அண்மைய செய்திகள்

recent
-

மக்களை திசைத்திருப்பும் வகையில் ஊடகங்கள் செயற்பட கூடாது: அன்டனி ஜேசுதாஸன்

ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது உண்மையை உண்மையாக கூறுவதோடு மக்களை திசைத்திருப்பும் வகையில் செயற்பட வேண்டாம் என அன்டனி ஜேசுதாஸன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக இல்லத்தில் நேற்று மன்னார், முள்ளிக்குளம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக நடைப்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துக்கொண்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு, கிழக்கு இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸன் தெரிவித்த கருத்து தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட க்கு, கிழக்கு இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸன் ஊடக அறிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ் ஊடக இல்லத்தில் கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார், முள்ளிக்குளம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக நடைப்பெற்ற ஊடக மாநாட்டில் மன்னார் ஆயர் இல்லமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் முள்ளிக்குள மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதனால் மன்னார் ஆயர் இல்லம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.

எனினும் அன்டனி ஜேசுதாஸனாகிய நான் அவ்வாறானதொரு வார்த்தையை பயன்படுத்தவில்லை.மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஊடகங்கள் இந்த தலைப்பை வெளியிட்டிருந்தன.

அன்றைய தினம் ஊடக சந்திப்பில் இடம்பெற்ற உரையாடல்களின் முழுமையான ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்தியின் காரணமாக மன்னார் ஆயர் இல்லமும், குருக்களும் மனத்தாக்கத்திற்கு உற்பட்டமைக்கு எமது கவலையை தெரிவிக்கின்றோம். இது தொடர்பாக நாம் எமது ஆறுதலை தெரிவிக்க விரும்புகின்றோம்.

ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது உண்மையை உண்மையாக கூறுவதோடு மக்களை திசை திருப்பும் வகையில் செயற்பட வேண்டாம் என இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமானது முள்ளிக்குளம் மக்களின் காணி உரிமைக்காக கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது.

அது தொடர்பான செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள்சபை வரை கொண்டு சென்றுள்ள அதேவேளை வெளிநாட்டு தூதுவர்களை களத்திற்கே அழைத்துச் சென்று மக்களின் காணி விடுவிப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பல சான்றுகள் இருக்கின்றன.

2012ம் ஆண்டு இம்மக்கள் மலங்காட்டு பிரதேசத்தில் குடியேறிய போது உடனடியாக செயற்பட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மக்கள் குடியேறிய அடுத்த நாளே களத்திற்குச் சென்று அவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகளை செய்தது மட்டுமல்லாது பல அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தொடர்ச்சியாக அவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

மக்களின் விருப்பத்திற்கு அமைவாக முள்ளிக்குளம் மக்களின் காணி பிரச்சினை சர்வதேசம் வரை கொண்டுச் சென்று இவர்களுக்கான நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு பல அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறான செயற்பாட்டினால் மன்னார் மாவட்ட எமது முன்னாள் இணைப்பாளர் சுனேஸ அவர்கள் நாட்டுக்கு வெளியே வாழ வேண்டி ஏற்பட்டது. இது தொடர்பாக பல ஊடகங்களில் செய்தி வெளியானமை மற்றும் அதற்கான பல சான்றுகள் எம்மிடம் இருக்கின்றன.

அத்தோடு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமானது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக செயற்படும் போது அப்பிரச்சினைகள் தொடர்பாக நன்கு ஆராயாமல், மக்களின் நம்பிக்கையான கருத்துக்கள் மற்றும் ஆதாரம் இல்லாமல் செயற்பட மாட்டாது என்பதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

அந்த வகையில் தான் முள்ளிக்குளம் மக்களின் காணி பிரச்சினைக்காகவும் இதுவரை செயற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் முள்ளிகுளம் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்த விதம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தை தமக்கு உதவும்படி அழைத்த விடயங்கள் காணொளிகள்,எழுத்து வடிவங்களில் மற்றும் குரல் பதிவுகளில் உள்ளது.

எனவே தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமானது எப்போதும் மக்களின் விருப்பத்திற்கு அமைவாகவே செயற்படும் என்பதை குறிப்பிடுவதோடு, மக்களின் பிரச்சினைகளின்போது மக்களுடன் மக்களாக நின்று செயற்படும் என்பதை குறிப்பிடுகின்றோம்.

2017.06.05ம் திகதி யாழ் ஊடகத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பிற்கு பிறகு ஊடகங்கள் மன்னார் ஆயர் இல்லம் துரோகம் இழைத்துவிட்டது என்று பிரசுரித்திருந்த செய்தி தொடர்பாக எமது கவலையையும், வருத்தத்தையும் மன்னார் ஆயர் இல்லத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவ்வாறானதொரு வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு ஊடகங்கங்கள் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றோம். என அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களை திசைத்திருப்பும் வகையில் ஊடகங்கள் செயற்பட கூடாது: அன்டனி ஜேசுதாஸன் Reviewed by NEWMANNAR on June 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.