அண்மைய செய்திகள்

recent
-

மலேரியா நோயைப் பரப்பும் நுளம்பு இனம் மன்னார் கரையோரப் பகுதிகளில் கண்டுபிடிப்பு-வைத்தியர் கே.அரவிந்தன்.(படம்)

மன்னார் கரையோரப் பகுதிகளில் மலேரியா நோயை பரப்பும் புது வித நுளம்பு இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மலேரிய தடை இயக்கத்தின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி கே.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,

பேசாலையை அண்மித்த கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மலேரியா நோயைப் பரப்பும் புது வகை நுளம்பு இனம் அiடாயம் காணப்பட்டுள்ளது.அடையாளம் காணப்பட்டுள்ளது.

'அனோப்பிளிப்ஸ்ற் இவன்சி' என்ற புது வகை நுளம்பே இவ்வாறு முதல் முதலாக இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

-குறித்த நுளம்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பரவி இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றோம்.
குறித்த புதுவித நுளம்பானது நகரப்புறங்களில் மலேரியா பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
குறிப்பாக இலங்கையின் முக்கிய நகரங்களை தாக்கி மலேரியாவை பரப்பலாம் என்ற அபாயத்திற்கு இலங்கை உள்ளாகியுள்ளது.

-எனவே இது சம்பந்தமான விழிர்ப்புணர்வு மக்கள் மத்தியில் மிக வேகமாக ஏற்பட்டு குறித்த புதுவித நுளம்பை அழிப்பதற்கான ஒத்துழைப்பு மிக அவசியமானதாக காணப்படுகின்றது.

-இவ் நுளம்பானது தற்போது பாழடைந்த கிணறுகளிலும்,பாவனைக்கு உற்படுத்தப்படுகின்ற கிணறுகளிலும் அதிகலவான குடம்பிகளை பெருக்கி மலேரியா நோயை பரப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றது.

-எனவே இதற்காக இலங்கை மலேரியா தடை இயக்கமும், மன்னார் மாவட்ட மலேரியா தடை இயக்கமும் மக்களுடன் இணைந்து மிக முனைப்பாக செயற்பட்டு வருகின்றது.

குறித்த நுளம்பு தொடர்பான விழிர்ப்பணர்வு மக்கள் மத்தியில் விரைவாக பரப்பப்பட்டு வருவதாக மலேரியா தடை இயக்கத்தின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி கே.அரவிந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
மலேரியா நோயைப் பரப்பும் நுளம்பு இனம் மன்னார் கரையோரப் பகுதிகளில் கண்டுபிடிப்பு-வைத்தியர் கே.அரவிந்தன்.(படம்) Reviewed by NEWMANNAR on June 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.