அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினருக்கே அமைச்சு வழங்கப்பட வேண்டும்- சாள்ஸ் எம்.பி

வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சில் மாற்றம் ஏற்படும் போது குறித்த அமைச்சினை மீண்டும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

-மன்னாரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று புதன் கிழமை (19) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,,

வடமாகாண சபையில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த குழப்ப நிலையினையடுத்து இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் மீன்பிடி போக்குவரத்து அமைச்சரை மாற்றவுள்ளதாக அறிகின்றேன்.

அந்த அமைச்சுக்கு பதிலாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு வழங்க தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) சிபாரிசு செய்துள்ளதாகவும் அறிகின்றேன்.

தற்போதைய மீன் பிடி போக்குவரத்து அமைச்சரை மாற்றுவதற்கு எவ்வித அபிப்பிராயங்களும் நான் கூறவில்லை.

ஆனால் மன்னார் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பும்,எங்களுடைய எதிர்பார்ப்பும் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுகின்ற மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அமைச்சை மீளப்பெறுகின்ற போது அதே அமைச்சை மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற மாகாண சபை உறுப்பினருக்கு வழங்க வேண்டும் என்பது மக்கள் சார்ந்த கோரிக்கையாகும்.

குறித்த அமைச்சு மாற்றம் ஏற்படும் போது மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினருக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு இன்று புதன் கிழமை(19) காலை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.

அதன் பிரதிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சில் மாற்றம் ஏற்படும் போது குறித்த அமைச்சினை மீண்டும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும்.

அதற்கு உரிய நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு அமைச்சினை வழங்க வேண்டும் என்று மன்னார் மாவட்ட மக்கள் சார்பாக நான் அந்த கோரிக்கையை விடுத்துள்ளேன்.

மேலும் இனி வரும் காலங்களில் முதலமைச்சர் உள்ளடங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் முதலமைச்சர் ஒரு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டால்,ஏனைய 4 மாவட்டங்களுக்கும் ஏனைய 4 அமைச்சுக்களும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பொதுவான மக்களின் கருத்தையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

அந்த வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலேசித்து எதிர்காலத்தில் அந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

-எனவே வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சராக டெனிஸ்வரன் இருக்கின்றார். அவரிடம் இருந்து அமைச்சு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டால் குறித்த அமைச்சு மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட மக்கள் சார்பாக நான் கோரிக்கையினை விடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.


மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினருக்கே அமைச்சு வழங்கப்பட வேண்டும்- சாள்ஸ் எம்.பி Reviewed by NEWMANNAR on July 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.