அண்மைய செய்திகள்

recent
-

சிங்கள மற்றும் முஸ்ஸீம் மக்களுக்கு கல் வீடு- தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த பொருத்து வீடுகள் -சாள்ஸ் -எம்.பி

வடக்கில் தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் பொருத்து வீடுகளை வழங்குகின்றீர்கள், அவர்கள் இந்த நாட்டின் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லையா? என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மக்களுக்கு வழங்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பிலான ஊடக சந்திப்பொன்று இன்று மன்னாரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சந்திப்பில் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்,

வடக்கு மக்களினுடைய மீள் குடியேற்றம் தொடர்பாக பல சர்ச்சைகள் இடம் பெற்று வருகின்றன. மீள்குடியேற்றத்திற்கு வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டத்தில் 6,000 வீடுகள் பொருத்து வீடுகளாக அமைத்துக் கொடுப்பதற்கு மீள் குடியேற்ற அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் பல இடங்களில் வீட்டுத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. தென் பகுதியில் மக்களுக்கு வழங்கப்படுகின்ற வீடுகள் நிரந்தர கல் வீடுகளாகக் காணப்படுகின்றன.

வடக்கில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படுகின்ற வீடுகளும் கல் வீடுகளாகவே காணப்படுகின்றன.

அப்படியான சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த பொருத்து வீடுகளை வழங்குகின்றீர்கள்? அவர்கள் இந்த நாட்டின் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லையா?

அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சர் றிஸாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் குறித்த பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம், தமிழ் மக்களுக்கு வடக்கில் வழங்கப்படுகின்ற இந்த பொருத்து வீடுகளை ஏன் நீங்கள் சிங்கள மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ வழங்குவதற்கு முயற்சி செய்யவில்லை என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றேன்.

இவ்வாறான நடவடிக்கைகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இப்படியான பாரபட்ச அபிவிருத்திகள் எங்களுடைய மக்களுக்கு வேதனையளிக்கின்றது.

கட்சி ரீதியாக நீங்கள் தெரிவு செய்து மக்களுக்கு வீடுகள் கொடுத்தாலும், அவர்கள் உங்களுடைய கட்சியில் இணைந்தாலும் அந்த மக்கள் எங்களுடைய மக்கள். எங்களுடைய மக்கள் நிரந்தரமாக கௌரவமாக வாழ்வதற்குரிய வழி வகைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

குறிப்பாக நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் இத்திட்டத்தை மீள் பரிசீலினை செய்து எங்களுடைய மக்களுக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள மற்றும் முஸ்ஸீம் மக்களுக்கு கல் வீடு- தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த பொருத்து வீடுகள் -சாள்ஸ் -எம்.பி Reviewed by NEWMANNAR on July 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.