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனை காப்பற்ற முயன்றார். இதனால் தான் முதலமைச்சருக்கு எதிராக நாங்கள் செயற்பட வேண்டிவந்தது என்றார்.

மேலும் ஊழல் புரிந்ததாக நிரூபிக்கப்பட்ட அமைச்சர் குருகுலராசாவை ஏன் இன்னமும் உங்களோடு வைத்துள்ளீர்கள் என ஊடக வியலாளர் ஒருவர் கேட்ட போது,
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந் தும் பதவியில் இருப்பதே கேள்விக்குறியாகியுள்ள நிலையிலும், புதிய அமைச்சரவை ஒன்று தோற்றம் பெற்றாலும் கல்வி அமைச்சர் பதவி விலக தேவையில்லை. முதலமைச்சரை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவி நீககம் செய்யலாம். ஆனால் அதனை நாங்கள் நேரடியாகச் செய்யப் போவதில்லை. ஆளுந ரின் நடவடிக்கைகள் ஊடாகவே முதலமைச்சரை பதவி நீக்கும் நிலை ஏற்படும் என்றார்.

வடக்கில் சாதாரண மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது உங்களுக்குள் இவ்வாறு மோதிக் கொள்வது மக்களிடயே ஆதரவை குறைக்காதா? என கேட்டபோது அதனை தேர்தல் காலங்களில் தான் அறிய முடியும் என தெரிவித்தார். மேலும் புதிய முதலமைச்சர் பதவிக்கான தெரிவில் தற்போதைய அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் பெயர் சிபார்சு செய்யப்பட்டுள்ளது எனவும் உறுப்பினர் சயந்தன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
விக்னேஸ்வரனை பதவி நீக்கிவிட்டால் ஊழல் குற்றம் நிரூ பிக்கப்பட்ட கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இராஜனாமா செய்ய தேவையில்லை -தமிழரசு கட்சி சயந்தன் சொல்கிறார் Reviewed by NEWMANNAR on June 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.