அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் இந்து சமய அறநெறி விழிப்புணர்வு வாரம் ஆரம்பம்..... படங்கள் இணைப்பு

மன்னார் மாவட்டத்தில்  மாந்தை மேற்கு பிரதேசத்தில் இடம் பெற்ற இந்து சமய அறநெறி விழிப்புணர்வு வார ஆரம்ப நிகழ்வும் சம்பந்தர் குருபூஜை நிகழ்வும் மன்னார் மாவட்டத்தில்  அறநெறிப்பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் தர்மகுமார குருக்கள் தலைமையில் வட்டக்கண்டல் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு வாரம் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் - 2017
அறிமுகம்
இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு வாரம் மூன்று வயதில் ஞானம் பெற்ற குழந்தை திருஞானசம்பந்தரது குருபூஜை தினமாகிய ஜூன் மாதம் 10 ந் தேதி முதல் 16 ஆம் தேதி வரை “அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திடுவீர்” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 
அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இவ்வாரத்தில் இந்து சமய அறநெறிக் கல்வி கொடி வாரமாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

தேசிய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு வாரம் மற்றும் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி வாரம் அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கங்கள்
  • இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை இந்துமக்கள் மத்தியில் குறிப்பாகப் பெற்றோர் மத்தியில் ஏற்படுத்துதல். 
  •  இந்து மாணவர்கள் கல்வி கற்கும் அனைத்துப் பாடசாலைகளும் இந்து மாணவர்களை அறநெறிப் பாடசாலைகளுக்கு செல்வதனை ஊக்கப்படுத்தவேண்டியதன் அவசியத்தை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்திற்கு உணர்த்துதல்.
  •  ஆலயங்கள் தோறும் அறநெறிப்பாடசாலைகள் எனும் இலட்சிய வாசகத்திற்கு அமைவாக அறநெறிப் பாடசாலைகள் இல்லாத இடங்களில் அறநெறிப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு ஆலய அறங்காவலர்கள் முன்வரவேண்டியதன் அவசியத்தை உணர்த்துதல்.
  • அறநெறிப்பாடசாலைகள் சீரான முறையில் நடத்தப்படுவதற்கும் மாணவர்கள் தடையின்றி அறநெறி வகுப்புக்களுக்கு செல்லுவதற்கும் ஏதுவாக தனியார் கல்வி நிலையங்கள் வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்திலும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை நேரத்திலும் வகுப்புக்கள் நடத்தப்படுவதை தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை தனியார் கல்வி நிலைய நடத்துனர்களிற்கு உணர்த்துதல்.
  • கொடி வாரத்தில் சேகரிக்கப்படும் நிதியினைக்கொண்டு இந்துசமய அறநெறிக் கல்விச் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான நிதியம் ஒன்றை 1985ஆம் ஆண்டு 31ஆம் இலக்க இந்து பண்பாட்டு நிதிய சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்து பண்பாட்டு நிதியத்தின் கீழ் ஏற்படுத்துதல்
  • ஒவ்வொரு மாணவர்களும் சமூக சேவை மற்றும் மற்றவர்களுக்கு உதவுதலை நோக்கமாகக் கொண்டு வாழ வேண்டும். எனவே இந்நிதி சேகரிப்பின் மூலம் அறநெறியின் முக்கியத்துவம் உணரப்படுவதுடன் மாணவர்களும் சேவையில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
 











மன்னார் மாவட்டத்தில் இந்து சமய அறநெறி விழிப்புணர்வு வாரம் ஆரம்பம்..... படங்கள் இணைப்பு Reviewed by Author on June 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.