அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சுப் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்குங்கள் - அவரது கட்சியான ரெலோ அதிரடி தீர்மானம்.....


கட்சியின் கூட்டுப்பொறுப்பை மீறி செயற்பட்ட வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறு வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் குறித்த அமைச்சருடைய  கட்சியான தமிழீழ விடுதலை இயக் கத்தினால் (ரெலோ) நேற்றையதினம் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைமைக் குழுக் கூட்டம் நேற்றையதினம் வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது.
அக்கலந்துரையாடலின் போதே மேற் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக்கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து அண்மையில் நம்பிக்கையில்லா பிரேரணையை வட மாகாண ஆளுநரிடம் கொடுத்திருந்தனர்.

குறித்த நடவடிக்கையில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன்  பங்கு கொண்டிருந்த விடயம் அவர் உறுப்பினராக காணப் படும் ரெலோ கட்சியின் கட்டுக்கோப்பு மற்றும் தீர்மானத்துக்கு அப்பால் சென்று குறித்த விடயத்தை மேற்கொண்டுள்ளாரென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே கட்சியின் கட்டுக் கோப்பை மீறி அவர் செயற்பட்ட காரணத்தால் அவருக்கு எதிராக கட்சியால் ஒழுக் காற்று விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், குறித்த செயற்பாட்டுக்கான நியாயப் பாட்டை விளக்குமாறு கோரி அவருக்கு கடிதம் அனுப்புவதற்கு மேற்படி கலந்துரையாடலில் தீர்மானிக் கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அமைச்சரை வடக்கு மாகாண அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறு கோரி வடக்கு முதல்வருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும், அவருக்கு பதிலாக கட்சியால் சிபாரிசு செய்யப்படும் நபருக்கு அப்பதவியை வழங்கவும் கோரி கடிதம் அனுப்பவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் குழப்ப நிலை காரணமாக தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களை அழைத்து குறித்த விடயம் தொடர்பாக உறுதியான நிலைப் பாட்டினை கேட்டறிவதற்கு மிக விரைவில் கலந்துர யாடல் ஒன்று ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் மேற்குறித்த தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ரெலோ கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டி ருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சுப் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்குங்கள் - அவரது கட்சியான ரெலோ அதிரடி தீர்மானம்..... Reviewed by Author on July 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.