அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவையின் ஆசனப்பதிவுகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு-(படங்கள் )

தலைமன்னார்-கொழும்பு கையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்களைக் கடந்துள்ள நிலையில் மன்னார் புகையிரத தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் சௌத்பார் புகையிரத தரிப்பிடத்தில் ஆசன முற்பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (30) வெள்ளிக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

-தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவைகள் கடந்த 25 வருடங்களின் பின்னார் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.

-இதன் போது தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான ஆசன முற்பதிவுகள் தலைமன்னார் புகையிரத நிலையத்தில் மாதத்திரமே மேற்கொள்ளப்பட்டது.

-இதனால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளுவதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.

-இந்த நிலையில் பாதீக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஆசனப்பதிவுகளை மேற்கொள்ளுவதற்கான துரித நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் முயற்சிக்கு அமைவாக இன்று வெள்ளிக்கிழமை(30) காலை 11 மணியளவில் மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஆசனப்பதிவுகளை மேற்கொள்ளும் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.

மொபிட்டால் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அனுசரனையுடன் ரயில்வே திணைக்களத்தின் உதவி ஆணையாளர் என்.ஜே.இடிபொலி தலைமையில் இடம் பெற்ற ஆசனப்பதிவுகளை மேற்கொள்ளும் ஆரம்ப நிகழ்வின் போது விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முதலாவது ஆசனப்பதிவை மேற்கொண்டு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

-குறித்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பிரமதாசன்,மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன்,மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பலிகக்கார,மற்றும் அனுசரனை வழங்கிய மொபிட்டல் நிறுவனத்தின் அதிகாரிகள் உற்பட பலர் குறித்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









மன்னாரில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவையின் ஆசனப்பதிவுகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on June 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.