அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிக அமைதியான நாடு எது தெரியுமா....


அவுஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் 2017ம் ஆண்டில் அமைதியான நாடுகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டது.

மொத்தம் 163 நாடுகள் இடம் பெற்ற அந்த பட்டியலில் , அமைதியான நாடுகளில் முதல் இடத்தை ஐஸ்லாந்தும், இரண்டாமிடத்தை டென்மார்க்கும் மூன்றாவது இடத்தை ஆஸ்திரியாவும் பிடித்துள்ளன.

ஆசிய நாடுகளான பூடான் 13வது இடத்திலும், இலங்கை 80வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும் உள்ளது கவனிக்கத்தக்கது. இந்தியாவுக்கு 137வது இடம் கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் 152 வது இடத்தையும். ஆப்கானிஸ்தான் 162 வது இடத்தையும் பிடித்துள்ளன. ஐஎஸ் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மிகுந்த அமைதி குறைந்த நாடாக இடம் பெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து தெற்கு சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

தீவிரவாத அமைப்புகளின் வன்முறையால் ஒட்டு மொத்த உலக நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உலகின் மிக அமைதியான நாடு எது தெரியுமா.... Reviewed by Author on June 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.