அண்மைய செய்திகள்

recent
-

'யுத்தம் முடிவடைந்தாலும் அதன் பாதிப்பின் வடுக்கள் தொடர்கின்றன'-அமைச்சர் றிஸாட்

யுத்தம் முடிவடைந்த போதும் யுத்தத்தின் வடுக்களால் மோசமாக பாதிக்கப்பட்டு இன்னும் தலை தூக்க முடியாத பிரதேசங்களில் ஒன்றாக இருக்கும் மடுப்பிரதேசத்தை முன்னேற்ற வேண்டியகடப்பாடும்,பொறுப்பும் நமக்கு உண்டென்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மடுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கீரி சுட்டான் கிராமத்தில் பல்வேறு தேவைகளை இனங்கண்டு தீர்த்துவைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை கீரி சுட்டான் கிராமத்தில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் கலாநிதி. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை. ,மடு பங்குத்தந்தை மதன்ராஜ்,உதவிஅரசாங்கஅதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் , மடுபிரதேசசெயலாளர் எப்.சி. சத்திய சோதி,உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எம். அமீன்,நிறைவேற்றுபணிப்பளர் மார்க் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கிராமத்தின் தேவைகள் தொடர்பாக ஊர்பிரமுகர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் உழைரயாற்றுகையில்,,,

மன்னார் மாவட்டத்திலே குறிப்பாக மடுப்பிரதேசத்திலே யுத்தம் பாரியதாக்கத்தை ஏற்படுத்தி இருப்பi தநாம் அறிவோம். இதனால் மடுவின் கல்விவளர்ச்சி பின்னடைந்தது.

கடந்த காலங்களில் வடமாகாண முன்னாள் ஆளுநரின் உதவியுடன் இந்தப் பிரதேசத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து கல்வியை ஊக்கப்படுத்தினோம்.

ஆரச அதிகாரிகளும்,அலுவலர்களும்,ஆசி ரியர்களும் இந்தப் பகுதியில் பணி புரிவதற்கு தயக்கம் காட்டிய ஒருகாலம் இருந்தது.
அந்த நிலை இப்போது மாறிவருவது மகிழ்ச்சி தருகின்றது. மடுப் பிரதேச கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் காண்கின்றோம்.

கீரிசுட்டான் சின்னஞ்சிறிய கிராமமாயினும்,பென்னம் பெரிய தேவைகளை கொண்டிருப்பதை நாம் உணர்கின்றோம்.

கல்வி,சுகாதாரம்,விவசாயம்,பாதை போன்ற விடயங்களில் இந்த மக்கள் பல்வேறு கஸ்டங்களையும்,பிரச்சினைகளையும் எதிர் நோக்கி வருகின்றனர். மடுப்பிரதேசத்திற்கான பங்குதந்தை அவர்கள்,இந்த மக்களின் நலன்களில் அக்கறையுடன் செயற்படுபவர்.

ஊர் மக்கள் படுகின்ற அவஸ்தைகளை தீர்த்துவைக்க வேண்டுமென்ற உண்மையான எண்ணத்தில் அவர் தனது ஆன்மீக கடமைகளுடன் மக்கள் பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதில் தனது நேரத்தை செலவிடுகின்றார். முனித நேயத்துடன் பாடு படுகின்றார்.

அதேபோன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளையுடன் நான் முன்னர் இணைந்து பணியாற்றி இருக்கின்றேன்.

மீள் குடியேற்ற அமைச்சராக நான் இருந் தபோது மட்டு–திருமலை ஆயராக அவர் பணியாறறியவர்;. அகதிகளின் நல்வாழ்வுக்காக அவரின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்று பணியாற்றியிருக்கின்றேன்.

வீதி அபிவிருத்தி அமைச்சரின் உதவியைப் பெற்று கிராமத்துக்கான பாதைகளை புனரமைப்பதற்காக நடவடிக்கை எடுப்பேன். தேவை ஏற்படின் அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றையும் சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன்.

வருட முடிவிற்குள் இவ்வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டை முடிந்தளவு பெற்று பாதையை புனரமைப்போம்.

இந்தக்கிராமத்தின் வைத்திய வசதி கருதி ஆரம்ப மருத்துவப் பிரிவொன்றை அமைத்து தரும் வகையில் 2018ம் ஆண்டுக்குள் அந்த திட்டத்தை உள்வாங்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளரை கோரியுள்ளேன்.

ஒருவைத்தியர்,நான்கு மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட இந்தப் பிரிவில் வைத்தியசாலைக்கட்டிடத்திற்கென 15மில்லியனும் ,வைத்திய தங்குமிடத்திற்கென 50லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பவைத்தியசாலை பூரணமாக்கப்படும்.
மாணவர்கள,; பயணிகளின் வசதிகருதி 5லட்சம் ரூபாசெலவில் பஸ் தரிப்பிடம் ஒன்றும் அமைத்துதர வேண்டுமென்ற உங்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்.

அத்துடன் இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள குளத்தை புனரமைப்பதற்கான மதிப்பீட்டை தந்துதவுமாறு நீர்ப்பாசனதிணைக்கள உதவி ஆணையாளரிடம் கேட்டிருக்கின்றேன்.

இந்தக்கிராமத்தில் உற்பத்தியாகின்ற விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்காகவும் வெளியில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்காகவும் ஒழுங்கான அமைப்பு இல்லாத குறை நிவர்த்தி செய்யப்படும்.

அது தொடர்பில் உங்கள் ஆலோசனைகளையும்,திட்டங்களையும் எதிர்பார்க்கின்றோம். கிராமமக்களின் ஒத்துழைப்புடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பழரச உற்பத்திதொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்கு வகை செய்யப்படும்.
இளைஞர்களினதும்,மாணவர்களினதும் உடற் பயிற்சி தேவைகளைக்கருத்திற் கொண்டு விளையாட்டு மைதானத்தை துப்பரவு செய்து அங்கே அரங்கு ஒன்று அமைத்துதர நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


'யுத்தம் முடிவடைந்தாலும் அதன் பாதிப்பின் வடுக்கள் தொடர்கின்றன'-அமைச்சர் றிஸாட் Reviewed by NEWMANNAR on July 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.