அண்மைய செய்திகள்

recent
-

பேசாலைக்காட்டாஸ்பத்திரி பேரூந்துதரிப்பிடம் புனரமைக்கப்படுமா….(Photos)


மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரிக்கிராமத்தில் குடியிருக்கும்; மக்களின் பேரூந்துதரிப்பிடமாக உள்ளது தான் இந்த தரிப்பிடம் ஆம் இந்த தரிப்பிடம் தலைமன்னார் பிரதான வீதியில் காட்டாஸ்பத்திரிக்கிராமத்தில் வீதியுடன் அண்டியே உள்ளது ஆனாலும் இது மக்களின் பாவனைக்கு உகந்ததாக இல்லை காரணம்….
  • பேரூந்துதரிப்பிடம் துப்பரவின்மை(கழுதை-மாடு-பறவைகள் நாய்களின் கழிவுகள்)
  • குப்பைகள் நிறைந்தும் உள்ளது
  • விலங்குகளின் வாழ்விடமாகவுள்ளது(கழுதை-மாடு-பூனை-நாய் போன்றவை)
  • இந்ததரிப்பிடத்தில் நீண்ட நாட்களாக குடிகொண்டிருக்கும் யாசகர் (பிச்சைக்காரர்)ஒருவர் மிகவும் அழுக்குபடிந்த நிலையில் தங்கியுள்ளார் அவருக்கு அருகில் நாய்களும் பூனைகளும் கிடக்கின்றன.(இவர் ஏதோவொரு தேவைக்காக இந்தக்கோலத்தில் இருப்பதாக மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்)

இதனால் பெண்களும் சிறுவர்களும் மாணவர்களும் ஏன் சில ஆண்களும் பயத்தில் அந்த தரிப்பிடத்திற்குள் செல்வதில்லை வெயிலோ மழையோ வெளியில் தான் நிக்கின்றனர்.

  • இன்னொரு பிரச்சினையும் உள்ளது சமுர்த்தி அலுவலகத்தில் பணிபுரிகின்றவர்கள் தங்களது மோட்டார் வாகனங்களையும் நிழல் கருதி பேரூந்து தரிப்பிடத்துக்குள் தான் விட்டுச்செல்கின்றனர்(இதற்குள் மோட்டார் வாகனங்களை விடவேண்டாம் என கிராம இளைஞர்களால் சுவரொட்டி ஒட்டவும் சில சமுர்த்தி அலுவலகர்கள் அதனை கிழித்தெறிந்ததோடு பழையபடி தங்களது மோட்டார்வாகனங்களை அந்த பேரூந்துதரிப்பிடத்திற்குள் தான் நிற்பாட்டுகின்றார்கள்)

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் இந்த பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில்  இரண்டு அரச அலுவலகங்கள் உள்ளது பிரதேசசபை பேசாலை மன்னார் சமுர்த்தி அலுவலகம் பேசாலை மன்னார் இங்கு பணியாற்றுகின்றவர்களும் இந்த பேரூந்துக்கருகில் நின்று தான் பயணத்தினை மேற்கொள்ளுகின்றனர்.

கிராமத்தின் துப்பரவினையும் அழகையும் சுத்தத்தினையும் பேணவேண்டிய பிரதேச சபைக்கு முன்னாள் இப்படியொரு அசிங்கம் உள்ளது அதைக்கடந்து தானே வேலைக்குச்செல்கின்றார்கள்.

எமது அன்றாடத்தேவையிலான இந்த பேரூந்து தரிப்பிடத்தினை துப்பரவாக்கி அங்கு குடியிருக்கும் யாசகரையும் இடமாற்றி நல்ல முறையில் பேரூந்துதரிப்பிடத்தினை பாவிக்கும் வகையில் புனரமைத்து தருமாறு பிரதேச சபை பேசாலை அதிகாரிகளையும் ஏனைய சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் மிகவும் தயவாக வேண்டிக்கேட்டுக்கொள்கின்றோம்.

-மன்னார்விழி-


குறிப்பு-காட்டாஸ்பத்திரிக்கிராமத்தின் (மயானம்-சேமக்காலை) செல்லும் பாதையினை கிறவல் கொண்டு செப்பணிட்டுத்தருமாறு மக்கள் கேட்டுக்கொண்டதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.

 பேசாலை காட்டாஸ்பத்திரி பொதுமயானத்திற்கு பாதை வருமா…….???
http://www.newmannar.lk/2017/05/kaaddaspaththiri.html














பேசாலைக்காட்டாஸ்பத்திரி பேரூந்துதரிப்பிடம் புனரமைக்கப்படுமா….(Photos) Reviewed by Author on July 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.